பெங்களூர் டு கோத்தகிரி

கதவை திறந்தவுடன் பனிக்காற்று முகத்தில் தீண்டிச்சென்று என்னை உறையச்செய்தது, கம்பளியை எடுத்து உடம்பில் போர்த்திக்கொண்டு அறையை விட்டு வெளியே வந்தேன். மாடியில் இருந்து அந்த தெருவை பார்த்துக்கொண்டே இருந்தேன் கனத்த அமைதியில் பெங்களுரே உறங்கிக்கொண்டு இருந்தது, கிழே இறங்கி நடக்கத் தொடங்கினேன்.

 

தெருவிளக்குகளை தவிர தெருவில் யாருமில்லை நடுங்கும் குளிரில்  நடைபயணம் தொடர்ந்தது ஆங்காங்கே இருக்கின்ற குப்பை தொட்டியில் நாய்கள் குப்பைகளை கிளறிக்கொண்டு இருந்தது. அதைப்பார்தப்படி கைகளை  கட்டிகொண்டே நடந்து சென்றேன், கொஞ்சம் தூரம் சென்றதும் சட்டென்று ஒரு குரல்i-was-assaulted-on-the-street-but-i-still-walk-home-alone-at-night-408-body-image-1428519885

தம்பி

 

திரும்பிப்பார்த்தேன்……..வயதான பாட்டி என்னை அழைத்தார், அவரை ஒரு மாதத்திற்கு முன்பு சந்தித்தேன் கோத்தகிரியில், தேயிலை தோட்டத்தில் சந்தித்த அனுபவம், அவர் அருகில் சென்றேன்.

 

பாட்டி எப்படி இருக்கீங்க என்று வினவினேன்

 

நல்லா இருக்கேன் தம்பி நீங்க…….

 

நல்லா இருக்கேன் பாட்டி……..

 

அவர் அருகில் சென்றேன் இந்தா தம்பி டீ குடிங்க என்று பாலில்லாத தேநீரை கோப்பையில் ஊற்றி என்னிடம் கொடுத்தார், அவரிடம் இருந்த பெண் என்னிடம் ஒரு பழத்தை கொடுத்தார் மலையில் காயும் பழம் அது. அதை சாப்பிட்டுக்கொண்டே அவர்களிடம் கதைத்க்க தொடங்கினேன்.

20800344_1557927240944552_5328731496432591379_n

 

ஊருக்கு போகலியா பாட்டி என்று கேட்டேன், அவரின் கண்கள் கலங்கியது, கலங்கிய குரலில் கூறினார் போகணுமே போகணுமே தம்பி, எப்போ அவங்ககிட்ட பேசனாலும் நாங்க இங்க நல்லாதான் இருக்கோம்ன்னு சொல்லிட்டு இருக்கோம், நாங்க பட்ற கஷ்டத்தை அவங்களிடம் சொல்ல மாட்டோம், எத்தனையோ வருசம் ஆச்சு எங்க சொந்த பந்தங்களை பார்த்து இப்போ போகணும்னா எங்களுக்கு முப்பதாயிரம் பணம் வேணும், இவங்க குடுக்குற கூலிக்கு அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்லை.

 

உங்களுக்கு சொந்தம் இலங்கைல மட்டும்தான் இருக்காங்களா பாட்டி? தமிழ்நாட்ல இருந்தோம் இலங்கைக்கு விரட்னாங்க அப்பறம் எங்க அடுத்த தலைமுறை அங்க வளந்துச்சு உடனே மறுபடியும் அங்க இருந்து எங்கள விரட்னாங்க, மறுபடி சொந்த ஊருக்கு போனோம் நாங்க புதுக்கோட்டை பக்கம், ஒரு தலைமுறை கழிச்சு சொந்தம் வந்து இருக்கே சந்தோஷ பாடுவாங்கன்னு நினைச்சோம் விரட்டி விட்டாங்க, அப்பறம் எங்களுக்கு தெரிஞ்ச தொழில் தேயிலை வேலைதான். அதனால இங்க வந்தோம், இங்கேயும் கஷ்டம்தான் ஆனா இப்போ நல்லா இருக்கோம். இன்னும் கொஞ்சம் கூலி கொடுத்தாங்கன்னா நிம்மதியா இருப்போம்.

20914188_507040282976480_4357858925564751793_n

 

தஸ்தாயெவ்ஸ்கியியோட ஒரு வரி ஞாபகம் வருது பாட்டி நீங்க சொல்ற கதையை கேட்டு “நிராகரிப்பும் கைவிடப்படுதலுமே மனிதனின் ஆறாத துயரங்கள்” எவ்வளவு உண்மையான வார்த்தைகள் பாட்டி. உங்கள இந்த சமூகம், அரசாங்கம் நிராகரிச்சுடுச்சு, கைவிற்றுச்சு  என் காதலும் கைவிட்டு போச்சு ஆனா உங்க வலிய பார்க்கும்போது என்னதுலாம் ஒன்றுமே இல்லை பாட்டி.

 

சூழ்நிலை மாறுனாலும் வலி ஒன்னுதான் தம்பி, அந்த வார்த்தையை சொன்ன மனிதர் யாரு? அவரு ஒரு ரஷ்ய எழுத்தாளர் எல்லா மனிதர்களுக்கும் இருக்க வலிதான் அவரு அத எழுத்துல காட்டி இருப்பாரு.

 

நாங்கள் கதைத்துகொண்டு இருக்கும்போதே அவருடன் வேலை பார்க்கும் பல தொழிலாளர்கள் அங்கே வந்து இருந்தார்கள், என்ன நடந்தாலும் இந்த கஷ்டம் எங்களுக்குள்ளே போகிடனும் தம்பி எங்க புள்ள குட்டிங்க இதுல மாட்டக்கூடாது அதனால்தான் எல்லாத்தையும் பொறுத்துக்கிட்டு வேலை செய்யுறோம்.

 

இன்னைக்கு எல்லாருமே இந்த அரசாங்கம், சமூகத்தால ஏதோ ஒரு வகைல நிராகரிக்கபட்றோம், நாமளும் இந்த உலகமயமாக்கல் என்று கொள்கைள நாடோடிகளா மாறிகிட்டே இருக்கோம் என்றேன் நான், ஆமாம்பா அதிகமா உழைக்குறோம் ஆனா கூலி இல்லை, உழைக்காம இருக்கவங்க அதிகம் பணம் சம்பாதிக்குறாங்க எப்படின்னு மட்டும்தான் தெரில என்று ஒரு தொழிலாளி கூறினார்.

 

 

இப்போலாம் படிச்சாலும் இதே நெலமதான், படிச்ச படிப்புக்கு வேலை இல்லை, கெடச்ச வேலைல சரியான கூலி இல்ல பிரச்சனை வேற எங்கயோ இருக்கு அத தெரிஞ்சுக்க பேசவும் நேரமே இல்லையே. யோசிக்க கூட நேரம் இல்லாம உழச்சுகிட்டு தானே இருக்கோம் என்றார் ஒரு அக்கா.

 

சட்டென்று ஒரு குரல் “அண்ணா” யாரென்று திரும்பி பார்த்தேன்

 

செல்லம் எப்படி இருக்க, நல்லா இருக்கேன் அண்ணா நான் கம்பு சுத்த கத்துக்கொடுத்தேனே மறந்துட்டிங்களா? இல்ல நியாபகம் இருக்கா? என்று அந்த சிறுவன் என்னிடம் கேட்டான். எதையும் மறக்கவில்லை செல்லம் என்றேன். பேசிக்கொண்டு இருக்கும்போதே பல சிறுவர்கள், குழந்கைகள் வந்தார்கள் என்னிடம் கதைத்தார்கள்.

20800093_506195029727672_3877363290363115523_n

குளிர் அதிகமாக இருந்தாலும் அவர்களிடம் கதைத்துக்கொண்டு இருந்த அந்த இரவு அலாதியான உணர்வோடு சென்றது, அதில் ஒரு சிறுவன் என்னை கிழே குனிய சொன்னான் குனிந்தேன் அவனின் உதட்டை வைத்து எனது கண்ணத்தில் முத்தத்தை அழுத்தினான்.

 

அப்போதுதான் நினைவு வந்தது அவர்களிடம் கேட்டேன் ஆமாம் நீங்கள் அனைவரும் கோத்தகிரியில் இருந்து எப்போது பெங்களூர் வந்தீர்கள்? உங்களை தேயிலை தோட்டத்தில் பார்த்துள்ளேன், இதோ இந்த குழந்தைளை அவ்வூர் பள்ளியில் பார்த்துள்ளேன், பெங்களூரில் இரவு நேரத்தில் இங்கே என்ன செய்துகொண்டு இருகின்றீர்கள் என்று வினவினேன்.

 

எல்லோரும் சிரித்தார்கள் பாட்டி சொன்னார் தம்பி பெங்களூர் எங்க இருக்குனே எங்களுக்கு தெரியாது, நீதான் கோத்தகிரிக்கு வந்து இருக்க என்று அவர்சொன்னதும் எனக்கு ஒன்றும் விளங்கவில்லை, தலை சுற்றியது எங்கே இருக்கின்றேன் நமது அறையில் இருந்துதானே வந்தோம் என்று சிந்திதுகொண்டே இருந்தேன்.

 

சட்டேன்று அலைபேசியில் அலாரம் அடிக்க கண் முழித்து பார்த்தேன்…… மணி ஆறு, அலாரத்தை நிறுத்திவிட்டு கதவை திறந்தேன் கதவை திறந்தவுடன் பனிக்காற்று முகத்தில் தீண்டிச்சென்று என்னை உறையச்செய்தது, இப்போது விடிந்து வெண்மேகங்கள் மெதுவாக நகர்ந்துகொண்டு இருக்க மெதுவாக  பெங்களூர் இயங்கிக்கொண்டே இருந்தது அந்த காலை பொழுதில். இரவு கனவில் நடந்த உரையாடலை நினைத்துப்பார்த்தேன் உதட்ரோம் சிறு புன்னகை நான் கோத்தகிரியில் சந்தித்த மனிதர்களை நேற்று கனவில் சந்தித்த மகிழ்ச்சியோடு அலுவலகம் கிளம்ப தயாரானேன், அந்த சிறுவன் நான் கோத்தகிரியில் இருந்து கிளம்பும்போது கொடுத்த முத்தம் இன்னும் எனது கண்ணத்தில் இருந்து காயவில்லை.

 

 

பெங்களூர் இரவுகள்

 

புகைப்படம்: ரகுநாத்

விவாதம்-THE DEBATE-1

The aim of argument, or of discussion, should not be victory, but progress-Joseph Joubert

விவாதம் என்பது கருத்துபரிமாற்றத்தின் வழியே புதிய கருத்துகளை தெரிந்துகொள்ள, மனிதர்களின் மனநிலை உணர, சமூகத்தின் மனசாட்சியை புரிந்துகொள்ள உதவும் ஒரு அற்புதமான கலையாக மட்டுமே நான் பார்கிறேன். அவரவர் கொண்ட கருத்துக்களை வலுகட்டயமாக விவாதத்தில் திணிப்பது விவாதமாக நான் பார்கவில்லை வன்முறையாக மட்டுமே பார்க்கின்றேன், இதில் எந்த அறிவுபரிமாற்றம் நடப்பபதாக தெரியவில்லை தனது அதிகாரத்தை தனது கருத்தியலை நிறுவுவதற்கு செலுத்தும் முயற்சியாகவே கருதுகிறேன். இயக்கத்திற்குள் நடக்கும் விவாதங்கள் அந்த இயக்கத்தின் அடிப்படை இலட்சியத்தை அடைவதற்காக ஜனநாயக வழிகளை நமக்கு காண்பிக்கும் விவாதமாக இருப்பதுதான் ஒரு ஆரோக்யமான விவாதம் என்பது எனது கருத்து. ஒரு கருத்திற்கு மாற்றாக இன்னொரு கருத்தை வைக்கும்போது அது எப்படி தனிமனித தாக்குதல் எனப்படும் என்பதுதான் புரியவில்லை, அதாவது கருத்து ஒரு மனிதரிடம் இருந்து வருகிறது அந்த கருத்திற்கு மாற்றாக ஒன்னொரு கருத்து கூறப்டுகிறது உடனே யாரையும் தனிப்பட்ட முறையில் கூற வேண்டாம் என்ற வாதம் முன்வைக்க படுகின்றது. மாற்றுகருத்தை நான் ஆதரிக்கிறேன் அதனின் வழியேதான் நமது தேடலை விரிவுபடுத்த முடியும் என்று கூறிவிட்டு மாற்று கருத்து கூறினால் தனிமனித தாக்குதல் வேண்டாம் என்ற உபதேசம் மட்டுமே வருகிறது.

சரி தனிமனித தாக்குதல் என்பது என்ன? ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையை, சாதியை, மதத்தை, நிறத்தை, மொழியை, பாலை, வர்க்கத்தை,காதலை, குடும்பத்தை  இழிவுபடுத்தும்படி பேசுவதுதான் தனிமனித தாக்குதல் என்று நான் புரிந்துவைத்துள்ளேன் அதேபோல் அவரின் கருத்துதவறு, நீங்கள் சரியில்லை, உங்களுக்கு இது செய்ய தெரியவில்லை என்று ஒரு நபரின் தனிப்பட்ட எழுத்தை, கருத்தை எதற்கும் லாய்க்கு இல்லை என்று அவமதிப்பது தனிமனித தாக்குதல் என்பது எனது கருத்து. ஆகவே ஒரு கருத்தை ஆதரிக்காமல் அந்த கருத்திற்கு மாற்றுகருத்து வைத்தால் எப்படி அது தனிமனித தாக்குதல் எனப்படும்? கருத்து என்ற பெயரில் மு செய்யும் வேலையை விமர்சனம் செய்வதும், செய்தவர்களின் வேலையை சரியில்லை என்ற தோணியில் வார்த்தைகளை, வாக்கியத்தை பயன்படுத்திவிட்டு நாங்கள் கருத்தைதான் கூறினோம் என்பதும், அதற்கான மறுப்பை தெரிவித்து வேலை செய்தவர்கள் மீது தாக்குதல் வந்ததை கண்டித்து இது ஜனநாயகவழியல்ல என்பதை கூறினால் நீங்கள் தனிமனித தாக்குதல் தொடுக்கின்றீர்கள் என்று நம்மீது அம்புகளை பாய்ச்சுவதும் எப்படி எடுத்துகொள்வது என்பது புரியவில்லை.

நாம் அனைவரும் ஒரே நோக்கதிற்காக வருகின்றோம் நமக்குள் சில சமரசம் செய்துகொள்ளவேண்டும் என்று கூறும் கருத்து நிச்சயமாக ஏற்றுகொள்ளபடவேண்டிய ஒரு விடயம், நிச்சயம் எனக்கு அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் சமரசம் செய்யும் விடயம் இயக்கத்தின் லட்சியத்தை அடைவதற்கான வழியை காட்டுகிறதா என்பதுதான் மிக முக்கியமான கேள்வி. கருத்துகள் யாவும் இயக்கத்தின் லட்சியத்தை அழிக்கும் அபாயம் இருப்பதை கண்டு எப்படி சமரசம் செய்துகொள்வது என்பது தான் முக்கிய கேள்வி.

மாற்றுகருத்தை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை இயக்கத்தில் இருப்பவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்குபதில் மாற்றுகருத்தை வைக்கவேண்டாம் அதனால் அனைவரின் மனது புண்படுகிறது என்று மாற்றுகருத்து வைப்பவர்களை நோக்கி உபதேசம் மட்டுமே வருவது என்ன வைகையான விவாதம் என்று புரியவில்லை. தனிப்பட்ட முறையில் அணைத்து மாற்றுகருத்துக்களும் ஏற்கப்படும், ஆனால் இயக்கம் என்று வரும்போது ஒற்றைகருத்துதான் ஏற்றுக்கொள்ளபடும் என்பதுதான் புரிந்துகொள்ள முடிகிறது, இந்த போக்கு அணைத்து இயக்கங்களுக்கும் பொருந்தும் என்றே கருதுகிறேன். ஒவ்வொரு இயக்கமும் கருத்தியல் வழியேதான் பயணம்செய்துகொண்டு இருகின்றது, விவாதங்கள்தான் இயக்கத்தை உயிரோடு வைத்துகொண்டு இருக்கின்றன.

விவாதம் வெறும் கருத்துபரிமாற்றம், அறிவு பரிமாற்றம் மட்டுமல்ல…விவாதங்கள் வழியே தான் புரட்சிகள் உருவானது, அறிவியல் புரட்சி, சமூக நீதி புரட்சி, அரசியல் புரட்சி என அணைத்து விவாதங்களின் வழியே உருவானது, விவாதத்தை நசுக்குவதினாலேயே ஒடுக்குமுறைக்கு எதிரான புரட்சிகள் ஏற்பட்டுள்ளது—தொடரும்debate-e1442847853181

பூங்கொடியின் பசுமைநடை பயணம்

விடியற்காலை நான்கு மணிக்கு அலாரம் அடித்ததும் சட்டேன்று முழித்துகொண்ட பூங்கொடி அவளின் அம்மாவையும் எழுப்பி விரைவாக கிளம்புங்கள் என்று உத்தரவு கொடுத்து குளிக்கச்சென்றால்….. இந்த ஞாயிறுக்காக இரண்டு வாரங்கள் காத்துகொண்டு இருந்த அவளின் ஆர்வத்தை அவளது அம்மா புரிந்துகொண்டு தனது மகளோடு சேர்ந்து விரைவாக கிளம்பினார்.13603264_1067338730003408_4788806282042238616_o13592378_10206831558243709_7187775879671525297_n

பூங்கொடியின் நினைவுகள் மகிழ்ச்சியில் திளைத்தது இரண்டுமாதம் கழித்து பார்க்கபோகும் தனது நண்பர்கள், அக்காக்கள், அண்ணாக்கள் என்று ஒரு பெரிய கூட்டத்தை பார்க்கப்போகும் மகிழ்ச்சி நீண்ட தொலைவில் பயணம் செய்யபோகும் ஆர்வம் என அவளின் மகிழ்ச்சி ஆர்வதிற்கான காரணங்கள் எல்லைகள் கடந்து சென்றது. ஐந்து மணிக்கு பேருந்து நிலையத்திற்கு வந்து பேருந்துதை பிடித்தால் மட்டுமே ஆறுமணிக்கு தெப்பகுளம் பொய் சேரமுடியும் என்பதை நன்கு உணர்ந்த பூங்கொடி அம்மாவை பேருந்துநிலையத்திற்கு அவசரப்டுதினால். தாயும் மகளும் தெப்பகுளத்திற்கு செல்ல பேருந்து ஏறினார்கள்.

பேருந்தில் ஜன்னலோரம் அமர்ந்துகொண்டாள் பூங்கொடி பேருந்து தெப்பக்குளத்தை நோக்கி விரைந்து, பூங்கொடியின் நினைவுகள் இதுவரை சென்ற நடைகளை நோக்கி பயணித்தது, ஒவ்வொரு நடையிலும் தான் கண்ட மலைகள், வயல்கள், காடுகள் என்று அவளின் நினைவுகள் அதனை சுற்றி சுற்றி வந்து அவளது மகிழ்ச்சியை அதிகரித்தது.  பல நேரங்களில் நடையில் கூறும் வரலாறுகளை கவனிக்க முயற்சி செய்வாள் அவளுக்கு ஒன்றும் விளங்காது அதனால் அவள் அந்த பேச்சுகளை கவனிப்பது இல்லை, அவளின் அம்மா அந்த வரலாற்று தகவல்களை உன்னிப்பாக கவனித்து தனது மகளுக்கு நேரம் கிடைக்கும்போது கதையாக கூறுவார் தனது அம்மாவின் வழியே கேட்கும்போது அவளுக்கு ஒரு கற்பனை வடிவாக அந்த வரலாறுகள் மனதில் பதிந்துபோகும்.13529025_10206831735328136_3806409869970921775_n

பூங்கொடி பெரும்பாலும் நடையை விரும்ப மிக முக்கிய காரணம் மலைகள், வயல்கள், ஆறுகளை பார்பதற்கும், புதிய நண்பர்களை பார்பதற்கும் தான். அவளது தாய் விரும்ப முக்கிய காரணம் எப்போதும் வீடு, கோவில், வேலை என்று சுழற்சியாக சுழன்றுகொண்டு இருக்கும் வட்டத்தில் இருந்து வெளியே வந்து தனது சுதந்திரத்தை அனுபவிப்பதற்கும் தன் மகளுக்கு இப்போதிருந்தே அந்த சுதந்திரத்தை கொடுக்கவும்தான்.

அம்மா எப்போ தெப்பகுளம் போய் சேருவோம் என்று பூங்கொடி கேட்க…..இன்னும் பதினைந்து நிமிடத்தில் நாம் பொய் சேர்ந்து விடுவோம் என்று அவளது அம்மா குறினார்…….இம்முறை பூங்கொடிக்கு அதிக ஆர்வம் வர காரணம் அவள் அம்மா பூங்கொடியிடம் நடையை பற்றி கூறிய விவரம்தான். இரண்டுவாரத்திற்கு முன்பு மாலை நேரம் பள்ளி பாடம் வரலாறு படித்துகொண்டு இருக்கும்போது அவள் அம்மாவிடம்……… இந்த முறை எந்த இடத்திற்கு அம்மா பசுமைநடை குழு அனைவரையும் அழைத்து செல்கிறார்கள் என்று கேட்டபோது……கீழடிக்கு செல்கிறார்கள் என்ற பதில் அம்மாவிடம் இருந்து வந்தது …….அங்கே என்ன இருக்கு மலையா? காடுகளா? என ஆர்வத்தோடு பூங்கொடி மீண்டும் கேள்விகளை கேட்க ……அங்கே அகழ்வாராய்ச்சி செய்றாங்க என்று பதில் கூறினார் அவளின்……அப்படினா என்ன அம்மா? என்று மீண்டும் கேள்வி கேட்டால் …….உனது புத்தகத்தில் சிந்து நதி, ஹரப்பா, மொகஞ்சதாரோ இடமெல்லாம் படிச்சல்ல அதேமாரி இங்கையும் கண்டுபிடிச்சுருகாங்க அத விட மிக பழைய இடமாம்  என்று அம்மாவிடம் இருந்து பதில் வந்தது. அந்த தகவலை அறிந்தவுடன் பூங்கொடிக்கு ஆர்வம் அதிகரித்தது  பாட புத்தகத்தில் படித்த விடயம் போலவே நேரில் நாம் பார்க்கப்போகிறோம் என்ற ஆர்வம் அவளை ஆட்கொண்டது. பேருந்து தெப்பகுளம் சேர்ந்தது, பூங்கொடியும் அவளது அம்மாவும் பசுமை நடை குழு இருக்கும் இடத்திற்கு அருகே சென்றனர்.

13592378_10206831558243709_7187775879671525297_n13516463_10206831732488065_302092341251221293_n

மக்கள் ஆங்காங்கே சிதறி சிதறி இருந்தனர் பூங்கொடி தனது நண்பர்களை, எதிர்பார்த்துக்கொண்டு இருந்தாள், மக்கள் மெதுவாக வர தொடங்கினார்கள் ஒருவரை ஒருவர் நலம் விசாரிக்க தொடங்கினார்கள், பூங்கொடியும் தனக்கு தெரிந்தவர்களை நலம் விசாரித்து கொண்டு இருந்தாள். பூங்கொடியின் அம்மாவின் தோழிகள் வரவே அம்மா அவர்களிடம் மகிழ்ச்சியாக பேச தொடங்கினார், சிறிது நேரம் கழித்து அவளின் நண்பர்கள், தோழிகள் வரவே பூங்கொடியும் அவர்களோடு கலந்துகொண்டாள்.  ஒரு திருவிழாவை போல் காட்சியளித்தது  தெப்பகுளம் பசுமைநடை மக்களின் கூட்டம் அதிகரித்தது பயணத்திற்கு அனைவரும் தயாரானார்கள். பூங்கொடியின் அம்மா தனது தோழிகளுடன் ஒரு வாகனத்தில் ஏறிக்கொள்ள பூங்கொடி தனது தோழியின் வாகனத்தில் ஏறிக்கொண்டால். முதலில் இருச்சகர வாகனங்களை நிறுத்தினார்கள் பின் நான்கு சக்கர வாகனத்தை நிறுத்தினார்கள், கீழடி நோக்கிய பயணம் தொடங்கியது. பூங்கொடிக்கு எல்லையற்ற மகிழ்ச்சி இந்த பயணத்திற்காக ஒவ்வொரு மாதமும் பசுமைநடைக்கு காத்துக்கொண்டு இருப்பாள், இப்படியே இந்த பயணம் நீண்டுகொண்டே சென்றால் மகிழ்ச்சியாக இருக்கும் என்று ஒவ்வொரு நடையின் பயணத்திலும் அவள் நினைப்பதுண்டு. எதற்காக இந்த பயணம் நமக்கு பிடிகின்றது என்று அவளுக்கு தெரியவில்லை அந்த பதிலை அவள் தேடியதில்லை ஆனால் ஒன்று மட்டும் புரிந்தது பயணம் ஏதோ ஒரு மகிழ்ச்சியை தருகிறது என்று அதுவும் கூட்டமாக செய்யும் பயணம் அளவுக்கடந்த மகிழ்ச்சியை தருகின்றது என்பது புரிந்தது. ஒரு பெரும் படை கீழடி நோக்கி நகர்ந்து கொண்டு இருந்தது.13576662_10205272899817097_4718367644658391143_o

பல எதிர்பார்புகள், பல கேள்விகள், பல உணர்வுகள் என்று பூங்கொடியின் மனது மகிழ்ச்சியிலும் ஆர்வத்திலும் தத்தளித்து கொண்டு இருக்க கீழடி வந்து சேர்ந்தது பசுமைநடை. மிக உயர்ந்த தென்னை மரங்களை பிரமாண்டமாக பார்த்துக்கொண்டே பசுமைநடை குழுவுடன் நடந்துகொண்டு இருந்த பூங்கொடி, ஒரு இடத்தில் அனைவரும் அமர முதல் வரிசையில் பொய் அமர்ந்துகொண்டாள் சிறப்பு விருதினர்களாக வந்து இருப்பவர்களின் உறைகளை கேட்க.

13559108_1067401189997162_1012797392660334232_o

கீழடி அகழ்வாராய்ச்சி பற்றி பேச தொடங்கினார்கள் சில விடயம் பூங்கொடி மனதில் நின்றது, பல விடயம் காற்றில் பறந்து போனது ஆனால் ஒன்று மட்டும் அவளுக்கு புரிந்தது இந்த இடம் ஒரு முக்கியமான இடம் இதனின் வரலாறு மிகவும் பழமையானது என்று, அந்த பள்ளங்களை உற்று பார்த்துகொண்டு இருந்த பூங்கொடி அந்த பள்ளங்கள் அனைத்தும் தூரிகை வைத்து தான் பொறுமையாக சுரண்டினார்கள் என்பதை கேட்டபிறகு அவர்களின் உழைப்பை கண்டு வியந்து போனாள். உரை முடிந்து அனைவரும் வேறு ஒரு இடத்திற்கு நகர்ந்து சென்றார்கள் அப்போது பூங்கொடியின் மனது அவர்களின் உரையில் புரிந்துகொண்ட சில விடயங்களை பற்றி அம்மாவிடம் கேள்வி எழுப்பினால்…அம்மா இனிமேல் இந்த தகவல்கள் அனைத்தும் எனது வரலாறு பாட புத்தகத்தில் இடம்பெறுமா? அப்படி வந்தால் அந்த பாடத்தில் நான் நிறையை மதிப்பெண் எடுப்பேன்….அவளின் அம்மா சிரித்துகொண்டே இந்த தகவல்கள் அனைத்தும் பாட புத்தகத்தில் வரவேண்டும் என்றால் அதற்கு நாம் அதிகம் போராட வேண்டும் என்றார்….என்ன போராட்டம் அம்மா என்று பூங்கொடி கேட்க…..நீ வளர வளர அதற்கு பின் இருக்கும் அரசியலை கற்றுகொள்வாய் நாம் இதை பற்றி வீட்டில் அடிக்கடி இனிமேல் விவாதிப்போம் என்று கூறினால். கூட்டம் அடுத்த இடத்தை நோக்கி நகர்ந்தது.

13528136_10205272900177106_5584056510781218581_o

ஒவ்வொரு பள்ளத்தில் இருக்கும் வரலாறை பற்றி வரலாற்றாசிரியர் விளக்கிக்கொண்டே இருக்க பூங்கொடி அதை உன்னிப்பாக கவனித்தால், அம்மக்கள் உபயோகித்த பொருட்கள், வீடு அமைப்பு முறை, கழிவு நீர் மேலாண்மை அனைத்தை பற்றியும் அவர் விளக்கினார் பூங்கொடிக்கு அனைத்து விடயங்களும் மனதில் பதிந்தது. அவளின் மனதிலோ நமது கல்விமுறையும் இப்படியே இருந்தால் நன்றாக இருக்குமே இப்பொது எல்லா விடயங்களும் மனதில் பதிந்து விட்டன. இதை அனைத்தையும் நான்கு சுவற்றிக்குள் வைத்து ஒரு காகிதத்தில் இருக்கும் புகைப்படங்களை பார்த்து ஆசிரியர் பாடம் நடத்துவது நினைத்தால் மிகவும் கடினமாக இருகின்றது என்று எண்ணினால். இப்படிபட்ட ஒரு திறந்த வகுப்பறை எப்போது நமக்கு வரும் என்ற கேள்வி அவளிடம் ஆழமாக வேரூன்றி இருந்தது   பசுமைநடை வந்ததில் இருந்து.

13483121_1067339716669976_6288713615309587709_o

பின்பு அனைவரும் ஒரு இடத்தில் அமர்ந்தார்கள் அகழ்வாராய்ச்சி பணியில் இருந்த ஊழியர்கள் அவர்களுக்கு அகழ்வாய்வில் கிடைத்த அம்மக்கள் உபயோகித்த அணிகலன்கள், கருவிகள் போன்றவற்றை பசுமைநடை குழுவிற்கு விளக்கிக்கொண்டு இருந்தனர். அவர்கள் உரை முடிந்தபின்பு அனைவர்க்கும் ஆயிஷா என்ற புத்தகம் பசுமை நடைக்கு வந்த மக்கள் அனைவர்க்கும் விநியோகிக்கப்பட்டது, அது என்ன புத்தகம் அம்மா என்று பூங்கொடி அம்மாவிடம் கேட்க உன்னை போல் ஒரு பள்ளி சிறுமியின் கதை அணைத்து பெற்றோர்களும், ஆசிரியர்களும் படிக்கவேண்டிய புத்தகம் இது என்று கூறினார். சரி அம்மா இந்த கதையை வீட்டில் எனக்கு கூறுங்கள் என்று கூறிவிட்டு காலை உணவை முடித்துவிட்டு அந்த அகழ்வாராய்ச்சி பள்ளங்கள் அருகே சென்றால் பூங்கொடி.

13606433_10206831726807923_5897864039060033187_n

பூங்கொடி ஒரு ஓட்டை எடுத்து பார்த்துக்கொண்டே இருந்தால் அந்த அமைதியான சூழலில், காற்றின் சப்தமும் பறவைகளின் சப்தமும் கேட்டுகொண்டு இருக்க  அந்த சிறிய ஓடு அவளுக்கு ஏதோ ஒன்றை சொல்ல முயற்சிப்பது போல் அவளுக்கு தெரிந்தது, இதே ஓட்டை இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு நம்மை போன்ற ஒரு பெண் இந்த ஓடுகளை வைத்து விளையாடிக்கொண்டு இருந்திருப்பாள் இப்பொது இவ்வளவு ஆண்டுகள் கழித்து இந்த ஓடு எனது கையில் கிடைத்துள்ளது. அந்த பெண் எப்படி இருந்திருப்பாள் என்ன உடை அணிதிருப்பாள், என்னை போல் எட்டாம் வகுப்பு படித்துகொண்டு இருந்திருப்பாலா, அந்த காலத்தில் கல்வி முறை எப்படி இருந்திருக்கும்? அவள் இந்த ஓடு பல வருடங்கள் கழித்து யாரிடமாவது கிடைத்திருக்கும் என நினைத்திருப்பாளோ? என கேள்விகள் அவள் மனதில்   எழத்தொடங்கின…..பூங்கொடி……என்ற சப்தம் கேட்க உடனே நினைவுகள் நொடிநேரத்தில் பல வருடங்கள் கடந்து இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தது. அவளின் அம்மா அவளை அழைத்தாள் அந்த இடத்தை விட்டு கிளம்புவதற்கான நேரம் வந்து விடத்தை அறிந்த பூங்கொடி சிதறிக்கிடந்த ஒரு ஓட்டை எடுத்துக்கொண்டு சென்றால்.   பல சிறுவர்கள் சிறுமிகள் தண்ணீரிலும், மணலிலும் சுதந்திரமாக  விளையாடிக்கொண்டு இருந்தார்கள் அவர்களை ரசித்துகொண்டே அந்த இடத்தை விட்டு அம்மாவுடன் நகர்ந்தாள் பூங்கொடி பல நினைவுகளுடன், தகவல்களுடன்.

13568979_1067403543330260_7592559849729172394_o

ஒவ்வொரு நடையிலும் பூங்கொடி பசுமைநடைக்கு வருகிறாள் தனது அம்மாவுடன், பல குழந்தைகளின் வழியே அவளை பார்க்கலாம். பெண்களின் முன்னேற்றத்தை வைத்து தான் ஒரு சமூகத்தின் வளர்ச்சியை கணக்கிடுவேன் என்ற அம்பேத்கரின் வார்த்தைகள் எவ்வளவு உண்மை அடைங்கியது. பெண்கள், குழந்தைகள் ஒரு சமூக இயக்கத்திற்கு தொடர்ந்து வரவைக்கும் பணியை பசுமை நடை சாத்திய படுத்திக்கொண்டே இருகின்றது. பூங்கோடிகளின் உணர்வுகளையும், ஆர்வங்களையும், அவளின் தாய் வழியாக அவள் கற்றுகொள்ளும் அரசியல், சமூக விழிபுனர்வுகளும் தொடர்ந்து ஊக்குவிக்கும் பொறுப்பும், அந்த வாய்ப்புகளை ஏற்படுத்தும் பொறுப்பு அனைவருக்கும் உள்ளது.

I measure the progress of a community by the degree of progress which women have achieved-Dr. B.R. Ambedkar

13567215_10206831736328161_8785141934023722146_n

 

P.C: பாடுவாசி ரகுநாத் மற்றும் மாரியப்பன் கோவிந்தன்

நான் கண்ட அறிவியல் அறிஞர்

“இதுவரை எனக்கு பிடிக்காத பாடம் அந்த ஆசிரியர் அந்த பாடத்தை எடுத்தவுடன் மிகவும் பிடித்துப்போனது” இந்த அனுபவம் நம் அனைவரின் வாழ்வில் நிச்சயமாக நடந்திருக்கும் அப்படி ஒரு நிகழ்வு சிலர் பள்ளி, கல்லூரி அனுபவத்தில் இல்லாமலே இருந்திருக்கும். இந்த அனுபவம் அனைத்திற்கும் காரணம் ஆசிரியர்தான் மாணவ, மாணவிகளுக்கு ஒரு பாடத்தின் மேல் ஆர்வம் ஏற்படுத்துவதும் ஆர்வத்தை மழுங்க செய்வதும் ஆசிரியரிடம் தான் உள்ளது. வகுப்பறை பல அற்புதங்களை நடத்தும் என்பதில் மாற்றுகருத்து இல்லை. அறிவியலை பொறுத்தவரை நமது நாட்டில் உள்ள வகுப்பறைகள் நமது மாணவ மாணவிகளை சிந்திக்க  வைக்காமல் மனப்பாடம் செய்ய பழக்க படுத்துகிறது அதனால் அடிப்படை விதிகளை பற்றி தெரியாமல் தொழில்நுட்ப கூலிகளாக அனைவரும் உருவாகப்படுகிறார்கள் என்பதை மறுபதற்கில்லை, அதே வேளையில் தொழில்நுட்ப கூலிகளாக அனைவரும் மாறுவதற்கு இது மட்டும்தான் காரணம் என்று சொல்லவில்லை. இது அணைத்து துறைகளிலும் செயல்முறை படுத்தபடுகிறது. இந்த சூழலில் மிக அரிதான சில சமூக ஆர்வம் உள்ள ஆசிரியர்களே மாணவ, மாணவிகளுக்கு பாடம் எடுப்பதை எளிமையாக புரியவைக்க தனது உழைப்பை செலுத்தி நடைமுறை படுத்துகிறார்கள். அப்படிப்பட்ட மனிதர்களில் நான் சந்தித்த மிக முக்கியமான மனிதர் அழகர்சாமி அய்யா

ஒரு  வருடத்திற்கு முன் மதுரையில் ஒரு மருத்துவமனையில் அழகர்சாமி அய்யாவை பற்றி பலரின் சொல்லாடல் வழியாக அறிமுகம் கிடைத்தது. “இந்த நிலைமையில் நாளைய மறுநாள் டெல்லியில் நடக்கும் தேசிய அறிவியல் போட்டியில் கலந்து கொள்ளும் எனது மாணவனை வரசொல்லுங்கள் என்று சைகையில் கூறுகிறார்” என்று அய்யாவின் மகள் எனக்கு கூறிய வார்த்தைகளின் வழியாக தான் இவரின் அறிமுகம் கிடைத்தது. மாநில அளவில் நடந்த அறிவியல் போட்டியில் தனது மாணவனை வழிநடத்தி வெற்றிபெறசெய்து அடுத்து தேசிய அளவில் நடைபெறும் போட்டிக்கு வழிநடத்த இன்னும் மூன்று நாட்களில் வருகிறேன் என்று தருமபுரியில் இருந்து தனது சொந்த ஊரான மதுரைக்கு வரும்போது நடந்த விபத்தில் மார்பெளும்புகள் உடைந்து நுரையீரலில் குற்றி பலத்த காயத்துடன் ICU வில் இவர் பிழைப்பாரா மாட்டாரா என்ற சூழ்நிலையில்  பேசமுடியாமல் வெறும் செய்கையால் மட்டுமே டெல்லியில் நடக்கும் தேசிய அறிவியல் போட்டியில் கலந்து கொள்ளும் எனது மாணவனை வரசொல்லுங்கள் என்று மற்றவர்களுக்கு புரியவைதுள்ளார். ஒரு மனிதனுக்கு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அறிவியல் கற்று கொடுக்க, வகுப்பு எடுக்க இவ்வளவு ஆர்வமா என்று வியந்தேன் எழுபது வயதில் மிக கடுமையாக பாதிகப்பட்ட விபத்தில்  தனது உடல் பாகங்கள் அசையாத நிலைமையிலும் அவருக்கு இருக்கும் அந்த வேகம், தன்னம்பிக்கை எனக்கு வாழ்வில் பல புரிதல்களை ஏற்படுத்தியது. அவரின் குடும்பத்தில் ஒரு வருடத்திற்கு மேலாக தொடர்பில் உள்ளேன் ஆனால் அவரின் பணி குறித்து இதுநாள்வரை தெரிந்தது இல்லையே என்ற வருத்தமும், இனி எப்போது அவரை பார்க்க போகிறோம் என்ற ஏக்கமும் என்னுள் அதிகரித்தது. அவரின் குடும்ப நபர்களிடம் அவரை பற்றி விசாரித்தேன் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அறிவியலை எளிதாக செயல்வடிவில் புரியவைத்து, அவர்களின் அறிவியல் ஆர்வத்தை அதிகரிப்பதே தனது பணியாக இருபது ஆண்டுகளாக செய்துகொண்டு வருகிறார் என்பதை அறிந்தேன்.

மூன்று மாதம் கழித்து அவர் குணமடைந்து விட்டிற்கு வந்துவிட்டார் என்ற செய்தி அறிந்ததும் மதுரைக்கு செல்வதற்கு எனக்கு இருக்கும் பல காரணங்களில் இதுவும் ஒரு முக்கிய காரணமாக அன்றிலிருந்து உருவானது. தொடர்ந்து மதுரைக்கு செல்லும்போது அவரை சந்தித்து உரையாடும்போது அவரின் அனுபவங்களும், அறிவியல் ஆர்வமும், அறிவியல் வழியான சமூக பார்வையும் எனக்கு  பல ஆழமான புரிதல்களையும்  அனுபவங்களையும் ஏற்படுத்தியது. அழகர்சாமி அய்யா அவர்கள் மும்பை, புனே, மகாராஷ்டிரா என பல மாநிலங்களில் பல தொழில்நுட்ப துறைகளில் பணியாற்றி உள்ளார்.  தனது ஆர்வத்திலும், விடமுயற்சியிலும் புதிதாக வரும் தொழில்நுட்பத்தை கற்றுக்கொள்வார், ஒரு கூலி தொழிலாளியான உங்களுக்கு பொறியாளர் வேலை சரிப்பட்டுவராது என்று புறம் தள்ளிய தனது மேலாளர்களை தனது கடின உழைப்பால் கற்று கொண்ட அறிவியலை வைத்து புறம் தள்ளினார். அறிவியலின் அடிப்படையை செயல் வடிவத்திலும், தத்துவத்திலும் உறுதியாக இவர் இருந்ததே இதற்கு காரணம். அறிவியலின் அடிப்படையிலும், தத்துவத்திலும் (basic law and principle)  அவர் உறுதியாக இருந்ததற்கான காரணம் கற்றல் மீது உள்ள ஆர்வமும், தொடர் புத்தக வாசிப்பும், செயல்முறை அனுபவமும்தான். வாழ்வின் ஒரு கட்டத்தில் தனது சொந்த ஊரான மதுரை பக்கம் இருக்கும் மங்கல்வேயு என்ற கிராமத்திற்கு வந்த இவர் தனது அனுபவத்தை வைத்து தொழில் தொடங்க முடிவெடுத்தபோது அவரது வாழ்வில் சில திருப்பங்கள் ஏற்பட்டது பள்ளி மாணவ, மாணவிகள் அறிவியலை மனப்பாடம் செய்ய பழக்க படுத்தப்படுகிறார்கள் என்பதை உணர்ந்து தனது தொழில் செய்யும் என்னத்தை விடுத்து சில அறிவியல் உபகரங்கங்களை தனி மனிதனாக செய்ய தொடங்கினார்  அந்த (SCIENCE KIT) யில் அறிவியலுக்கு அடிப்படையான அணைத்து தத்துவங்களையும் செயல்முறை விளக்கத்தோடு மாணவ, மாணவிகளுக்கு புரியவைப்பதே அவரது எண்ணம் இதற்கு பல நாட்கள் தனது உடலுழைப்பை செலுத்தி தத்துவங்களை எப்படி எளிமையாக செயல்வடிவத்தில் கொண்டு வருவது என்று நன்றாக சிந்தித்து பல நிதி நெருக்கடி இருந்தபோதும் பல்வேறு இடங்களில் கடன்வாங்கி அதை செய்து முடித்தார். இதை ஒரு பள்ளியில் சென்று கொடுத்ததற்கு அவர்களின் பதில் நீங்கள் எந்த MNC யில் இருந்து வருகிறீர்கள்,  எங்களுக்கு இதெல்லாம் வேண்டாம் பணமாக நன்கொடை தாருங்கள் என்று கேட்டு அவரை புறக்கனித்தார்கள்.

 

அவர் தொடர்ந்து பள்ளிகளில்  ஏறி ஏறி இறங்க பள்ளிகள் அவரை புறம் தள்ளின பின்பு ஒரு நாள் அவரின் குடும்ப நண்பர் ஒருவர் அப்பா  எனது பள்ளிக்கு வந்து எடுங்கள் என்று அவரை அழைக்க அவரது பணி அன்றிலிருந்து தொடங்கியது. இதுவரை தமிழ்நாடில் 11 மாவடங்களில்  3 லட்சம் மாணவர்களுக்கு வகுப்பு எடுத்துள்ளார், 50,000 B.Ed படிக்கும் பயிற்சி ஆசிரியர்களுக்கு அறிவியலை எப்படி செயல் முறையில் மாணவர்களுக்கு எடுப்பது என்பதை பற்றி பயிற்சி எடுத்துள்ளார், BRT(Block Resource Teacher Education) and DIET(District Institute of Educational Training) இல் மாநிலம் முழுவதும் உள்ள அறிவியல் பேராசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி கொடுத்துள்ளார். பல பள்ளிகளில் குழந்தைகளை அறிவியலில் சிறந்தவராக வழிநடத்தி  மாநிலத்தில் முதல் இடத்தை பிடிக்க வைத்துள்ளார்.  தொடர்ந்து மாணவ, மாணவிகளுக்கு அறிவியலை செயல் வடிவிலும், அடிப்படை புரிதலையும் புரிந்து செழுமையாக்க அவர்களுக்கு பயிற்சி கொடுப்பதும், அவர்களுக்கு பாடம் நடத்தும் அறிவியல் ஆசிரியர்கள், பேராசிரியர்களுக்கு பயற்சி கொடுப்பதை தனது பணியாக செய்து கொண்டு இருகின்றார். ஒருமுறை DIET இல் பல பேராசிரியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் இவர் பயிற்சி கொடுத்து முடித்த பின்பு DIET தலைவர் இவரிடம் தனியாக இங்கு இருக்கும் ஆசிரியர்கள் அனைவரும் M.Sc, M. Phil, Ph.d என பெரிய படிப்பு படித்தவர்கள் நீங்களோ எந்த கல்வி தகுதியும் இல்லாதவர் எப்படி இவர்களுக்கு பாடம் எடுக்கலாம் அது தவறு இனி அப்படி எடுக்க கூடாது என்று கூறிவிட்டு சென்றார், அந்த பயிலரங்கு முடியும்போது அணைத்து ஆசிரியர்களும் இவரின் வகுப்பை பற்றி மேடையில் பேச தாங்க முடியாத அந்த இயக்க தலைவர் எல்லாம் இவர் அருமையாக எடுத்தார் என்று கூருகிரீர்கள் அப்போது உங்களுக்கு எதுவும் தெரியாத என்று கடிந்துள்ளார், இப்படி அவர் செல்லும் இடத்தில் உயர் இடத்தில் இருப்பவர்கள் இவரை ஒதுக்கிக்கொண்டுதான் இருன்கின்றார்கள் அதனை கடந்து இவர் தொடர் நடைபோட்டு கொண்டுதான் இருகின்றார். இவரிடம் இருக்கும் தகுதி அறிவு மட்டுமே ஆனால் அவர்கள் எதிர்பார்ப்பது வேறு தகுதி, இப்படி ஒரு ஆசிரியர்கள் இருக்க இவரின் முக்கியதுவத்தை உணர்ந்த ஆசிரியர்கள் கல்வி துறையில் இருப்பதால்தான் இவரால் தொடர்ந்து பயணம் செய்ய முடிந்தது.  பெரும் விபத்திலிருந்து மீண்டு வந்த அவரால் பழைய வாழ்கைக்கு திரும்ப முடியவில்லை ஒரு கையின் செயல்திறன் குறைந்தது அப்பொதும் அவர் தொடர்ந்து மாணவர்களுக்கு அறிவியல் சாதனங்களை செய்துகொண்டே இருப்பதை கண்டு வியப்பளிகின்றது.

பல அறிவியாளர்களின் கதைகளை புத்தகங்கள் வாயிலாகவே படித்துள்ளேன் நான் வாழும் காலத்தில் இப்படி ஒரு அறிவியலாரை  பார்த்ததும், உரையாடியதும், இனி தொடர்ந்து உரையடபோவதும் மகிழ்ச்சியளிகின்றது. ஒவ்வொரு கண்டுபிடிப்புகளும் அதற்கு பின்னால் உள்ள வரலாறும், அதை கண்டுபிடிந்த விஞ்சானிகளின் வாழ்க்கை வரலாறும் வகுப்பில் இவர் எடுப்பதே இவரின் தனித்துவம் அறிவியல் பேராசிரியர்கள் அனைவரும் இவரிடம் கேட்கும் கேள்வி “அய்யா நீங்கள் எந்த புத்தகத்தைதான் படிப்பீர்கள் இவ்வளவு தகவல்களை பெற”. இவர் எப்பொதும் கூறும் வசனம் “வாழ்வில் நாம் எப்போது மாணவனாக இருக்க அப்போதுதான் கற்றுகொண்டே இருக்க முடியும் எனக்கு எல்லாம் தெரியும் என்ற நிலைப்பாடு நமது மனது எப்போது எடுகின்றதோ அதிலிருந்து நமது முன்னேற்றம் நின்றுவிடும்”. அறிவியலின் முக்கியதுவத்தை உணர்தவர்கள் இவரின் சமூக பணியை உணர்வார்கள். இப்போதும் மதுரையில் தனகன்குலத்தில்  அவரின் அறிவியலின் தேடல்கள் புத்தக வாசிப்பின் வழியாக  தொடர்ந்து கொண்டே இருகின்றது. பசுமை நடைக்கு செல்லும் நண்பர்கள் திரு. முத்துகிருஷ்ணன் அய்யா அவர்களின் விட்டிற்கு சென்றால் அழகர்சாமி அய்யாவை பார்க்கலாம், முக்கியமாக குழந்தைகளை அவரிடம் அழைத்து சென்றால் வருங்கால விஞ்சானிகளை நாம் பார்க்கலாம். பசுமைநடை அ. முத்துகிருஷ்ணன் அவர்களின் தந்தை தான் அழகர்சாமி அய்யா, பசுமைநடை எனக்கு கொடுத்த பல அனுபவங்களின் இவரின் அறிமுகம் எனது வாழ்வின் மிக முக்கியமான ஒன்று.

IMG-20160501-WA0017

நான் உங்களுள் ஒருவன்

Joker-Batman-Art-1920x1200

 

நான் மனிதனும் இல்லை, விலங்கும் இல்லை மனிதர்களிடம் வாழ்பவன் நான் யார் ???????என்னை பற்றி கூறுகிறேன்………….. கொலைகளை தொடர்ந்து செய்து எனது ஆதிக்கத்தை நான் நிலைநாட்டிக்கொண்டு இருக்கின்றேன் உங்களால் என்னை ஒன்றும் செய்ய முடியாது……நான் ஒரு நண்பனாக உங்களுக்கு ஒன்றை கற்றுகொடுக்கிறேன் அது என்னவென்றால் சுயமரியதையாக இருக்க கூடாது, மூடநம்பிகையில் எப்பொதும் முழுகி இருக்கவேண்டும், பிரச்சனைகளை மூன்று நாட்களில் மறந்துவிடவேண்டும், எந்த சம்பவம் நடந்தாலும் தனிப்பட்ட மனிதர்களை மட்டும் தான் விமர்சிக்க வேண்டும் தவறியும் அதற்கு பின்னால் இருக்கும் எங்களை சீண்ட கூடாது, இங்கு இருக்கும் ஒவ்வொரு மனிதர்களிடம் நான் இருக்கின்றேன் உங்களால் என்னை ஒன்றும் செய்ய முடியாது, என்னை அழிப்பது ஒரு முட்டாள்தனம் அதனால் தான் என்னை பல பேர் புத்திசாலித்தனமாக அனுசரித்து செல்கிறார்கள். உங்களுக்கு சமூக சேவை செய்ய வேண்டும் என்றால் நான் ஏற்படுத்திய ஏற்ற தாழ்வுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்து ஆறுதல் படுத்திக்கொள்ளுங்கள் இதை அனைத்தும் உருவாக்கி இப்பொது வரை அதை சரியாக பாதுகாத்து வருகின்ற என்னை உங்களால் ஒன்றும் செய்ய முடியாது.

 

இந்தியாவில் உள்ள அணைத்து வீடுகளும் என்னை புனிதமாக பார்த்துகொண்டு இருகின்றது, நான் மக்களின் உயிராக வாழ்ந்து கொண்டு இருக்கின்றேன். எனது கட்டளைப்படித்தான் இங்கு அனைத்தும் நடக்கின்றது. இந்த சமூகத்தில் ஒரு குழந்தை பிறக்கும்போது அடுத்த நொடியே நானும் குழந்தையும் ஒன்றாகி விடுவோம் அது வளர வளர நானும் அதனுள் வளர்ந்துகொண்டே போகிறேன். என்னை எதிர்த்து உங்களால் ஒரு சிறு துரும்பை கூட நகர்த்த முடியாது. என்னை எதிர்த்தால் நீங்கள் தனிமைப்படுத்த படுவீர்கள், ஒடுக்கபடுவீர்கள், கொலை செய்ய படுவீர்கள், எந்த சமூகத்திற்காக நீங்கள் என்னை எதிர்கின்றிர்களோ அதே சமூகம் உங்களை அழித்து விடும். ஒவ்வொரு மக்களிடமும் என்னை நீங்கள் பார்க்கலாம் இங்கு மக்களே நான் தான். பலபேருக்கு நான்தான் அணைத்து பிரச்சனைகளுக்கும் காரணம் என்பது தெரியாது அதற்கு அவர்களுக்கு பகுத்தறிவு வேண்டுமே அதை அவர்களுக்கு வரவிடாமல் பாதுகாப்பதே நான்தான். உங்களது மூடனம்பிகை, பயம், அலட்சியம், வேற்றுமை பார்த்தல் தான் எனது பலம், நான் ஒரு பொருளோ, உயிரினமோ அல்ல அழிப்பதற்கு நான் ஒரு உணர்வு கிருமியும் சில தொலைவுகளுக்கு தான் பரவும் நான் அதைவிட பலம் பொருந்தியவன் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பே எந்த தொழில்நுட்ப சாதனங்கள் இல்லாமல் இந்த நிலப்பரப்பு முழுவதும் மக்களின் மனதில் பரவினேன்.

 

ஒரு வேடிக்கை என்னவென்றால் தொழில்நுட்பம் அதிகரிக்க நான் அழிந்துவிடுவேன் என்று சிலர் கூறுகிறார்கள் அவர்களின் வசனத்தை நான் கண்டு நகைப்பதுண்டு நான் பார்க்காத பரிணாம வளர்ச்சியா? சூழ்நிலைக்கு தங்குதாற்போல் நான் என்னை மாற்றிகொண்டே வருகிறேன் உங்களால் என்னை எதுவும் செய்ய முடியவில்லை. அவர்கள் வெளியில் பல வசனங்கள் பேசினாலும் வீட்டிற்கு வந்தவுடன் என்னை கண்டு நடுங்குவார்கள், என்னை எதிர்க்க அவர்களால் முடியாது அவர்கள் வீட்டில் நான் கம்பீரமாக இருக்கின்றேன். இத்தனை வருடமாக என்னை பாதுகாத்து ஒவ்வொரு தலைமுறைக்கும் கடத்தி என்னை உயிர் வாழவைப்பதே மக்கள் தான் அவர்கள் என்னை எதிர்க்க மாட்டார்கள் நான் அவர்களுக்கு கடவுள். என்னை பாதுகாப்பதற்காகதான் கடவுள் என்ற அதிகாரம் உருவாக்கபட்டது. ஒவ்வொரு ஆண்களிடமும் என்னை நீங்கள் பார்க்கலாம் பெண்கள் எனக்கு அடிமை. அவர்கள் அடிமையாகவே இருக்க அணைத்து வழிகளும் நான் செய்துவிட்டேன் இன்றும் அவர்கள் எனது கட்டுபாட்டில் தான் இருகின்றார்கள் சுதந்திரம் என்றால் என்ன என்று உணர்ந்த பெண்களுக்கு தெரியும் அவர்கள் எனது கட்டுபாட்டில் இருப்பது, அடிமைத்தனத்தை அழகியலாக மாற்றுகிறேன் அதனால் அவர்களுக்கு இன்று அடிமை என்று தெரிய வாய்ப்பு இல்லை அதுதான் எனது வெற்றி.

 

உங்களது பண்பாடுகளில் நான் உள்ளேன், குடும்ப பழக்கத்தில் நான் உள்ளேன், உங்களது வீரத்தில் நான் உள்ளேன் உங்களின் ஒவ்வொரு உணர்விலும் நான் கலந்துள்ளேன் என்னை அழிப்பது எளிதான காரியமா? ஹா ஹா ஹாஒன்று தெரியுமா என்னை எதிர்பதாக பாசாங்கு செய்பவர்களுக்குள் நான் அமைதியாக அமர்ந்துகொண்டு சிரித்துகொண்டு இருப்பேன் அவன் என்னை வார்த்தைகளால் தான் என்னை எதிர்ப்பார்கள் செயலால் அல்ல ஹா ஹா ஹா….என்னை கடவுளாக பார்த்த மனிதன் இறந்துபோகும் பொது நான் அவனுடன் சேர்ந்து அழிவதில்லை அவன் மூலமாக பல மனிதர்களிடம் வெற்றிகரமாக சேர்ந்து இருப்பேன். நான் இந்த காலத்தில் எப்படி உருவாகிறேன் எப்படி அடுத்த தலைமுறைக்கு கடத்த படுகிறேன் என்பதே பல மக்களுக்கு புரியாது பின்பு எப்படி என்னை நீங்கள் அழிக்க முடியும். என்னை யாரேனும் எதிர்த்தால் வாழ்க்கை முழுவதும் போராட வேண்டும் இல்லை சாக வேண்டும் இந்த இரண்டும் தான் இப்பொது நடந்து கொண்டு இருகின்றது

 

ஒரு முட்டாள் என்னை சரியாக புரிந்துகொண்டதாக நினைத்து என்னை ஒரு கதாபாத்திரமாக மாற்றி என்னை பற்றி நானே சொல்வது போல் சித்தரிக்கிறான், என்னை பற்றி புரியவைக்க புதிதாக முயற்சி செய்துகொண்டு இருகின்றான் ஹா ஹா ஹா இதனால் ஒன்றும் ஆகப்போவது இல்லை இதை படிப்பவர்களிடம் நான் இருப்பேன் இந்த எழுத்தின் அர்த்தம் அவர்களுக்கு புரியாது. என்னை பற்றி புரிந்து கொண்டவர்களுக்கு மட்டுமே இந்த எழுத்தின் அர்த்தம் புரியும். என்னை பற்றி புரிந்துகொள்ளாதவர்கள் எனது நண்பர்கள் புரிந்துகொண்டவர்கள் எனது எதிரிகள். என்னை எதிர்பவர்களுக்கு வாழ்க்கை முழுவதும் போர்க்களம்தான் அதனால் தான் சிலர் என்னை பற்றி புரிந்துகொள்ளாதவர்கள் போல் நடித்து எனக்கு நண்பர்களாக வாழ்ந்து கொண்டு இருகிறார்கள் அவர்கள் போர்களத்தை விரும்பவில்லை……………………….எனது பெயர் சாதி………………………………….பிறப்பிடம் இந்து மதம்……………….

7020233-joker

 

 

 

 

 

 

 

 

 

 

மரணத்தின் பிடியில் தாண்டிக்குடி

PicsArt_1430122296248

மனிதனின் உணர்வுகள் தன் கண்களால் காணும் ஒவ்வொரு காட்சியை பொருத்தது மட்டுமல்ல வாழ்வு முழுவதும் இந்த சமூகத்தை அவன்  எப்படி புரிந்துகொண்டுள்ளான் என்பதை பொறுத்ததே, அதேபோல் தான் சமூகமும் மனிதனுக்கு என்ன கற்று கொடுத்தது என்பதும் ஒரு நாணயத்தில் இரு துருவம் போல் தான் இவை இரண்டும். காடுகளை, கிராமங்களை, மலைகளை பார்க்கும் போது மனிதனுக்குள் வருகின்ற உணர்வு சமூகத்தை அவன் எப்படி பார்க்கிறான் சமூகம் அவனுக்கு என்ன கற்றுகொடுத்தது என்பதை பொறுத்ததே. பசுமைநடை பயணம் ஒவ்வொன்றும் ஒருவிதமான உணர்வுகளை ஏற்படுத்தியது அந்த உணர்வை பொறுத்துதான் அனுபவமும் புரிதலும் உண்டானது, எனது பார்வையில் பசுமைநடை தாண்டிக்குடி பயணத்தில் ஏற்பட்ட அனுபவங்களை பகிர்ந்துகொள்கிறேன்.

PicsArt_1430122830728PicsArt_1430122665597

நகர மக்களுக்கு கிராமம், காடு, மலைகள் என்றால் மனதில் உதிக்கும் உணர்வு அழகும் அமைதியும் மட்டும்தான். தனது இயந்திர வாழ்கையில் இருந்து சற்று விலக இந்த இரண்டும் அவசியம், இந்த இரண்டையும் தாண்டி மக்கள் சிந்திக்க வாய்ப்பு குறைவே. இதையும் தாண்டி நமது சிந்தனைகளை அதிகமாக இழுத்து செல்ல பசுமை நடை பயணம் உதவுகிறது அணைத்து இடத்திற்கு பின்னால் உள்ள வரலாறு மக்களின் வாழ்கை முறை பற்றி அறிந்து கொள்ள பசுமை நடை உதவுகிறது.  கொடைகாணல் என்றால் நகர மக்களின் மனதில் இந்த சமூகம் கற்றுகொடுத்தது அது ஒரு சுற்றுலா தளம் அழகிய பிரமாண்ட மலை தொடர்கள் உள்ள இயற்கையான இடம் என்றுதான். அதையும் தாண்டி மலை கிராமங்களில் வாழும் மக்களின் வாழ்கை, பண்பாடு, வரலாறு போன்ற எதுவும் மக்களுக்கு இந்த சமூகம் தெரியபடுத்தவில்லை. சமூகத்தில் ஒரு பகுதியாக உள்ள பசுமைநடை இந்த பணியை செய்வது பாராட்டுக்குரியது.

PicsArt_1430123185830 PicsArt_1430123390458

கொடைகாணல் மலை முழுவதும் உள்ள வரலாற்று சின்னங்களான கர்த்திட்டைகளை காப்பதற்கு பசுமைநடை குழு எடுத்த முயற்சி வரலாற்று கண்காட்சி அமைப்பது. இந்த கண்காட்சி வழியாக உலகிற்கு இந்த வரலாற்றை தெரியப்படுத்தும் முயற்சிதான் இது, கலைகளுக்கு பசுமை நடையில் பஞ்சமே இல்லை எழுத்து, ஓவியம், புகைப்படம் என அணைத்து கலைஞ்சர்களின் சங்கமம் தான் பசுமைநடை. இந்த கண்காட்சியை அனைவரும் தங்களின் கலைத்திறமையை பயன்படுத்தி உலகிற்கு சமூக ஊடகங்கள் வழியாக  தெரியப்படுத்துவார்கள். வரலாற்று சின்னங்களை பாதுகாப்பதே அந்த  கிராமத்தையும் அங்கு வாழும் மக்களையும் பாதுகாக்கத்தான், அரசாங்கம் நடத்தும் அட்டூழியங்களை எதிர்த்து தொடர்ந்து போரடிகொண்டிருகின்ற மக்களுக்கு இந்த வரலாற்று கண்காட்சி கூடுதல் பலம் சேர்க்கும். அரசாங்கம் அங்கு என்ன செய்துகொண்டு இருகின்றது? எதனால் மக்கள் போராடிக்கொண்டு இருகிறார்கள்? பார்போம்.

PicsArt_1430123607874 PicsArt_1430123824713

நகரங்கள் அதிகமாக உருவாகின்றது என்றால் தொழில்துறை அதிகமாக வளர்கின்றது என்பதை புரிந்துகொள்ளலாம். அணைத்து வளர்சிக்கும் மூலதனம் காடுகள், மலைகள், கிராமங்கள் தான், நகரங்கள் அதிகம் பெருக இவை மூன்றும் அதிகமாக அழியும் அதை நம்பி வாழும் மக்களும் அழிக்கப்படுவார்கள் இது உலகளவில் உள்ள உலகமயமாக்களின் சூதாட்டம். இந்த சூதாட்டத்தில் அந்த மூன்று இடங்களும் அங்கு வாழும் மக்களும்  பந்தய பொருள் நாம் அனைவரும் பகடைகள், விளையாடுபவர்கள் நம் கண்களுக்கு தெரியாதவர்கள். இந்த ஆட்டத்தில் எந்த கிராமமும் மலைகளும் காடுகளும் தப்பியதில்லை தாண்டிக்குடி மட்டும் தப்புமா என்ன? இந்த விளையாட்டு உலகில் எல்லா இடங்களிலும் விளையாட படுகிறது விளையாட்டிற்கு பாதுகாவலர்கள் அந்தந்த நாட்டு அரசாங்கமே. இந்தியாவில் மேற்கு தொடர்ச்சி மலையில் அவர்கள் விளையாடும் விளையாட்டிற்கு உதவுவது அரசாங்கம் தான். தன் வசதிகேற்றாற்போல் அரசியல் வாதிகள் சட்டத்தை மாற்றுகிறார்கள் அரசாங்க அதிகாரிகளை கையில் வைத்துகொண்டு.

PicsArt_1430123925236 PicsArt_1430123075774

சட்டங்கள் ஆயுதமாக மாறி அங்கு வாழும் மக்களையும் காடுகளையும் அழிகின்றன. அங்கு வாழும் மக்களை அழிக்க அரசாங்கம் பிறப்பித்த புதிய திட்டம் வனவிலங்கு சரணாலயம். வனவிலங்குகள் சுதந்திரமாக சுற்றி திரியும் வனங்களை சரணாலயமாக மாற்றுவது வனங்களை அழிக்க தடையாக இருக்கும் மக்களை அங்கிருந்து விரட்டதான் அதற்கு அவர்கள் பயன்படுத்தும் ஆயுதம் தான் இந்த சட்டம். வெள்ளையர்கள் ஆட்சி காலத்தில் நடந்த சுரண்டலில் காடுகள் தப்பியது, இன்றைய ஆட்சி சுரண்டலில் காடுகள் அழிகின்றது அதனை சார்ந்த மக்களும் அழிகின்றனர். அதிக லாபம் தரகூடிய பழங்களை விலைவித்தவர்கள் இன்று சட்டத்தின் மிரட்டலால் காய்கறிகளை விளைவிக்கும் படி நசுக்கபடுகிறார்கள், காட்டெருமைகளை விட்டு விவசாய நிலங்களை நாசம் செய்வது, விவசாயத்தை பற்றி தெரியாதவர்கள் விவசாயம் செய்ய பல நிபந்தனைகள் போடுவது, காட்டிற்குள் செல்ல நேரத்தை முடிவு செய்வது என பல அட்டூழியங்கள் இந்த அரசாங்கம் செய்து கொண்டு இருகின்றது சனிக்கிழமை இரவு தாண்டிக்குடி கிராம மக்கள் தங்கள் கிராமத்தில் நடக்கும் கொடுமைகளை பகிர்ந்துகொண்ட போது மனதிற்கு தோன்றிய விடயம் மக்களை அவர்களின் சொந்த இடத்தில் இருந்து அகற்ற வேண்டும் என்றால் சட்டங்களை ஆயுதமாக பயன்படுத்துவார்கள், அதாவது அடிப்படை வாழ்வாதாரங்கள் பாதிகப்படும் வகையில் சட்டங்களை மாற்றுவார்கள், பின் அந்த சட்டங்களை மீறிவிட்டார்கள் என்று கூறி சர்வதிகாரத்தை பயன்படுத்துவார்கள் தாண்டிக்குடியில் நிலைமையும் இதுதான்……..இந்தியாவில் அணைத்து கிராமத்திலும் நடைமுறையில் இருக்கும் அரசு பயங்கராவதம் இது…..மலைபகுதிகளில்,காடுகளில் இந்த பயங்கரவாதம் உச்சகட்டத்தில் இருக்கும்……..இந்த ஜனநாயக சர்வாதிகாரத்தை மக்களுக்கு புரியவைப்பதில் பசுமை நடைக்கு அதிக பங்கு உள்ளது……..நடந்த பசுமை நடையின் வரலாற்று கண்காட்சி கிராம மக்களின் ஜனநாயக போராட்டத்திற்கு அதிக பலம் சேர்க்கும்.

வரலாறு ……இதற்கு பல பரிணாமங்கள் உண்டு மக்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதும் வரலாறே, மக்கள் எப்படி அழிக்கபட்டார்கள் என்பதும் வரலாறே, மக்கள் எதனால் அழிக்க பட்டார்கள் என்பதும் வரலாறே. பெரும்பாலும் மக்கள் நன்றாக வாழ்ந்தார்கள் மன்னர்கள் நன்றாக ஆட்சி புரிந்தார்கள் என்று தான் பெரும்பாலான சமூகத்திற்கு  வரலாறு கற்றுகொடுக்க படுகிறது. கல்வெட்டுகளில் மன்னர்களை புகழ்ந்து தள்ளும் அனைவரும், இன்றைய அரசாங்கத்தை புகழ்பவர்களும் ஒன்றுதான் இந்த இரண்டு ஒப்புமையிலும் அரசாங்கத்தின் ஒரு பக்கம் மட்டும் வரலாறாகி போனது.  நல்லாட்சி என்பது சரி அது யாருக்கு என்பதில் தான் வரலாற்றின் சிக்கல் ஆரம்பமாகிறது. வரலாற்றின் மறுபக்கம் இருட்டிலேயே கிடக்கிறது நடந்து முடிந்த அணைத்து விடயமும் வரலாறுதான். பல வருடங்கள் கழித்து தாண்டிக்குடியின் வரலாற்றை தேடும் மக்களுக்கு பசுமைநடை மூலமாக தெரியவருவது மக்கள் எப்படி வாழ்ந்தார்கள் எப்படி அழிக்கப்பட்டர்கள் என்னும் செய்தி, சமூகத்தின் இரு முகங்களையும் வரலாற்றின் வழியே அறிவார்கள். இந்த அழிவுக்கு காரணம் சில அரசியல் வாதிகள் அரசாங்க அதிகாரிகள் சில வியாபாரிகள் என்று கூறி இந்த சமூகம் தப்பித்து கொள்ள நினைக்கிறது, இந்த கூற்று உண்மையென்றால் அந்த இடத்தில் இருப்பவர்களை எடுத்துவிட்டு புதிய நபர்களை நியமித்தல் சிக்கல் தீர்ந்துவிடவேண்டுமே ஆனால் வரலாறு நமக்கு கற்றுகொடுத்தது அணைத்து காலகட்டத்திலும் இந்த மூன்று இடத்தில் இருப்பவர்கள் சமூகத்தை கொடூரமாக அழிகிறார்கள் என்றுதான், அவர்கள் அனைவரும் இந்த சமூகத்தில் இருந்து தான் வருகிறார்கள் என்பதை இந்த சமூகம் மறந்துவிடுகிறது, அனைத்தும் சமூகத்தில் இருந்துதான் பிறக்கின்றது. அனைவரும் நோய்களுக்கான அறிகுறிகளை கண்டு சினம் கொள்கிறோம், வருந்துகிறோம், நோய் எங்கு உள்ளது என்பதை கண்டுபிடிக்க மறந்து விடுகிறோம் அது நம்மிடமே இருக்கிறது என்று தெரிந்தால் மீண்டும் பழைய இடத்திற்கு சென்று வெற்று சினம் கொள்கிறோம் போலி வருத்தம் அடைகிறோம். தொடர்ந்து சமூகத்தை உன்னிப்பாக கண்காணிப்பதே ஒரு கலைதான் அந்த கலையில் எத்தனை கொடூரங்கள், மகிழ்ச்சிகள் இரண்டையும் ஒரு கண்களில் காண பழக வேண்டும் மகிழ்ச்சியை மட்டுமே பார்க்க நமது சமூகம் நம்மை பழக்க படுத்திவிட்டது. இந்த பழக்கத்தை இப்படி பட்ட பயணங்களால் மட்டுமே மாற்ற முடியும்……….அடுத்த பசுமைநடை பயணம் நோக்கி காத்துகொண்டு இருக்கிறேன்………..

PicsArt_1430122488629

பசுமைநடை 45

normal land

காலை நேரம் ஒரு பத்து மணி இருக்கும் கதிரவனின் தாக்கம் சற்று மிதமாக இருந்தது வயலில் உள்ள பருத்தி செடி மற்றும் துவரை செடியை எனது கைகள் ஒரு பச்சிளம் குழந்தையை தொடுவது போல் மிருதுவாக தொட்டுக்கொண்டே கால்களும் வயலின் நடுவில் உள்ள பாதையில் மெதுவாக நகர்ந்தது. காற்றின் ஓசையும் பறவைகளின் ஓசையும் தான் அதிகமாக கேட்கிறது, ஆங்காங்கே மனிதர்களின் பேச்சு சத்தமும் கேட்கிறது,  நமது பசுமைநடை நண்பர்கள் பேச்சு சத்தம் தான் அது. இயற்கை சூழல் மிகுந்த அமைதியான இடத்தில் பசுமைநடை நிகழ்வை முடித்துவிட்டு அனைவரும் வாகனங்களை நோக்கி சென்றுக்கொண்டு இருந்தோம். எனது நினைவுகளோ சனிக்கிழமை முதல் தாம்பரம் MEPZ  மறைமலைநகர் மகேந்திர சிட்டி, சிப்காட்(வேலூர்,கடலூர்,சென்னை),etc…. இதனை சுற்றியே இருந்தது இந்த இடங்களை மண்டலங்கள் என்று கூறுவார்கள் தொழில்சாலைகள் அதிகமாக உள்ள மண்டலங்கள். இங்கு உள்ள தொழில்சாலை அனைத்தும் அந்நிய முதலீட்டால் நிறுவப்பட்டதாகும், “அரசாங்க பாணியில் எளிமையாக சொல்ல வேண்டும் என்றால் நாட்டில் வேலை இல்லா திண்டாட்டம் அதிகமாக உள்ளது அதனால் அந்நிய முதலீட்டை(FDI) இங்கு வரவைத்து பன்னாட்டு கம்பனியை நிறுவ வைத்து அனைவர்க்கும் வேலை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கிறோம்” அரசு கூறும் விளக்கம் இவை. அந்த தொழில்சாலை அமைக்க மூலதனம்(FDI) மட்டும் கம்பனியிடம் இருக்கும் இடம் அனைத்தும் மலிவு விலைக்கு அரசாங்கம் கொடுக்கும். ஒரு சிறிய உதாரணம் நூறு ரூபாய் இடத்தை விவசாயிடம் இருந்து முப்பது ரூபாய் கொடுத்து கொள்ளை அடித்து அதனை பத்து ரூபாய்க்கு பன்னாட்டு தொழில்சாலைகளுக்கு விற்று அதற்கான நீர், மின்சாரம் அனைத்தும் இலவசமாக கொடுத்து இந்த நாட்டில் உள்ள தொழிலாளர் பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று  கம்பெனி உத்தரவு போட்டால் அரசு பணிவாக தனது வேலையை செய்யும். இப்படி பட்ட சிறப்பு சலுகைகள் பன்னாட்டு முதலாளிகளுக்கு செய்து தருவதற்கு பெயர்தான் சிறப்பு பொருளாதார மண்டலம் (SPECIAL ECONOMICAL  ZONE)……… வழி விடுங்கள் என்று பசுமைநடை நண்பர்கள் கூற திரும்பி பார்த்தபோது டிராக்டர் முழுவதும் நண்பர்கள் அமர்ந்துகொண்டு இருந்தார்கள் டிராக்டர் வாகனகள் இருந்த இடத்தை நோக்கி சென்றது. டிராக்டர் சென்றதும் எனது நினைவலைகள் SEZ நோக்கி சென்றன.

people in line people in land

நேற்று காலை இதே இடத்திற்கு வாகனம் நிறுத்துவதற்கும் உணவு பகிர இடத்தை பார்பதற்கும் பசுமைநடை ஒருங்கினைபாளர்கள் ரகுநாத் அண்ணா மற்றும் முத்துசெல்வகுமார் அண்ணா அவர்களுடன் வந்து இராமலிங்கம் அய்யாவை சந்தித்ததில் இருந்தே இதை பற்றின சிந்தனைதான் ஓடிக்கொண்டே இருந்தது. இந்த 45வது பசுமைநடை ஒரு முக்கிய நிகழ்வாக மாறிப்போனது. நான் நீண்ட நாள் எதிர்பார்த்த நடை என்று கூறலாம் இராமலிங்கம் அய்யாவை பார்க்கும் வரை எனக்கு தெரியவில்லை நான் மிகவும் எதிர்பார்த்த நடை என்று அவரை பார்த்து அந்த கிராமத்தில் உள்ள பிரச்னையை தெரிந்துகொண்ட போதுதான் தெரிந்தது நாம் ஒரு முக்கியமான ஒரு நடைக்கு வந்து உள்ளோம் என்று. சரி யார் இந்த இராமலிங்கம் அய்யா? இதற்கும் SEZ க்கும் என்ன தொடர்பு? எந்த ஊரில் இன்றைய பசுமைநடை நடந்தது முடிந்தது?……..மீண்டும் ஒரு இருச்சகர வாகனம் வரும் சத்தம் கேட்க திரும்பி பார்த்தபோது இரண்டு காவல்துறையினர் நடத்து வந்த எங்களை கடந்து சென்றார்கள்…..சரி காவல்துறை(அதிகாரம்) சென்று விட்டது நாம் நமது கதைக்கு செல்வோம். Sez க்கும் நான் பசுமைநடை நடந்த இடத்திற்கும் இராமலிங்கம் அய்யாவிற்கு தொடர்பு உள்ளது அதனால் தான் எனது நினைவுகள் இந்த மூன்று விடயங்களை சுற்றி வந்துகொண்டே இருகின்றது. அந்த வரலாற்றை சற்று பார்போம்

மதுரை திருமங்கலம் அடுத்து எட்டு கிலோமீட்டர் தாண்டி விருதுநகர் செல்லும் சாலையில் அமைந்துள்ள நான்கு கிராமங்கள் செங்கபடை, சிவரக்கோட்டை, கரைசல்க்காலம்பட்டி, சுவாமிமலைபட்டி. பத்தாயிரம் ஆண்டுகளுக்கும் முன் வாழ்த்த மனிதர்களின் எச்சம் இங்கு கிடைத்துள்ளது. இந்த தகவலில் இருந்து இது மிகவும் பழமையான ஊர் என்று புலனாகிறது ஆனால் எந்த தொல்லியல் பலகையும் இல்லை. பாண்டிய மன்னன் தனக்கு வந்த நோயை குணபடுத்த இந்த கிராமத்திற்கு வந்து ஒரு மண்டலம் தங்கினான் அந்த காலகட்டத்தில் ஒரு கோட்டை கட்டபட்டது அது சுவரால் கட்டப்பட்டதால் சிவரக்கோட்டை என்று பெயர் வந்தது என்று கூறப்படுகிறது. இங்கு இருந்த விவசாய நிலத்தை கோவிலுக்கு மன்னன் எழுதி வைத்தான் என்று கூறப்படுகிறது. பாண்டிய மன்னரின் நாட்டிய கலைஞியான செங்கமலநாச்சியாரை குடியமர்த்தி அங்கும் படைகளை பாண்டியன் நிறுவியதால் இங்கிருந்து சிறிது தொலைவில் உள்ள இடம் செங்கப்படை என பெயர் பெற்றதாகவும் கூறப்படுகிறது. சரி ஆயிரம் வருடங்களுக்கு முன் உள்ள வரலாறுகளை பார்த்தோம். இரண்டு மூன்று ஆண்டுகள் முன் நடந்த வரலாற்றை பார்போம்.

sunshade sun

இந்த நான்கு கிராமத்தை சுற்றி உள்ள 5000 acre விவசாய நிலங்களை அரசாங்கம் சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கு தாரை வார்க்க 2007-08 ஆம் ஆண்டு ஆணை பிறப்பித்தது பின்பு அது 2500acres ஆக மாற்றியது. 1000acre செங்கப்படை 1500acreசிவரக்கோட்டை,கரைசல்க்கலாம்பட்டி, சுவாமிமலைபட்டி. விவசாயிகளின் பல போராட்டங்களுக்கு பிறகு அரசாங்கம் செங்கபடையை மட்டும் விட்டது இது விவசாய நிலம் என்று அதாவது 1000acre தப்பித்தது.  ஆனால் 1500acre அரசாங்கம் விடுவதாக தெரியவில்லை அதற்கு அரசாங்கம் கூறும் பதில் “அந்த நிலங்கள் அனைத்தும் ஒன்றுக்கும் உதவாத வறண்ட நிலங்கள்”.

போராட்டம் இங்கு இருந்து தான் தொடங்குகிறது சிவரக்கோட்டை கிராமத்தை சேர்ந்த இராமலிங்கம் அய்யா மக்களை ஒன்று திரட்டி போராடுகிறார் விவசாய நிலத்தை அரசாங்கத்திடம் இருந்து காப்பற்ற. இந்த நிலத்தில் முப்பது வகையான பயிர்கள் விளைகின்றன திணை, துவரை, வரகு, உளுந்து, கம்பு, பாசிப்பயறு, கேழ்வரகு, தட்டைப்பயறு, குதிரைவாலி, மொச்சை, சோளம், கொள்ளு, மக்காச்சோளம், சுண்டல், சாமை, வெண்டி, மல்லி, கொத்தவரை, எள், மொச்சைக்காய், ஆமணக்கு, பீர்க்கை, ஓமம், பருத்தி, அவுரி, வேம்பு, நித்யகல்யாணி, புளி. இந்த கிராமங்களில் முப்பது நீர் ஊரணி உள்ளது சிவரகோட்டையில் மட்டும் பத்து ஊரணி உள்ளது. 45 வகை பறவைகள் இங்கு வாழ்கின்றன என்று பதிவு செய்ய பட்டுள்ளது. காட்டு விலங்குகள் அனைத்தும் இங்கு வாழ்வதற்கான சான்றுகள் உள்ளன. ஆனால் இதுவரை எந்த தொல்லியல் பலகையும் சரி வன விலங்குகள் வாழும் பகுதி என்ற பலகையும் சரி எதுவும் அரசாங்கத்திடம் இருந்து வைக்க படவில்லை sez பலகையை மட்டும் வைக்க துடித்து கொண்டு இருகின்றந்து அரசு.

ramalingam

இதுவரை இங்கு 155 போராட்டங்கள் நடத்தி உள்ளார்கள். அரசாங்கத்தை எதிர்த்து அரசாங்க ஆவணத்தை வைத்தே போராடுகிறார் ராமலிங்கம் அய்யா தகவல் அறியும் சட்டத்தின் கீழ் அணைத்து தகவல்களையும் சேகரித்து உள்ளார். இதுவரை இவரிடம் 42000 பக்கங்கள் கொண்ட தகவல்கள் உள்ளன. 1920 முதல் இப்பொது வரை அந்த கிராமத்தை சார்ந்த அணைத்து தகவல்களும் உள்ளன. 250 மக்கள் நிலம் வைத்து உள்ளார்கள் அரசாங்கமோ 96 மக்கள் தான் வைத்து உள்ளார்கள் என்று கூறுகிறது. வன விலங்குகளும் பறவைகளும் அதிகமாக வாழ்கின்றன என்பதை ஆதாரத்தோடு நீதிமன்றத்தில் உறுதிபடுத்தினால் நீதிமன்றத்தை அரசு மாற்றுகிறது பிறகு நீதிபதியை மாற்றுகிறது அந்த தடைகளை தாண்டி மீண்டும் சென்றால் ஆவணங்களை கொளுந்துகின்றது இந்த அரசு. அணைத்து தடைகளையும் தாண்டி மக்கள் இன்றுவரை போராடிக்கொண்டு இருகின்றார்கள். மக்களின் பலவீனமாகிய சாதியை பயன்படுத்தி அதனை வைத்து பிழைப்பு நடத்தும் கட்சிகளை வைத்து மக்களின் ஒற்றுமையை சிதைக்க அரசாங்கம் தனது சூழ்ச்சிகளை தொடர்ந்து செய்து கொண்டே இருகின்றது. இராமலிங்கம் அய்யா சாதியை உடைத்து அரசாங்க தடைகளை உடைத்து மக்களை ஒன்று திரட்டி ஜனநாயக ரீதியாக போராடிக்கொண்டு இருகின்றார்.

20150131_094345

அனைத்தையும் நினைத்துகொண்டே வயலில் மெதுவாக நடதுகொண்டு இருந்தேன் வயலின் நடுவில் டிராக்டர் நின்று கொண்டு இருக்க பசுமைநடை மக்கள் அனைவருக்கும் இராமலிங்கம் அய்யா தனது நிலத்தில் விளைந்த சுண்டலை அனைவர்க்கும் அன்போடு பகிர்ந்து கொண்டு இருந்தார். நேற்று அவர் கூறிய வார்த்தைகள் யாவும் எனது காதில் மீண்டும் கேட்க தொடங்கின தம்பி இங்கு நாங்கள் ரசாயன மருந்து அடிப்பதில்லை பறவைகளுக்கு உணவு இந்த வயல் தான் அதை எப்படி நாங்கள் கொள்வது யாருக்கும் அந்த உரிமை கிடையாது..காட்டில் புகை போடமாட்டோம் பறவைகள் அழிந்துவிடும் என்று, விலங்குகள் வயலில் வந்து உண்ணும் அது விட்டு போக மிச்சத்தை தான் நாங்கள் எடுத்து கொள்வோம். பறவைகளும் விலங்குகளும் இந்த காட்டில் இருப்பதால்தான் காடு செழிப்பாக இருகின்றது. நிலமும் விலங்குகளும் பறவைகளும் தான் காட்டை பாதுகாத்து எங்களது வாழ்வாதாரத்தை வளர்கின்றது. இவற்றை மனிதர்களிடம் இருந்து காப்பாற்ற தான் போராடி கொண்டு இருகின்றோம். இந்த வார்த்தைகளை கேட்டதும்  எனக்கு 1854யில் சிவபிந்தியர்கள் தலைவர் சியன்டேல் காட்டை விலைக்கு (அழிக்க) வாங்க வந்த அமெரிக்க ஜனாதிபதியிடம் கூறிய வார்த்தைகள் நினைவுக்கு வந்தது “ஆகாயத்தை எப்படி விற்கவோ வாங்கவோ முடியாதோ அதே போல் நிலத்தை விற்கவோ வாங்கவோ முடியாது, நிலத்தை விற்பது என்கின்ற எண்ணம் எங்களுக்கு விநோதமாக உள்ளது, காற்றின் தூய்மையும் தண்ணீரின் தூய்மையும் நமக்கு சொந்தம் இல்லை, நமக்கு சொந்தம் இல்லாத ஒரு விடயத்தை எப்படி விற்க முடியும் காடுகள், மலைகள், விலங்குகள், பறவைகள், மனிதன் எல்லாம் இந்த உலகத்தில் ஒரே குடும்பம் தான்., எங்களின் தாகத்தை தீர்க்கும் இந்த நதிகள் எங்களுக்கும் உணவு அளிக்கும் இந்த நதிகள் எங்களின் சகோதரர்கள், எங்கள் சகோதரர்களிடம் நீங்களும் பரிவு காட்ட வேண்டும், இந்த நதியில் ஓடுவது தண்ணீர் மட்டும் அல்ல எங்கள் மூதாதையர்களின் குருதியும் தான், இந்த மண்ணின்  ஒரு பகுதி நாங்களும் நீங்களும் தான் இந்த மண் எங்களுக்கு விலைமதிப்பு அற்றது உங்களுக்கும் தான், ஒரு விடயம் நிச்சயமாக தெரியும் இந்த மண் மனிதனுக்கு சொந்தம் கிடையாது மனிதன் தான் மண்ணுக்கு சொந்தம்”.   எனது கண் முன் அந்த தலைவர் சியன்டேல் இராமலிங்கம் அய்யா உருவத்தில் தெரிந்தார். இயற்கையை நேசித்து காடுகளை தங்களின் சொந்த வீடு போல் பாதுகாக்கும் அனைவரின் வார்த்தைகள் ஒன்றுதான் என்பது இந்த இரண்டு மனிதர்களின் சொற்களில் புரிந்துகொண்டேன்.

இராமலிங்கம் அய்யா மற்றும் சியன்டேல் அவர்களை நினைத்துகொண்டே இருந்தேன் அன்று அவரும் இப்படித்தானே போராடி இருப்பார் அரசை எதிர்த்து. பாண்டிய மன்னன் கோவிலுக்கு இந்த இடத்தை எழுதிவைத்தான் என்று வரலாறு சொல்கிறது. அன்றைய காலகட்டத்தில் கோவில் என்பது நிலத்தை மக்களிடம் இருந்து அபகரிக்கும் ஒரு நிறுவனமே என்பது அனைவர்க்கும் தெரியும். எந்த காலகட்டத்திலும் அரசாங்கம் மக்களுக்கு இல்லை என்பது இதில் இருந்து தெரிகிறது அன்றைய அரசு பாண்டிய மன்னன் மக்கள் நிலத்தை கோவிலுக்கு எழுதி வைத்தான். இன்றைய அரசு தொழில்சாலைகளுக்கு எழுதி வைக்கின்றது. அன்றைய கால கட்டத்தில் எத்தனை இராமலிங்கம் சியன்டேல் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தினார்கள் என்பது தெரியவில்லை அது மன்னனின் அதிகாரத்தால் அழிந்து இருக்கலாம். இன்று இராமலிங்கம் அய்யா போராட்டம் சிவரக்கோட்டை மக்கள் போராட்டம் ஆவன படுத்த வேண்டும் அடுத்த தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு செல்ல வேண்டும். இயற்கையின் மீது அரசாங்கம் நடத்தும் ஒடுக்கு முறையை நினைக்கும் போது எங்க்லஸ் கூறிய வார்த்தை நினைவிற்கு வருகின்றது இயற்கையின் மீது மனித வெற்றிகளை வைத்துக் கொண்டு நம்மை நாம் அளவு கடந்து தற்புகழ்ச்சி செய்து கொள்ள வேண்டியதில்லை. ஏனெனில் இப்படிப்பட்ட வெற்றி ஒவொன்றுகும் இயற்கை நம்மைப் பழி வாங்குகிறது. ஒவ்வொரு வெற்றியும் முதலாவதாக நாம் எதிர்பார்கின்ற விளைவுகளை நிகழ்த்துகிறது என்பது உண்மையேயாயினும் இரண்டாவது,முன்றாவது நிலைகளாக நாம் எதிர்பார்க்காத,முற்றிலும் வேறுபட்ட நிலைகளாக நாம் எதிர்பார்க்காத, முற்றிலும் வேறு பலன்களையும் அளிக்கிறது; இவை பல தடவைகளில் முதலில் சொன்னதை ரத்து செய்து விடுகின்றன.”-எங்கெல்ஸ் (“மனிதக்குரங்கு மனிதனாக மாறிய இடைநிலைபடியில் உழைப்பின் பாத்திரம்” நூலிலிருந்து).

tractor

சிறப்பு பொருளாதார மண்டலம் வந்தால் எந்த நன்மையையும் மக்களுக்கு கிடைக்க போவது இல்லை வேலை கிடைக்கும் அதனால் மகிழ்ச்சி பொங்கும் நாடு வளர்ச்சி அடையும் என்பது எல்லாம் அரசாங்கம் காட்டும் மாயஜாலம். அதற்கு ஆதாரம் வேலூர் சென்னை கடலூர் போன்ற மாவட்டங்களில் அமைந்த SEZயில் வேலை செய்யும் சாமான்ய மக்களும் அதனை சுற்றி உள்ள கிராமங்கள் படும் துயரம் தான்.. அரசாங்கம் உருவாக்கி இருக்கும்  வலையில் இன்றைய மாணவர்களை விழ வைக்க அரசு சிறப்பாக வேலை செய்து கொண்டு இருகின்றது. நேற்று இன்று நடத்த விடயம் இல்லை இது தொழிற்புரட்சி, உலகமயமாக்கல் பிறந்ததில் இருந்தே இது நடந்தது கொண்டு இருகின்றது. அடுத்த தலைமுறை மாணவர்களுக்கு இயற்கைக்கும் அவர்களுக்கும் உள்ள தொடர்பு அறுந்து போகும் அனைவரும் SEZ யை ஆதரித்து போராடுவார்கள் அரசாங்கம் கல்லூரிகளில் பள்ளிகளில் மாணவர்களை இப்படிதான் உருவாக்குகின்றது. அந்த அரசாங்கத்தை வடிவமைப்பது முதலாளித்துவம்…….அந்த அமைதியான வயலில் நடந்தது வந்த போது மனதில் தோன்றிய பல விடயங்கள் பல புரிதல்களை ஏற்படுத்தியது. சிவரகோட்டை விட்டு கிளம்பும் நேரம் வந்தது பசுமைநடை நண்பர்கள் அனைவரும் கலைந்தார்கள் நானும் அந்த போராட்ட பூமியில் இருந்து கிளம்பினேன் மனதில் பல நினைவுகளுடன் பல கேள்விகளுடன் ஒவ்வொரு மண்டலத்திற்கு பின்னால் ஒரு கிராமம் எப்படி இருந்து இருக்கும் என்பதை உணர்த்தியது சிவரக்கோட்டை எத்தனை இராமலிங்கம் போராடினார்களோ தெரியவில்லை இந்த கிராமத்தை அறிமுக படுத்திய பசுமைடைக்கு நன்றி……..நேற்று(31.1.2015) இராமலிங்கம் அய்யாவிடம் பேசியதும் இன்று(1.2.2015) காலை மக்களிடம் முத்து கிருஷ்ணன் அய்யா மற்றும் இராமலிங்கம் அய்யா பேசியதும் நினைவுகள் தொடர்ந்து என்னை ஆளுமை செய்துகொண்டே இருக்கின்றன…….காத்துகொண்டு இருக்கின்றேன் அடுத்த பசுமைநடைக்கு.

children

Photos: Arun Boss

சிவரக்கோட்டை போராட்டத்தை பற்றிய தகவல்கள்

http://www.thehindu.com/todays-paper/farmers-oppose-takeover-of-land-for-sipcot-industrial-estate/article4672330.ece

http://admin.indiaenvironmentportal.org.in/news/farmers%E2%80%99-oppose-takeover-land-sipcot-industrial-estate

http://www.mgrtv.com/sivarakottai-farmers-wait-jayalalithaas-intervention.html

http://www.myacres.in/property/123/

http://www.thehindu.com/news/cities/Madurai/farmers-oppose-takeover-of-land-for-sipcot-industrial-estate/article4673122.ece

பசுமைநடை 43

 10405537_881766071868501_6228766818812294099_n

மலை உச்சியில் இருந்து ஆற்றை பார்த்தது மனதிற்கு அமைதியான மகிழ்ச்சியை தந்தது மற்றும் ஆறுகளை சுற்றி உள்ள நிலங்களும் அந்த நிலத்தை சார்ந்து வாழும் மக்களின் சமூகஅமைப்பும், வரலாறும் புரிந்து கொள்ள முடிந்தது. ஆறுகள், மலைகள் இருக்கும் இடத்தில் நிச்சயமாக நிலங்களும் அந்த நிலங்களை தனது பிடியில் வைக்க கோவில்களும் இருக்கும் என்பதையும், அந்த நிலத்தை சார்ந்த உழைக்கும் வர்க்க மக்களும் ஆளும் வர்க்க மக்களும் ஒரு சமூகமாக அதில் பல சாதியால் பிரிக்கப்பட்டு வாழ்ந்து கொண்டு இருப்பார்கள் என புத்தகத்தில் படித்த அனைத்தும் என் கண் முன் வந்து நின்றது. என் மனதில் தோன்றிய எண்ணங்களை போன்றே நூற்று ஐம்பது மக்களின் பல்வேறு எண்ணங்களும் அந்த மலை உச்சியில் அலைமோதி கொண்டு இருந்தன, குழுவில் உள்ள மக்கள் அனைவரும் தங்களின் எண்ணங்களையும் மகிழ்ச்சிகளையும் தங்களுக்குள் பரிமாறிக்கொண்டு இருந்தனர். சரி எந்த மலையின் உச்சியில் இருந்து எந்த ஆற்றை பார்த்து கொண்டு இருக்கிறேன்??எந்த குழுவுடன் நின்று கொண்டு இருக்கிறேன்?? இன்று இங்கு நான் தெரிந்துகொண்ட தகவல் என்ன?? இந்த அத்தனை கேள்விகளுக்கு பதில் தெரிய அரைமணி நேரம் முன் இந்த மலையில் நடந்த நிகழ்வுகள் உங்களுக்கு தெரியபடுத்த வேண்டும். அரைமணி நேரம் பின்நோக்கி உங்களை அழைத்து செல்கிறேன் என்ன நடந்தது என்பதை தெரிய படுத்த.

 1545970_881764951868613_1940592750572976328_n

அரைமணிநேரம் முன்பு:

நின்று கொண்டு இருந்த மலை உச்சியில் இருந்து இரண்டு நிமிடம் கிழே இறங்கினால் ஒரு பெரிய பாறையில் கல்வெட்டுகளும் பாறைக்கு நடுவில் ஒரு குகை பக்கத்தில் மலையின் மீது ஏறி வந்த களைப்பில் மக்கள் அனைவரும் அமர்ந்தார்கள், ஒருங்கினைபாளர்கள் அனைவரும் மக்களுக்கு பிஸ்கட் விநியோகிக்க பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் அதிக கவனம் செலுத்த பட்டது. இரண்டாயிரம் வருடத்திற்கு பின் உள்ள வரலாற்றுக்கு செல்ல மக்களை தயார் படுத்தி கொண்டு இருந்தார்கள் ஒருங்கினைபாளர்கள், தனது வார்த்தைகளால் வரலாற்று பயணத்தை அனைவரையும் அழைத்து செல்ல ஆசிரியர்கள் தயாரானார்கள். மெல்ல மக்களின் பேச்சு சத்தமும் அலைபேசி சத்தங்களும் குறைந்து காற்றின் சத்தமும் பறவைகளின் சத்தமும் கேட்ட தொடங்கின. இப்பொது நான் அமர்ந்து கொண்டு இருக்கும் குகைதளத்தில் 11 கல்வெட்டுகள் உள்ளன. ஒவ்வொரு படுக்கையிலும் தலையனை போன்ற பகுதியில் தமிழ்பிராமிக் கல்வெட்டு உள்ளது. இப்பெயர்கள் அனைத்தும் இதை செதுக்கி தந்தவர்களின் பெயராகவோ அல்லது இப்படுகைகள் இப்பெயர்களுக்கு உரியது என்றோ இருக்கலாம்.

10846144_881765841868524_3929664853003595348_n 10805833_881764041868704_2425597754484545903_n

தொல்காப்பியம் வருவதற்கு முன்பு வரை ச என்ற சொல் வராது என்பதை உறுதி செய்யும் வகையில் அங்கு இருந்த ஒரு கல்வெட்டு சான்றாக இருந்தது “அமணன் மதிரை அத்திரன் உறை உதயனஸ”. இதில் அமணன் என்ற சொல் சமணன் என்பதாகும், மதிரை என்பது மதுரை என்பதாகும். இந்த தகல்வல்கள் அனைத்தும் வரலாற்று ஆசிரியரிடம் இருந்து அங்கு கற்று கொண்டது. இந்த வாக்கியம் நான் எங்கு இருக்கிறேன் என்பதை தெரியபடுத்தும், ஆம் மதுரைக்கு மேற்கே நாற்பது கிலோமீட்டர் தொலைவில் பேரனைப் பகுதியில் மேட்டுப்பட்டி அமைந்துள்ளது. அணைப்பட்டி என்னும் சிற்றூர் அருகில் வைகையாற்றின் தென்கரையில் மகாலிங்கமலை என்றழைக்கப்படும் சித்தர்மலையின் மேல் அமர்ந்து கொண்டு மலையின் வரலாற்று தகல்வல்களை கேட்டு கொண்டு இருக்கின்றேன், மலை உச்சியில் நான் ரசித்துக்கொண்டு இருந்த ஆறு வைகை ஆறுதான். காலையில் உற்சாகமாக மலைகள் மீது மக்களை தனது கைகளில் கோர்த்து பத்திரமாக அழைத்துக்கொண்டு வரலாற்று பாடத்தை அவர்களுக்கு கற்றுகொடுத்து ஒவ்வொரு மாதமும் விழிப்புணர்வு ஏற்படுத்திக்கொண்டு இருக்கின்ற பசுமைநடை குடும்பத்தில் தான் ஒருவனாக அமர்ந்து கொண்டு இருக்கின்றேன். அனைவருக்கும் வரலாற்று பாடத்தை எடுத்தது சாந்தலிங்கம் அய்யா அவர்கள். மேலும் அய்யா கூறிய தகவல்கள் “இந்த மலை மீது உள்ள மகாலிங்கம் கோவில், நந்திப்பாறை ஏழாம் சமகாலத்தில் கட்டப்பட்டு இருக்கலாம். பாண்டிய நாட்டிற்கும் சேர நாட்டிற்குமான பெருவழியில் இப்பகுதி முன்பு அமைந்திருகிறது. கம்பம் பள்ளத்தாக்கு வழியாக இடுக்கி செல்லும் பெரும் பாதை முன்பிருந்தது. கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் அகஸ்டஸ் சீசர் காலத்திய ரோமானிய வெள்ளி நாணயம் ஒன்று கிடைத்துள்ளது”. இந்த தகவல்கள் அனைத்தும் சங்க கால சமூக அமைப்பும் வணிக முறையும் தெரிந்து கொள்ள தூண்களாக உள்ளது.

10857942_881765138535261_3863437766966238943_n 10685604_881763185202123_1344424714218693561_n

அடுத்து பசுமைநடையின் ஒரு முக்கிய நிகழ்வு நடைபெற்றது சங்க காலத்தில் ஒரு சாமான்ய ஏழை உழைப்பாளியின் உழைப்பில் உருவான, மக்களின் நம்பிக்கை சின்னமாக மாறிய, கலையின் உருவமாய் உள்ள தெய்வ சிலைகள் இன்று மக்களுக்கு வரலாறு மற்றும் கலைகளின் மீது விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் பண்ட பொருளாக மாறி அந்த சிலைகளை(கலைகளை) இங்கு இருந்து கடத்தி சென்று மேலைநாடுகள் ஒரு சூதாட்டம் ஆடிக்கொண்டு இருக்கின்றன. அதனை எதிர்த்து குரல் கொடுத்து களத்தில் போராடி தனது இணையத்தில் தொடர்ந்து எழுதி வரும் விஜயகுமார் அய்யா (www.poetryinstone.com)அவர்கள் சிறப்பு விருந்தினராக பசுமை நடையில் கலந்துகொண்டு தனது அனுபவங்களை பசுமைநடை குடும்பத்தில் பகிர்ந்துகொண்டார். கலை, வரலாறு, இயற்கை பற்றிய அவசியத்தை அதற்கான இடத்திலேயே மக்களை அழைத்துக்கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பசுமைநடைக்கு அவரின் வருகை உற்சாகம் அளித்தது. அவருக்கு பசுமைநடை மதுர வரலாறு புத்தகமும் நினைவுபரிசும் காற்றின் சிற்பங்கள் புத்தகமும் கொடுத்து சிறப்பித்தது. அரைமணிநேரம் முன் நான் பசுமைநடை குடும்பத்தில் கற்றுக்கொண்ட விடயங்களையும் அனுபவங்களையும் கூறிவிட்டேன். எப்படி இந்த மலையில் நாங்கள் அனைவரும் ஏறினோம்?? எங்கிருந்து பயணத்தை தொடங்கினோம்??? இதனை தெரிந்துகொள்ள மூன்றுமணி நேரம் உங்களை பின்னோக்கி அழைத்து செல்கிறேன்.

10848899_881760958535679_2986789809674033380_o 10402710_881762068535568_4050269818562612166_n

மூன்று மணிநேரத்திற்கு முன்பு:

அதிகாலை ஐந்து மணிக்கு மதுரை மாட்டுத்தாவனி பேருந்து நிலையத்தில் இறங்கி தேநீர் குடித்துகொண்டே ஆகாயத்தை பார்த்தபொழுது இரவிற்கே சொந்தமான கருமை நிறம் போர்த்தி இருந்தது. அங்கிருந்து பெரியார் பேருந்து நிலையம் சென்று பின்பு மதுரை காமராஜர் பல்கலைகழகம் செல்ல பேருந்து ஏறி பல்கலைகழகத்தில் இறங்கி மீண்டும் ஆகாயத்தை பார்த்தேன் இருள் போர்வை விலகி மலைகளுக்கு நடுவில் நமது முன்னோரான கதிரவன் தனது தலையை மெதுவாக உயர்த்தி கொண்டு இருந்தார். சென்னையில் இருந்து மதுரை வந்த களைப்பு பறந்தது பசுமைநடை குடும்ப நபர்கள் வருவதை பார்த்து, பின்பு அவர்களுடன் மீண்டும் தேநீர் குடித்துவிட்டு திரும்பி பார்த்தபோது பசுமைநடை குடும்ப நண்பர்கள் அனைவரும் தனது வாகனத்தில் நின்று கொண்டு இருந்தனர். அவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து பயணத்திற்கு தயாராக்கிக்கொண்டு இருந்தார்கள் முத்துகிருஷ்ணன் அய்யாவும் ஒருங்கினைப்பாளர்களும். பசுமைநடை படை சித்தர் மலை நோக்கி தனது பயணத்தை தொடங்கியது. பல கிராமங்கள் மலைகள் வயல்கள் அந்த கிராமத்து மக்கள் அவர்கள் அன்றாட வாழ்வு அனைத்தையும் பார்த்தபடியே மலை அடிவாரத்தை அடைந்தோம். பின்பு வரிசையாக மலைமீது ஏற தொடங்கினோம். ஒருங்கினைபாளர்கள் அனைவரும் மக்கள் ஏறுவதற்கு முன்பே மலைமீது ஏறி மக்களை பாதுகாப்பாக கொண்டு சென்றனர். வழுகை பாறை மீது சிறியதாக செதுக்கப்பட்ட படிகளை செதுக்கிய உழைப்பாளியை நினைத்துகொண்டே மலைமீது ஏறி குகை அருகில் அமர்துகொண்டு இருந்த மக்களின் நடுவில் அமர்தேன்.

இப்பொது

காலையில் இருந்து இப்பொது வரை பசுமைநடை குடும்பத்தின் மூலம் எனக்கு கிடைத்த வரலாற்று தகல்வல்கள் அனுபவங்கள் உணர்வுகள் அனைத்தையும் நினைத்துகொண்டு வைகை ஆற்றை பார்த்துகொண்டு இருக்கும்போது கரும்பைபோல் ஒரு இனிப்பான செய்தி வந்தது…..நமது பசுமைநடை குடும்பம் பொங்கல் கொண்டாட போகின்றது மக்களோடு இணைந்து என்பதுதான் அது…இப்பொது அனைவரின் நினைவுகளும் அடுத்த பசுமைநடை தேதி நோக்கி காத்துகொண்டு இருந்தன……பசுமைநடை பயணம் தொடரும்…………..

10805715_881760491869059_928868971877378564_n

 புகைப்படங்களுக்கு நன்றி : அருண் அவர்களுக்கு

மலை(ழை)க் காடுகளின் பயணம்

10624678_10205597775810746_5256416966572955714_n

புறஉலகில் உள்ள பருப்பொருட்கள் உயிரினத்தின் மீது படும்போது அந்த உயிரினம் தனக்குள் இருக்கும் உணர்வை அறிந்துகொள்கிறது. மனித உயிரினத்தின் மீது அந்த பருப்பொருட்கள் படும்போது மனிதனுக்கு உணர்வோடு சேர்ந்து உணர்ச்சிகளும் வெளிப்படும். அந்த வெளிபாட்டை தனது எழுத்துக்களிலும்,பாடல்களிலும்,ஓவியத்திலும், வெளிபடுத்துகிறான். எழுத்துகளில் மனிதன் வெளியிடும் போது அவனை பாதித்த பருப்பொருளை அவனுக்கு பிடித்த கடவுளையோ, அரசனையோ ஒப்பிட்டு வெளிபடுத்துகிறான். ஆதிகால மனிதர்களின் புறபருப்பொருள் பாதிப்பினால் ஏற்பட்ட உணர்வோடு சேர்ந்த உணர்ச்சியின் வெளிப்பாடே கடவுள். இந்த பருப்பொருட்கள் நம்மை பாதித்து தாம் எவை என்பதை நமக்கு உணர்த்துகின்றன. ஒரு பயணத்தில் என்னை பாதித்த பருப்பொருட்களை பற்றிய எனது உணர்வோடு சேர்ந்த உணர்சிகளின் வெளிப்பாடே இந்த பயணக்கட்டுரை. இனி அதனை பருப்பொருட்கள் என்று அழைக்காமல் மனிதர்கள் வைத்த பெயரோடு பயணத்தை தொடங்குகிறேன்.

10626703_10205597781210881_6697490758940470910_n

நமது உணர்வுகளையும் உணர்சிகளையும் வெளியில் கொண்டுவருவது உலகத்தில் உள்ள பல பருப்பொருட்கள் நம் மீது மோதும் போது தான். அதில் சில நம் மீது மோதும் போது மகிழ்ச்சியான உணர்வுகளையும் உணர்சிகளையும் தரும் அதில் முக்கியமான இரண்டு பருப்பொருட்கள் இயற்கையினால் கிடைக்கும் குளிர்ந்த காற்றும்,நீரும். மழைத்துளி நம் மீது படும்போது ஒரு மகிழ்ச்சியான உணர்வு ஏற்படும் அந்த உணர்வை ரசித்து கொண்டு இருக்கும் போது எங்கள் முன் வாகனத்தில் ஹுபர்ட் அய்யா வந்து நின்றார். நானும் மது அண்ணாவும் வாகனத்தில் ஏறினோம் போகும்போது அந்த குளிர்ந்த காற்றும், மழை சாரலும் முகத்தில் முத்தம் கொடுக்க எங்கள் பயணம் தொடர்ந்தது. எங்கு போகிறோம் என்று அவர்களிடம் கேட்ட போது மது அண்ணாவின் கை திரும்பும் திசையில் எனது தலையும் திரும்பியது என் உடல் அந்த இடத்திற்கு சேரும் முன் எனது கண்கள் அந்த இடத்திற்கு போய் சேர்ந்தது ஒரு அழகிய மலை கருமேகங்கள் அதன் தலையில் தலைபாகை கட்டியது போல் இயற்கையின் தோழனாக இருக்கும் விவசாயின் தோற்றம் போல் காட்சியளித்தது. ஒரு கிராமத்தில் எங்களது வாகனம் நின்றது மூவரும் இறங்கி அங்கு இருக்கும் சாமான்ய மக்களின் வாழ்கை முறையை பார்த்துக்கொண்டே ஒரு கடையில் தேனீர் அருந்தினோம். வாகனத்தை நிறுத்த இடம் தேடிக்கொண்டு இருக்கும்போது தனது கடையின் பக்கத்தில் விடுங்கள் என்று அந்த எளிய மனிதரின் சொல் கிராமத்து மக்களுக்கே உள்ள சிறப்பு. சாமான்ய மக்களால் செய்யப்பட்ட சிறிதும் கலப்படம் இல்லாத காலை உணவை முடித்துவிட்டு பயணத்தை தொடங்கினோம் மலையில் ஏறுவதற்கு.

10360441_10205604327534535_7353940332338120713_n 10411087_10205597860732869_5761026972495056617_n

அந்த சிறிய கிராமத்தை கடந்து மலையை நோக்கி பயணத்தை தொடர்ந்தோம் மனிதர்களின் சத்தங்கள் குறைந்து பறவைகள் சத்தமும் காற்றின் சத்தமும் கேட்க தொடங்கியது. தனது குடும்பத்துடன் ஒரு விவசாயி வயலில் வேலை செய்ய சென்றுக்கொண்டு இருந்தார் அவரை கடந்து ஒரு மணல் மேடு மீது ஏறினோம் இப்பொது மலை சற்று அருகில் தெரிந்தது ஆனால் அதனிடம் செல்ல இன்னும் நெடும் தொலைவு நடக்கவேண்டும். அந்த மணல் மேடு அருகில் ஒரு சிறிய குளம், மலையில் இருந்து வரும் தண்ணீரை சேர்ந்து வைத்து வயல்களில் பாசனம் செய்ய இந்த குளத்தை உருவாக்கி உள்ளார்கள். அந்த குளத்தை பார்த்துக்கொண்டே பயணம் தொடர்ந்தது.

10170988_10205597865172980_8366924887995464925_n 10290037_10205597865332984_3875640796184738768_n

இப்பொது மலைக்கு செல்லும் பாதைக்குள் நுழைந்தோம் குழந்தைகள் புதிய நபர்களை வெட்கபட்டு சிரிந்து கொண்டே பார்ப்பார்கள் அதுபோல எங்களை மண்ணில் இருந்து புதிதாக முளைத்த வேர்கடலை செடி குழந்தைகள் பல சிரித்துகொண்டே வரவேற்றன அந்த குழந்தைகளுக்கு தண்ணீர் கொடுத்துக்கொண்டு இருந்தார் அந்த குழந்தைகளை பாதுகாக்கும் தாய்(விவசாயி). அந்த குழந்தைகளை ரசித்துக்கொண்டு சிறிது தூரம் கடந்து போகையில் அவர்களுக்கு அண்ணன்களாக இருக்கும் மாமரம் எங்களை புன்னகையுடன் வரவேற்றது திரும்பிய பக்கம் எல்லாம் மாமரம். அந்த தோப்பிற்குள் ஒரு குடிசைவீட்டில் சற்று ஓய்வு எடுத்து மீண்டும் பயணத்தை தொடர்ந்தோம். மூன்று நபர்கள் செல்ல கூடிய பாதை இப்பொது இரண்டு அல்லது ஒருவர் மட்டுமே செல்லும் பாதையாக சுருங்கியது. நேற்று கொட்டிய அடை மழையில் ஈரப்பதம் உடைய மணல்களும்,மழை நீர் பட்டவுடன் தனது பச்சை நிறத்தை எங்களது கண்களுக்கு விருந்து அளிக்கும் செடிகளும், அந்த ஈரப்பதம் உள்ள செடிகளுக்குள் ஊடுருவி வரும் குளிர்ந்த காற்றும், எப்போது வேண்டுமானாலும் மழையை தருவேன் எதற்கும் தயாராக இருங்கள் மக்களே என்று அன்பு கட்டளையிடும் கருமேகங்களும் எங்களது பயணத்தை உற்சாக படுத்தின. அந்த பாதையில் உள்ள மணல்கள் மிகவும் பொடி மணல்கள் ஈரப்பதத்தோடு அருமையாக காட்சி அளித்தது.

1525619_10205597786691018_7401827959006613271_n 1525619_10205597785170980_4459792770707828483_n

மாந்தோப்பை கடந்துவந்த உடன் எங்களை வரவேற்க காத்துகொண்டு இருந்தன தென்னந்தோப்புகள். ஒருபுறம் தென்னை தோப்புகள் மறுபுறம் வயல்வெளிகள் நடுவில் நாங்கள் அந்த இடத்தின் அழகை ரசித்துகொண்டே கடந்து வந்தோம். பயணத்தில் பல மரங்கள் செடிகள் கண்டோம் ந(ர)கர வாழ்கையில் சிக்கிகொண்ட மனிதனும் பல செடிகள் மரங்கள் பெயர்கள் தெரியாது என்பதற்கு ஒரு உதாரணம் நான். பின்பு வரிசையாக பல மரங்கள் அன்போடு எங்களை வரவேற்றன. இப்பொது நாங்கள் இருக்கும் இடம் அடர்ந்த மழைக்காடு. காடுகளை மூன்று விதமாக பிரிப்பார்கள் அதில் முக்கியமான ஒன்று அடர்ந்த மழை காடுகள் அந்த காட்டின் நடுவில் இருப்பது ஒரு அலாதிய மகிழ்ச்சியை தந்தது. மழை காடுகளில் எப்பொதும் மணல்கள் செடிகள் ஈரப்பதம் பொருந்தியே இருக்கும் நேற்று கொட்டிய மழையில் அதன் தன்மை அதிகமாக இருந்து எங்களுக்கு விருந்து அளித்தது. காடுகளுக்குள் தண்ணீர் சத்தம் கேட்டால் நிச்சயமாக பக்கத்தில் ஓடையோ அருவியோ இருக்கும் என்பது புலப்படும். எங்களின் தேடல் தண்ணீர் இருக்கும் திசை நோக்கி இருந்தது. மரங்களுக்கு பக்கத்தில் அழகான சத்தத்துடன் தண்ணீர் ஓடிக்கொண்டு இருந்தது செம்மன் நிறத்தில். பல வருடங்கள் கழித்து கொட்டிய மழையால் மணல்கள் அடித்து செல்கின்றது அதான் இந்த நிறம் என்று மது அண்ணா கூறும்போது தான் அதற்கான அர்த்தம் புரிந்தது. அந்த தண்ணீரில் எங்களது கால்களை நனைத்துவிட்டு மலைகளை நோக்கி எங்களது பயணத்தை தொடர்ந்தோம்.

10173609_10205604327934545_6705929268640213342_n 10170988_10205597830332109_582194513285950478_n

இப்பொது மலைகளில் இருந்து வரும் ஓடையின் வழியாக செல்லவேண்டும் அந்த சுத்தமான தெளிந்த தண்ணீரில் எங்களது கால்களை வைத்தோம் பயணத்தை தொடங்க. குளிர்ந்த சுத்தமான தண்ணீரில் கால்களை வைத்தவுடன் பல விடயங்கள் மனதில் தோன்றியது கழிவு நீராக இருந்தாலும் அதை சுத்தமான நீராக மாற்ற நாங்கள் இருகின்றோம் என்று கூவி கொண்டு இருக்கும் விளம்பரங்களும், குளிர்ந்த காற்றும் நீரும் நமது உடல்மீது படும்போது உணர்வுகளோடு உணர்சிகள் வருவது இயற்கையே நாம் உயிரினம் என்பதை உணர்த்துவது அதுதான். ஒரு குறிபிட்ட இடத்தில் உள்ள தண்ணீர் நமது உடல்மீது பட்டால் நமது “பாவம்” நீங்கும் “புண்ணியம்” பெருகும் என்று மக்களை இந்த இரண்டு வார்த்தைகளில் ஏமாற்றி அடிமை படுத்தி இப்பொது அதை மீண்டும் புண்ணியம் ஆக மாற்றுகிறோம் என்று அரசியல் செய்து கொண்டு இருப்பவர்களையும் நினைத்து கொண்டே மலை ஏறுவதற்கான வழியை அடைந்தோம்.

1422440_10205597841532389_3763714723116321320_n 10351078_10205604329294579_5817803326622926050_n

மலைகளையும் காடுகளையும் கடவுளாக வழிபட்டு அவற்றை தனது குழந்தைகள் போல் பாதுகாத்து கொண்டு இருக்கின்ற பழங்குடி மக்களின் பண்பாடான சிறு கோவில் எங்களை வரவேற்றன. அதனை கடந்து மெதுவாக மலைகளில் ஏறினோம் வழி முழுவதும் கற்கள் துகள்களை கடந்து சிறிது நேரம் ஏறிய பின் திரும்பி பார்த்தேன் பல மலைகளுக்கு நடுவில் நாம் இருக்கிறோம் என்பது உணரமுடிந்தது. கரு மேகங்கள் களைந்து வெண்மேகங்கள் வருகை தந்து சூரியனுக்கு வழிவிட்டது, நீண்ட தூரம் சென்ற பிறகு எங்களுக்கு எதிர்த்திசையில் மலையில் இருந்து இருவர் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டு இருந்தனர் அவர்கள் மலைகளை பாதுகாக்கும் பழங்குடி மக்கள், அவர்களிடம் சிறிது நேரம் பேசிவிட்டு எங்கள் பயணத்தை தொடங்கினோம். ஒரு குறிப்பிட்ட இடம் வரை ஏறியபின் ஒரு சரிவில் இறங்கினோம் அங்கு மலைக்கு நடுவில் இருந்து வரும் தண்ணீர் சில பாறை மீது பட்டு கிழ் இறங்கி சிறு அருவி போல் காட்சியளித்தது. அந்த சிறு அருவியில் நீண்ட நேரம் குளித்துவிட்டு மேலே ஏறினோம் கவனம் தவறினால் சரிந்து விடும் ஒரு சரிவு அது. மலைகளுக்கு சரிவுகள் தானே அழகு.

பின்பு நீண்ட நேரம் வளைந்து செல்லும் மலையில் எங்கள் பயணம் தொடங்கியது மலை ஏறுவது முதல் கற்கள் துகள்களாகவே இருந்தன. இந்த முறை வேறுஒரு சரிவில் இறங்கினோம் அதே தண்ணீர் சற்று உயரமான இடத்தில் இருந்து விழுந்தது மீண்டும் அந்த அருவியில் குளித்தோம் இப்பொது இலவசமாக உடம்பு வலி போக்கும் மருந்தாக அந்த தண்ணீர் இருந்தது. தண்ணீருக்கும் நிறை உண்டு என்ற அறிவியலின் உண்மை உடம்பில் விழுந்த தண்ணீர் அடியால் உரைத்தது. இன்னும் சிறிது நேரம் நடந்த மலைகளில் வாழும் மக்களை பார்க்கலாம் என்று ஆவலாய் இருந்தோம். அப்போது ஹுபர்ட் அய்யாவிற்கு அலுவலக பணி வந்து விட்டதால் மூவரும் வந்த வழி நோக்கி நடந்தோம். வழியில் மக்கள் பலர் மலை மீது ஏறிக்கொண்டு இருந்தார்கள் சிறுவர்கள் காட்டிற்குள் சுதந்திரமாக விளையாடி கொண்டு இருந்தார்கள் சில சிறுவர்கள் ஓடையில் ஆனந்தமாக நீராடி கொண்டு இருந்தார்கள். இந்த சிறுவர்களும் மக்களும் தான் சுதந்திரகாற்றை சுவாசிக்கின்றவர்கள். சுத்தமான இயற்கை காற்று மாசுபடாத குளிர்ந்த தண்ணீர் இயற்கை மீது காதல் கொண்டே பாடங்களை கற்று கொல்கின்றனர் இதுதானே சுதந்திரம். காட்டிலும் மலையிலும் எனது உடலை பாதித்த பல பருப்பொருட்களினால் ஏற்பட்ட உணர்வோடு சேர்ந்த உணர்சிகளின் வெளிப்பாடை எனக்கு நன்றாக தெரிந்த மொழியில் எனக்கு பிடித்த விடயங்களோடு தொடர்பு படுத்தி வெளிப்படுத்தினேன்.

10383683_10205604328254553_5887112338062248947_n 10525884_10205597827372035_3654265507894769768_n

மலையின் மீது உள்ள தண்ணீர் பல்வேறு வழிகளை கடந்து பாறைகளை தனக்குள் அடித்துவந்து அந்த பாறைகள் ஒன்றோடு ஒன்று மோதி பாறைகள் துகள்களாக மாற்றம் அடைந்து பின்பு அது மண்ணாக உருமாரி அந்த மண் தண்ணீரை சுத்தபடுத்தி அந்த தண்ணீரை வழியனுப்பி வைக்கிறது. இந்த மண் செயல் பாடு உருவாக பல ஆயிரம் வருடங்கள் ஆகும் முதலில் நாங்கள் பார்த்தது தண்ணீர் அதன்பின் மண் பின்பு நாங்கள் பார்த்தது பாறையின் துகள்கள். அந்த அறிவியலை படித்து இருக்கிறேன் இந்த காடும் மலையும் நேரில் காட்டியது. இயற்கையாக நடக்கும் நடைமுறையை தனது வாழ்கைக்கு ஏற்றவாறு அதனை அழிக்காமல் அதனோடு ஒன்றி காதல் கொண்டு பயன் படுத்துவதே பழங்குடி மக்கள்.

ஆற்றலுக்கு அறிவியலில் ஒரு விதி உண்டு “ஆற்றலை அழிக்கவும் முடியாது உருவாக்கவும் முடியாது ஒரு தன்மையில் இருந்து மற்றொரு தன்மைக்கு மாற்ற முடியும்” என்பது தான் அது. அதுபோல் இயற்கையை அழிக்காமல் ஒரு தன்மையில் இருந்து மற்ற தன்மைக்கு மாற்றி பயன்படுத்தி அதனை பாதுகாப்பதே பழங்குடி மக்கள் தான். இந்த சமூகம் இயங்குவது உற்பத்தி பொருட்களினால்தான் அந்த உற்பத்தி பொருட்களின் மூலதனம் காடுகளும் மலைகளும் என்று அறிந்து கொண்ட முதலாளித்துவம் அதனையும் அங்கு வாழும் மக்களையும் கொடூரமாக சுரண்டுகிறது மலைகளும் காடுகளும் தங்களுக்கு சொந்தம் என்று அதிகாரத்தை கையில் எடுத்து அடக்குகிறது. கடந்த இரண்டு நூறாண்டுகளாக உலகத்தில் உள்ள மலைகளையும் காடுகளையும் அங்கு வாழும் மக்களையும் முதலாளித்துவம் அழித்து கொண்டே வருகிறது தனது லாபத்திற்காக. மனிதர்களுக்கு இயற்கையின் பருப்பொருட்கள் உடல் மீது படும்போது உணர்சிகள் வருகிறது, அந்த பருப்பொருளை பயன் படுத்தி அறிவியலின் துணையால் உருவாகப்படும் உற்பத்தி பொருட்களை அனுபவிக்கும் போது உணர்சிகள் வருகின்றது, அந்த பருப்பொருளை அழித்து அதனை பாதுகாத்து வந்த மக்களையும் அழிக்கும் போது உணர்வுகளும் உணர்ச்சிகளும் இறந்து விடுகின்றன அப்படி உணர்வு உணர்ச்சி இறந்து விட்டால் அதனை பிணம் என்று கூரலாம். ஆனால் உயிர் உள்ளது அதனால் அந்த பெயர் சரிவராது குறிபிட்ட சில விடயத்திற்கு மட்டும் உணர்ச்சிவசப்பட்டு முக்கிய விடயத்திற்கு பிணமாக மாறுவதற்கு பெயர் புதிதாக வைக்க வேண்டும். பழங்குடிகளான சிவப்பு இந்தியர்களை விரட்ட வந்த அமெரிக்க ஜனாதிபதியடம் அந்த குழு தலைவர் சியன்டேல் பதில் இன்றும் உலகத்தில் புகழ் பெற்ற ஒரு பதிலாகும் இயற்கைக்கும் மனிதனும் உள்ள ஒற்றுமையை அழகாக உணர்த்தும் அந்த வார்த்தைகள். அந்த வார்த்தைகளை நன்கு ஆராய்ந்தால் முதலாளிதுவத்தின் கொடூரமும் அதனை அனுமதிக்கின்ற நாமும் எவ்வளவு கொடுமையானவர்கள் என்பது புரியும் அந்த வார்த்தைகள் உலகில் உள்ள அணைத்து பழங்குடி மக்கள் நமக்கு கற்று கொடுக்கும் பாடமாகும் அந்த வார்த்தைகள் இதோ “ஆகாயத்தை எப்படி விற்கவோ வாங்கவோ முடியாதோ அதே போல் நிலத்தை விற்கவோ வாங்கவோ முடியாது, நிலத்தை விற்பது என்கின்ற எண்ணம் எங்களுக்கு விநோதமாக உள்ளது, காற்றின் தூய்மையும் தண்ணீரின் தூய்மையும் நமக்கு சொந்தம் இல்லை, நமக்கு சொந்தம் இல்லாத ஒரு விடயத்தை எப்படி விற்க முடியும் காடுகள், மலைகள், விலங்குகள், பறவைகள், மனிதன் எல்லாம் இந்த உலகத்தில் ஒரே குடும்பம் தான்., எங்களின் தாகத்தை தீர்க்கும் இந்த நதிகள் எங்களுக்கும் உணவு அளிக்கும் இந்த நதிகள் எங்களின் சகோதரர்கள், எங்கள் சகோதரர்களிடம் நீங்களும் பரிவு காட்ட வேண்டும், இந்த நதியில் ஓடுவது தண்ணீர் மட்டும் அல்ல எங்கள் மூதாதையர்களின் குருதியும் தான், இந்த மண்ணின் ஒரு பகுதி நாங்களும் நீங்களும் தான் இந்த மண் எங்களுக்கு விலைமதிப்பு அற்றது உங்களுக்கும் தான், ஒரு விடயம் நிச்சயமாக தெரியும் இந்த மண் மனிதனுக்கு சொந்தம் கிடையாது மனிதன் தான் மண்ணுக்கு சொந்தம்”.  

10351394_10205597828372060_1421839366341694459_n

”மலைகளை பற்றியும் காடுகளை பற்றியும் அங்கு வாழும் மக்களின் வரலாறு பற்றியும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி கொண்டு இருக்கின்ற பசுமைநடை குழுவிற்கு பாராட்டுகள். பயணங்கள் வாழ்வில் பாடங்களையும்,அனுபவங்களையும் கற்று கொடுத்து கொண்டே இருக்கும் நமது தேடல்களை தீவிரப்படுத்திக்கொண்டே இருக்கும் இந்த பயணமும் எனக்கு அப்படித்தான் இந்த பயணம் செய்ய வாய்பளித்த முத்து கிருஷ்ணன் அய்யா அவர்களுக்கும் என்னுடன் பயணம் செய்த பசுமை நடை நண்பர்களுக்கும் நன்றி. இந்த மலைகளில் வாழும் பழங்குடி மக்களையும் அவர்களின் வாழ்கை முறை, இந்த சமூகத்தில் அவர்கள் படும் பாடு போன்ற பல வற்றை தெரிந்துகொள்ள அடுத்த பயணத்திற்கு பசுமைநடை நண்பர்களுடன் செல்ல ஆவலாக உள்ளேன். சிவப்பு இந்தியர்களின் தலைவர் கூரிய வார்த்தைகள் ஒவ்வொரு பசுமைநடைக்கு மலைகள் ஏறும்போது எனது மனதில் ஓடிக்கொண்டே இருக்கும் அவரின் குரல் உலகில் உள்ள எல்லா மலைகளிலும் காடுகளிலும் கேட்டுகொண்டே இருக்கின்றன. செவிடாக இருந்த எனது காதுகள் அந்த குரலை கேட்க வைத்தது பசுமைநடை பயணம் தான். மலைகளையும் காடுகளையும் இயற்கைவளங்களையும் முதலாளித்துவம் அழிக்கும் போது நமது கண்கள் குருடாகின்றன அவரது வார்த்தைகளை பார்க்க, நமது காதுகள் செவிடாகின்றன அவரது குரலை கேட்க, நமது உதடுகள் மௌனம் ஆகின்றன அதனை தட்டி கேட்க….இந்த இடத்தில் தான் நாம் மனிதர்களா இல்லை உணர்வு உணர்ச்சி செத்துப்போன பருப்பொருளா என்று கேள்வி எழுப்ப தோனுகிறது. இப்படி எனது உணர்வுகளை பாதித்த விடயத்தை எழுத்தாக வெளிப்படுத்தவேண்டும் என்று நினைத்துகொண்டு இருக்கும்போதே நானும் மது அண்ணாவும் இறங்கும் இடம் வந்தது அன்றைய பயணத்தை முடித்துவிட்டு மறுநாள் தெப்ப குளத்தின் பசுமை நடை பயணத்திற்கு தயாரானேன்……..இன்னும் அந்த தலைவரின் வார்த்தைகள் காதில் கேட்டு கொண்டே இருக்கிறது மலை ஏறும்போது மட்டும் தான் கேட்ட வேண்டுமா எல்லா நேரங்களிலும் நமது காதில் கேட்டுகொண்டே இருக்கும் அந்த வரிகளின் ஆழங்களை புரிந்து கொண்டால் மீண்டும் மேலே சென்று அந்த வார்த்தைகளை பாருங்கள் உங்களுக்கும் கேட்கும்……….

67266_10205597781650892_8328072304109478118_n 65528_10205597803211431_6647245971634056138_n

pc:cruz antony hubert

பாறை திருவிழா

1269626_837022299676212_6987574291198556021_o

அழகிய மலை அதன் அடியில் தாமரை குளம் பக்கத்தில் ஒரு ஆலமரம் அங்கு நடக்க போகும் பாறை திருவிழாவை எதிர்நோக்கி ஒரு மாதம் கழிந்து திருவிழாவிற்கு இரண்டு நாட்கள் முன் கல்லூரி வேலைகளை தள்ளி வைத்துவிட்டு மதுரைக்கு சென்று கொண்டு இருந்தேன் சென்னையில் இருந்து. இதுவரை சென்ற பசுமைநடை பயணங்கள் அனுபவமும் கடந்த முறை விருச்சதிருவிழாவில் கலந்துக்கொள்ள முடியாத ஏக்கமும் பாறை திருவிழா மீது அதிக ஆர்வத்தை துண்டியது. ஒரு மாதம் முன்பு முத்துகிருஷ்ணன் அய்யா பாறை பற்றி ஒரு வரி கூறினார் “மொழிகள் தோன்றாத காலத்தில் மனிதர்கள் தங்களின் உணர்வுகளை பாறையில் வரைந்து தான் வெளிபடுதினார்கள் நமது வரலாறு அனைத்தும் பாறைகளில் இருந்து தான் பெறப்பட்டன என்று அதில் இருந்து பாறை திருவிழாவில் ஒரு அறிவியல் வரலாறு இருந்கின்றது என்று புரிந்தது எனது ஆர்வம் மேலும் அதிகரித்தது. ஒருமாதமாக திருவிழாவிற்கு பசுமைநடை நண்பர்களுடன் சேர்ந்து வேலைசெய்ய முடியவில்லை என்ற ஏக்கம் இருந்தாலும் திருவிழாவை பற்றி எனது நண்பர்களிடம் அதிக விழிப்புணர்வு ஏற்படுத்தினேன் மாணவர்களுக்கு பாடம் எடுக்கும் போதும் பாறை பற்றிய விழிப்புணர்வு அதிகம் ஏற்படுத்தினேன். பூமிக்கு அடியில் உள்ள பாறைகள் உடைந்து பிரிந்ததால் தான் பல கண்டங்கள் உருவானது அதில் இருந்து விலங்குகள் மனிதர்கள் என உருவானதிற்கு காரணம் பாறைகள் தான் ஆதி மனிதர்கள் அறிவியலை பாறைகளின் மூலம் தான் வளர்த்தார்கள்.

20140927_135149அவர்களின் கருவிகளும் பாறைகளை வைத்து தான் உருவாக்க பட்டது, இருளில் மலைகளை பார்த்து பயந்த ஆதி கால மனிதர்கள் கடவுளை உருவாக்கி பயத்தை போக்கிகொண்டார்கள் அதனின் பரிணாம வளர்ச்சிதான் பல மதங்களும், கடவுள்களும். இப்படி பாறைகளை வைத்து உருவான இந்த உலகத்தின் வரலாறை நமக்கு தெரியப்படுத்துவதே பாறைகளில் உள்ள கல்வெட்டுகள் தான். இப்படி நமக்கு வரலாறு கற்று கொடுத்த பாறைகளுக்கு விழா கொண்டாடுவது ஒரு வரலாறாகும் என்று நினைத்துகொண்டே இந்த விழாவில் நாமும் கலந்து கொள்ளபோகிறோம் என்ற மகிழ்ச்சியில் மதுரை வந்து இறங்கினேன். வேலைகள் அதிகமாக செய்யலாம் என்று எதிர்பார்த்து வந்த எனக்கு ஏமாற்றம் தான் பசுமைநடை குழு நண்பர்கள் அணைத்து வேலைகளையும் அதிவேகமாக முடித்துவிட்டார்கள் ஒருமாத காலத்தில். அவர்களுக்கு உதவி செய்ய அவர்களுடன் இருந்த போது பல அனுபவங்கள் கிடைத்தது. இது முழுக்க இயற்கையை சார்ந்த ஒரு திருவிழா என்பதால் சுற்றுசூழல் பாதுகாக்கும் விதமாக ஒரு நெகிழி கூட பயன்படுத்தவில்லை வழிகாட்டி பலகைகள் அனைத்தும் நண்பர்களின் கை வண்ணத்தாலும் உழைப்பாலும் உருவாக்க பட்டது. சனிக்கிழமை மதியம் திருவிழா நடக்க இருக்கும் இடத்திற்கு சென்றோம், அங்கே மது அண்ணா, வேல்முருகன் அய்யா, சதீஷ் அண்ணா வேலைகளை பார்த்துகொண்டு இருந்தார்கள். அவர்களுடன் சேர்ந்து களத்தில் இறங்க தயாராக சேகர் அண்ணா,அபினாஷ்யும், நானும் தயாரானோம். இதுவரை முகபுத்தகத்தில் மட்டும் பார்த்த அந்த அழகிய மலையை நேரில் பார்த்தது மகிழ்ச்சியின் உச்சிக்கும் கொண்டு சென்றது.

20140927_135258இந்த இடத்தில் நாளை மக்கள் அனைவரும் ஒன்று கூட போகிறார்கள், அறிவு தேடல்கள் அதிகமாகும், பல திறமைகள் ஒன்று சேர்ந்து அதில் இருந்து வெளியே வருவது தான் பரிணாம வளர்ச்சி அப்படித்தான் பல திறமைகள் உள்ள மக்கள் அனைவரும் ஒன்று கூடி அவர்களுது தேடல் அதிகமாகி அதிலிருந்து பல கலைஞ்சர்களை பசுமைநடை உருவாகிக்கொண்டு இருகின்றது. நாளை நடக்க போகும் நிகழ்வுகள் எனது கண்கள் முன் ஓடிக்கொண்டு இருக்கும்போதே ஒரு நல்ல செய்தி வந்தது மக்கள் பணத்தை சுரண்டி உழல் செய்த குற்றத்திற்காக முதல்வருக்கு தண்டனை அளிக்கப்பட்டது அதனால் தமிழ்நாடு முழுவதும் சட்ட ஒழுங்கு சீர் குலைந்தது என்று, அவர் கைது ஆனது மகிழ்ச்சி தந்தாலும் பேருந்துகள்  ஓடவில்லை என்ற செய்தி வருத்தத்தை தந்தது. பசுமைநடை குழு நண்பர்கள் உறுதியாக வேலை பார்த்து கொண்டு இருந்தார்கள் எனக்கும் தன்னம்பிக்கை அளித்தார்கள். சமையல் செய்ய சரக்குகளை அனைவரும் இறக்கி வைத்தோம் அப்போதே சட்ட ஒழுங்கு பிரச்சனை மறைந்துபோனது மனதைவிட்டு அடுத்து குளத்தை சுற்றி உள்ள நெகிழி மற்றும் கண்ணாடி கழிவுகளை இரண்டு குழுவாக பிரிந்து சுத்தம் செய்தோம்.

20140927_155317

வேலைகள் சற்று முடிந்தபின் அந்த கிராமத்து சிறுவர்களிடம் பேசினேன் அந்த கிராமத்தின் சூழல் அவர்களின் நிலைமைகளை அந்த சிறுவர்களிடம் இருந்து தெரிந்து கொண்டேன் அவர்களிடம் நாளை நடக்க இருக்கும் பாறை திருவிழாவை பற்றி அறிமுகபடுத்தி நாளை வந்து அவசியம் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்தேன்.

20140927_174427

நானும் சேகர் அண்ணாவும் மலையில் உள்ள சமண கல்வெட்டுகளை பார்த்தோம் பின்பு மலையில் உச்சியில் ஏறினோம் அங்கு இருந்து மதுரையை பற்றி அவர் விரிவாக கூறினர். ஊருக்குள் அதிக  பதற்றம் நாங்கள் அமைதியாக மலை உச்சியில் இருந்து பல நினைவுகளுடன் அன்றைய மாலை பொழுதை கழித்துவிட்டு இறங்கினோம். மீண்டும் வேலை தீ பொறி போல் பறந்தது. இரவு உணவு முடிந்தவுடன் ஒரு குழுவாக சேர்ந்து  பாறை திருவிழாவை பாறையில் வடிவமைக்க அருகில் இருந்த சிறிய கற்களை வைத்து வடிவமைத்தோம். அது முடிந்தவுடன் இரவு பனிரெண்டு மணிக்கு வேல்முருகன் அய்யா மற்றும் அண்டோனி அய்யா இருவரும் தலைமை தாங்க நாங்கள் அனைவரும் பாறைத்திருவிழாவின் பதாகைகளை வழி முழுவதும் கட்ட சென்றோம். முடித்தவுடன் பொறுமையாக நடந்தது வரும்போது அந்த அழகிய மலையை இரவில் குளிர்ந்த காற்றுடனும் கருகிய மேகத்துடன் பார்த்து ரசித்துக்கொண்டு வந்தேன். மாலை பொழுதில் ஒரு அழகு, இரவில் ஒரு அழகு. நாகரிக வளர்சிக்கு முன் மனிதன் மலைகளை பார்த்து பயந்தான் பின்பு அது எப்போது ரசனையாக மாறியது என்று எனக்குள் பல கேள்விகளை கேட்டுகொண்டே மலையை பார்த்தபடி நகர்ந்தேன்  ஆலமரம் கீழ் அனைவரும் கூடினோம். ஷாஜஹான் அய்யா மற்றும் முத்துகிருஷ்ணன் அய்யா இருவரும் வீட்டிற்கு கிளம்பினார்கள் அனைவரும் களைப்பில் மரத்தடியில் உறங்கினார்கள். நான் எதிர்பார்த்த தருணம் வந்தது மதியம் முதலில் அந்த மலையை பார்க்கும்போதே நானும் சேகர் அண்ணா அபினாஷ் மூவரும் முடிவுசெய்தோம் இரவு மலை மீது தான் தூங்க வேண்டும் என்று. வீட்டில் மொட்டை மாடியில் திறந்த வெளியில் உள்ள காற்றை சுவாசித்து உறங்கும்போது ஒரு புத்துணர்ச்சி வரும் ஆனால் அதைவிட அதிக மகிழ்ச்சி மலையில் சென்று உறங்கபோகிறோம் என்பதை நினைக்கும் போது.

20140927_174851

நிச்சயமாக இப்படி ஒரு சந்தர்ப்பம் வாழ்கையில் என்றோ ஒரு முறை தான் வரும் என்பது தெரிந்த விடயம் அதை அனுபவித்தே தீர வேண்டும் என்று நாங்கள் மலையில் ஏறி உறங்கினோம். கிழே மதுரையே அமைதியாக உறங்கிக்கொண்டு இருக்கிறது எனது நினைவுகள் இரண்டாயிரம் வருடம் முன்பு சென்றது அருகில் இருந்த சிற்பங்களை பார்த்தவுடன் இதை செதுகியவர் நாம் உறங்கிக்கொண்டு இருக்கின்ற இடத்தில் தான் தங்கி உறங்கி செதுக்கி இருப்பார்கள் அதன் பின் நடந்த வரலாறுகளை நினைத்துகொண்டு இருந்தேன் மீண்டும் மலையில் பாறையை உற்றுநோக்கி பார்த்துகொண்டு இருக்கும்போது பயம் என்ற உணர்வு ஏற்பட்டது. இப்பொது  ஆதிகால மனிதன் நினைவிற்கு சென்றுவிட்டேன் மாலை பார்த்து ரசித்த மலை இப்பொது அச்ச உணர்வை தருகிறதே என்று யோசித்தேன் அப்போது ஒரு விடயம் தெளிவு பெற்றது எப்படி ஆதி கால மனிதர்களுக்கு இயற்கையின் மீது அச்ச உணர்வு ஏற்பட்டது அதை வைத்து மதங்கள்,சமயங்கள்,வர்கங்கள் தோன்றின போன்ற நினைவுகள் உள்ளுக்குள் ஓடிக்கொண்டு இருக்கும்போதே முகத்தில் மழைத்துளி நினைவினால் பல நூற்றாண்டுகளுக்கு சென்ற என்னை இந்த நூற்றாண்டிற்கு கொண்டு வந்தார்கள்.

10432103_837018506343258_8405225259543949579_n

மூவரும் இரண்டாம் நூற்றாண்டு இடத்தின் வரலாறில் இருந்து கிழே இறங்கினோம் பின்பு பதினைந்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோவிலில் படுத்து உறங்கினோம். விடிந்ததும் குளிக்க கிராமத்திற்கு சென்றோம் மீண்டும் காலையில் மலையை ரசித்தபடி சென்றேன். எனது கண்களுக்கு இரண்டு நாட்கள் அந்த மலைதான் கதாநாயகன் போல் காட்சியளித்தது. ஒருமாதமாக எதிர்பார்த்த நாள் வந்தது என்ற மகிழ்ச்சியில் குளித்து விட்டு விழா நடக்கும் இடத்திற்கு சென்றோம் மக்கள் பல தடைகளை தாண்டி வந்து கொண்டே இருந்தார்கள். வெயில் அடிக்கும்போதே பசுமையாக காட்சியளித்த அந்த இடம் மழையின் உதவியால் இன்னும் பசுமையாக காட்சியளித்தது. இது முழுக்க இயற்கை திருவிழா என்பதால் இயற்கைக்கு பசுமைநடை மீது காதல் வந்து விட்டதா என்று தெரியவில்லை மழை பெய்துகொண்டே இருந்தது. மழைக்கு நம்மை பிடித்துவிட்டது என்பது பசுமைநடை குழுவிற்கு புரிந்து விட்டது அதனால் அதனோடு கை கோர்த்து நாங்கள் வேலையை பார்த்துக்கொண்டே இருந்தோம். அந்த மழையில் மலையை பார்த்துக்கொண்டே குளத்தை ரசித்துக்கொண்டு ஆலமரம் அடியில் ஆவி பரக்க காலை உணவு உண்பது பாறை திருவிழாவிற்கு வந்த மக்களுக்கு மட்டுமே கிடைத்த ஒரு பாக்கியம். அனைவரும் மலையில் சென்று வரலாறு தெரிந்து காலை உணவு முடிந்தவுடன் மழையும் நின்றது. இந்த நேரத்தில் பசுமைநடை படை விழாவிற்கான அணைத்து ஏற்பாடுகளையும் செய்து முடித்தது. காலை உணவு முடிந்தவுடன் விழா தொடங்கியது முத்துகிருஷ்ணன் அய்யாவின் உரை ஒரு சிறிய தூறல் போல் ஆரம்பமாகி அடைமழைபோல் அனைவரின் கவனத்தையும் ஒருங்கிணைத்தது. வரலாறை மக்களுக்கு கற்றுகொடுக்கும் பசுமைநடை உருவான வரலாறு தெரிந்தது.

10003630_837017749676667_2289648865055744447_o

1273131_837018276343281_2465891997733357399_o

பின்பு பேசிய சாந்தலிங்கம் அய்யா, பாஸ்கரன் அய்யா, ஊர் தலைவர் அவர்களின் உரை பசுமைநடை செய்த பணிகள் வரலாறு போன்ற பல வற்றை புரியவைத்தது அவர்கள் பேசியதை தனி பெரும் கட்டுரையாக எழுதவேண்டும். விழாவில் பேச்சாளர்கள் உரை அனைத்தும் அறிவியல் மற்றும் வரலாற்று தகல்வல்கள் அதனை அனுபவக் கட்டுரையுடன் சேர்க்காமல் தகவல் கட்டுரையுடன் சேர்க்கலாம் என்று நினைக்கிறன். ஒரு பக்கம் அறிவியல் மற்றும் வரலாற்று தகவல் அனைவர்க்கும் சேர்ந்துகொண்டு இருந்தது மறுபுறம் குழந்தைகளுக்கு விளையாட்டு போட்டிகள்,அவர்களுக்கு தனித்திறமை வழங்கும் பயிற்சிகள் நடைபெற்று கொண்டு இருந்தன. அதை அருமையாக பசுமைநடை குழுவினர்கள் ஒருங்கிணைத்து செயல்படுத்திக்கொண்டு இருந்தார்கள். மத்திய உணவு முடித்துவிட்டு குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்த மூன்று நாட்களில் பல விடயம் கற்றுக்கொண்டேன் குறிப்பாக  ஒருங்கிணைப்பு, திட்டமிடுதல் போன்றவற்றை  அதிகம் கற்றுக்கொண்டேன். கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்டத்தில் ஒருங்கிணைக்கும் போது நாங்கள் செய்த தவறுகள் இங்கு புரிந்தது. திருவிழா முடித்து அனைவரும் கலைந்தார்கள் கடைசியாக அந்த இடத்தை சுத்தம் செய்துவிட்டு சமையல் சாமான்களை  வண்டியில் ஏற்றி நாங்களும் கிளம்ப தயாரானோம் நேற்று மாலை இருந்த அதே அமைதி நிலவியது சிறு வித்யாசம் அனைவரின் மனதிலும் பல மகிழ்ச்சி,அனுபவம், நினைவுகள் என்று ஓடிக்கொண்டு இருந்தன. வண்டியில் ஏரி நாங்கள் அந்த இடத்தை விட்டு நகர்ந்தோம் எனது கதாநாயகனை மீண்டும் பார்த்தேன் பல ஆயிரம் நூற்றாண்டுகளாக கம்பிரமாக நின்று கொண்டு பரிணாம வளர்ச்சியின் மூலம் உருவான உயிரினங்களையும் மனிதர்களையும்  அவர்களால் உருவான பல வரலாறுகளையும் இன்று நடந்த திருவிழாவையும் அமைதியாக  பார்த்துகொண்டு இனி வரப்போகும் வரலாறையும் எதிர்நோக்கி காத்துகொண்டு இருந்தது அந்த மலை. அந்த மலையின் அழகையும் அது எனக்கு ஏற்படுத்திய நினைவுகள் என் மனதில் ஓடிக்கொண்டு இருக்கும்போதே மலை எனது கண்களை விட்டு மறைத்தது……..வேலைகள் முடிந்தவுடன் மதுரையில் இருந்து சென்னை செல்லும்போது மனதில் உள்ள ஒரு கேள்வி அடுத்த நடை எப்போது வரும் என்பதுதான்………………

10471256_837017499676692_2262835165739397296_n