மனிதனின் உணர்வுகள் தன் கண்களால் காணும் ஒவ்வொரு காட்சியை பொருத்தது மட்டுமல்ல வாழ்வு முழுவதும் இந்த சமூகத்தை அவன் எப்படி புரிந்துகொண்டுள்ளான் என்பதை பொறுத்ததே, அதேபோல் தான் சமூகமும் மனிதனுக்கு என்ன கற்று கொடுத்தது என்பதும் ஒரு நாணயத்தில் இரு துருவம் போல் தான் இவை இரண்டும். காடுகளை, கிராமங்களை, மலைகளை பார்க்கும் போது மனிதனுக்குள் வருகின்ற உணர்வு சமூகத்தை அவன் எப்படி பார்க்கிறான் சமூகம் அவனுக்கு என்ன கற்றுகொடுத்தது என்பதை பொறுத்ததே. பசுமைநடை பயணம் ஒவ்வொன்றும் ஒருவிதமான உணர்வுகளை ஏற்படுத்தியது அந்த உணர்வை பொறுத்துதான் அனுபவமும் புரிதலும் உண்டானது, எனது பார்வையில் பசுமைநடை தாண்டிக்குடி பயணத்தில் ஏற்பட்ட அனுபவங்களை பகிர்ந்துகொள்கிறேன்.
நகர மக்களுக்கு கிராமம், காடு, மலைகள் என்றால் மனதில் உதிக்கும் உணர்வு அழகும் அமைதியும் மட்டும்தான். தனது இயந்திர வாழ்கையில் இருந்து சற்று விலக இந்த இரண்டும் அவசியம், இந்த இரண்டையும் தாண்டி மக்கள் சிந்திக்க வாய்ப்பு குறைவே. இதையும் தாண்டி நமது சிந்தனைகளை அதிகமாக இழுத்து செல்ல பசுமை நடை பயணம் உதவுகிறது அணைத்து இடத்திற்கு பின்னால் உள்ள வரலாறு மக்களின் வாழ்கை முறை பற்றி அறிந்து கொள்ள பசுமை நடை உதவுகிறது. கொடைகாணல் என்றால் நகர மக்களின் மனதில் இந்த சமூகம் கற்றுகொடுத்தது அது ஒரு சுற்றுலா தளம் அழகிய பிரமாண்ட மலை தொடர்கள் உள்ள இயற்கையான இடம் என்றுதான். அதையும் தாண்டி மலை கிராமங்களில் வாழும் மக்களின் வாழ்கை, பண்பாடு, வரலாறு போன்ற எதுவும் மக்களுக்கு இந்த சமூகம் தெரியபடுத்தவில்லை. சமூகத்தில் ஒரு பகுதியாக உள்ள பசுமைநடை இந்த பணியை செய்வது பாராட்டுக்குரியது.
கொடைகாணல் மலை முழுவதும் உள்ள வரலாற்று சின்னங்களான கர்த்திட்டைகளை காப்பதற்கு பசுமைநடை குழு எடுத்த முயற்சி வரலாற்று கண்காட்சி அமைப்பது. இந்த கண்காட்சி வழியாக உலகிற்கு இந்த வரலாற்றை தெரியப்படுத்தும் முயற்சிதான் இது, கலைகளுக்கு பசுமை நடையில் பஞ்சமே இல்லை எழுத்து, ஓவியம், புகைப்படம் என அணைத்து கலைஞ்சர்களின் சங்கமம் தான் பசுமைநடை. இந்த கண்காட்சியை அனைவரும் தங்களின் கலைத்திறமையை பயன்படுத்தி உலகிற்கு சமூக ஊடகங்கள் வழியாக தெரியப்படுத்துவார்கள். வரலாற்று சின்னங்களை பாதுகாப்பதே அந்த கிராமத்தையும் அங்கு வாழும் மக்களையும் பாதுகாக்கத்தான், அரசாங்கம் நடத்தும் அட்டூழியங்களை எதிர்த்து தொடர்ந்து போரடிகொண்டிருகின்ற மக்களுக்கு இந்த வரலாற்று கண்காட்சி கூடுதல் பலம் சேர்க்கும். அரசாங்கம் அங்கு என்ன செய்துகொண்டு இருகின்றது? எதனால் மக்கள் போராடிக்கொண்டு இருகிறார்கள்? பார்போம்.
நகரங்கள் அதிகமாக உருவாகின்றது என்றால் தொழில்துறை அதிகமாக வளர்கின்றது என்பதை புரிந்துகொள்ளலாம். அணைத்து வளர்சிக்கும் மூலதனம் காடுகள், மலைகள், கிராமங்கள் தான், நகரங்கள் அதிகம் பெருக இவை மூன்றும் அதிகமாக அழியும் அதை நம்பி வாழும் மக்களும் அழிக்கப்படுவார்கள் இது உலகளவில் உள்ள உலகமயமாக்களின் சூதாட்டம். இந்த சூதாட்டத்தில் அந்த மூன்று இடங்களும் அங்கு வாழும் மக்களும் பந்தய பொருள் நாம் அனைவரும் பகடைகள், விளையாடுபவர்கள் நம் கண்களுக்கு தெரியாதவர்கள். இந்த ஆட்டத்தில் எந்த கிராமமும் மலைகளும் காடுகளும் தப்பியதில்லை தாண்டிக்குடி மட்டும் தப்புமா என்ன? இந்த விளையாட்டு உலகில் எல்லா இடங்களிலும் விளையாட படுகிறது விளையாட்டிற்கு பாதுகாவலர்கள் அந்தந்த நாட்டு அரசாங்கமே. இந்தியாவில் மேற்கு தொடர்ச்சி மலையில் அவர்கள் விளையாடும் விளையாட்டிற்கு உதவுவது அரசாங்கம் தான். தன் வசதிகேற்றாற்போல் அரசியல் வாதிகள் சட்டத்தை மாற்றுகிறார்கள் அரசாங்க அதிகாரிகளை கையில் வைத்துகொண்டு.
சட்டங்கள் ஆயுதமாக மாறி அங்கு வாழும் மக்களையும் காடுகளையும் அழிகின்றன. அங்கு வாழும் மக்களை அழிக்க அரசாங்கம் பிறப்பித்த புதிய திட்டம் வனவிலங்கு சரணாலயம். வனவிலங்குகள் சுதந்திரமாக சுற்றி திரியும் வனங்களை சரணாலயமாக மாற்றுவது வனங்களை அழிக்க தடையாக இருக்கும் மக்களை அங்கிருந்து விரட்டதான் அதற்கு அவர்கள் பயன்படுத்தும் ஆயுதம் தான் இந்த சட்டம். வெள்ளையர்கள் ஆட்சி காலத்தில் நடந்த சுரண்டலில் காடுகள் தப்பியது, இன்றைய ஆட்சி சுரண்டலில் காடுகள் அழிகின்றது அதனை சார்ந்த மக்களும் அழிகின்றனர். அதிக லாபம் தரகூடிய பழங்களை விலைவித்தவர்கள் இன்று சட்டத்தின் மிரட்டலால் காய்கறிகளை விளைவிக்கும் படி நசுக்கபடுகிறார்கள், காட்டெருமைகளை விட்டு விவசாய நிலங்களை நாசம் செய்வது, விவசாயத்தை பற்றி தெரியாதவர்கள் விவசாயம் செய்ய பல நிபந்தனைகள் போடுவது, காட்டிற்குள் செல்ல நேரத்தை முடிவு செய்வது என பல அட்டூழியங்கள் இந்த அரசாங்கம் செய்து கொண்டு இருகின்றது சனிக்கிழமை இரவு தாண்டிக்குடி கிராம மக்கள் தங்கள் கிராமத்தில் நடக்கும் கொடுமைகளை பகிர்ந்துகொண்ட போது மனதிற்கு தோன்றிய விடயம் மக்களை அவர்களின் சொந்த இடத்தில் இருந்து அகற்ற வேண்டும் என்றால் சட்டங்களை ஆயுதமாக பயன்படுத்துவார்கள், அதாவது அடிப்படை வாழ்வாதாரங்கள் பாதிகப்படும் வகையில் சட்டங்களை மாற்றுவார்கள், பின் அந்த சட்டங்களை மீறிவிட்டார்கள் என்று கூறி சர்வதிகாரத்தை பயன்படுத்துவார்கள் தாண்டிக்குடியில் நிலைமையும் இதுதான்……..இந்தியாவில் அணைத்து கிராமத்திலும் நடைமுறையில் இருக்கும் அரசு பயங்கராவதம் இது…..மலைபகுதிகளில்,காடுகளில் இந்த பயங்கரவாதம் உச்சகட்டத்தில் இருக்கும்……..இந்த ஜனநாயக சர்வாதிகாரத்தை மக்களுக்கு புரியவைப்பதில் பசுமை நடைக்கு அதிக பங்கு உள்ளது……..நடந்த பசுமை நடையின் வரலாற்று கண்காட்சி கிராம மக்களின் ஜனநாயக போராட்டத்திற்கு அதிக பலம் சேர்க்கும்.
வரலாறு ……இதற்கு பல பரிணாமங்கள் உண்டு மக்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதும் வரலாறே, மக்கள் எப்படி அழிக்கபட்டார்கள் என்பதும் வரலாறே, மக்கள் எதனால் அழிக்க பட்டார்கள் என்பதும் வரலாறே. பெரும்பாலும் மக்கள் நன்றாக வாழ்ந்தார்கள் மன்னர்கள் நன்றாக ஆட்சி புரிந்தார்கள் என்று தான் பெரும்பாலான சமூகத்திற்கு வரலாறு கற்றுகொடுக்க படுகிறது. கல்வெட்டுகளில் மன்னர்களை புகழ்ந்து தள்ளும் அனைவரும், இன்றைய அரசாங்கத்தை புகழ்பவர்களும் ஒன்றுதான் இந்த இரண்டு ஒப்புமையிலும் அரசாங்கத்தின் ஒரு பக்கம் மட்டும் வரலாறாகி போனது. நல்லாட்சி என்பது சரி அது யாருக்கு என்பதில் தான் வரலாற்றின் சிக்கல் ஆரம்பமாகிறது. வரலாற்றின் மறுபக்கம் இருட்டிலேயே கிடக்கிறது நடந்து முடிந்த அணைத்து விடயமும் வரலாறுதான். பல வருடங்கள் கழித்து தாண்டிக்குடியின் வரலாற்றை தேடும் மக்களுக்கு பசுமைநடை மூலமாக தெரியவருவது மக்கள் எப்படி வாழ்ந்தார்கள் எப்படி அழிக்கப்பட்டர்கள் என்னும் செய்தி, சமூகத்தின் இரு முகங்களையும் வரலாற்றின் வழியே அறிவார்கள். இந்த அழிவுக்கு காரணம் சில அரசியல் வாதிகள் அரசாங்க அதிகாரிகள் சில வியாபாரிகள் என்று கூறி இந்த சமூகம் தப்பித்து கொள்ள நினைக்கிறது, இந்த கூற்று உண்மையென்றால் அந்த இடத்தில் இருப்பவர்களை எடுத்துவிட்டு புதிய நபர்களை நியமித்தல் சிக்கல் தீர்ந்துவிடவேண்டுமே ஆனால் வரலாறு நமக்கு கற்றுகொடுத்தது அணைத்து காலகட்டத்திலும் இந்த மூன்று இடத்தில் இருப்பவர்கள் சமூகத்தை கொடூரமாக அழிகிறார்கள் என்றுதான், அவர்கள் அனைவரும் இந்த சமூகத்தில் இருந்து தான் வருகிறார்கள் என்பதை இந்த சமூகம் மறந்துவிடுகிறது, அனைத்தும் சமூகத்தில் இருந்துதான் பிறக்கின்றது. அனைவரும் நோய்களுக்கான அறிகுறிகளை கண்டு சினம் கொள்கிறோம், வருந்துகிறோம், நோய் எங்கு உள்ளது என்பதை கண்டுபிடிக்க மறந்து விடுகிறோம் அது நம்மிடமே இருக்கிறது என்று தெரிந்தால் மீண்டும் பழைய இடத்திற்கு சென்று வெற்று சினம் கொள்கிறோம் போலி வருத்தம் அடைகிறோம். தொடர்ந்து சமூகத்தை உன்னிப்பாக கண்காணிப்பதே ஒரு கலைதான் அந்த கலையில் எத்தனை கொடூரங்கள், மகிழ்ச்சிகள் இரண்டையும் ஒரு கண்களில் காண பழக வேண்டும் மகிழ்ச்சியை மட்டுமே பார்க்க நமது சமூகம் நம்மை பழக்க படுத்திவிட்டது. இந்த பழக்கத்தை இப்படி பட்ட பயணங்களால் மட்டுமே மாற்ற முடியும்……….அடுத்த பசுமைநடை பயணம் நோக்கி காத்துகொண்டு இருக்கிறேன்………..
good writing…keep it up..go ahead
LikeLiked by 1 person