நான் கண்ட அறிவியல் அறிஞர்

“இதுவரை எனக்கு பிடிக்காத பாடம் அந்த ஆசிரியர் அந்த பாடத்தை எடுத்தவுடன் மிகவும் பிடித்துப்போனது” இந்த அனுபவம் நம் அனைவரின் வாழ்வில் நிச்சயமாக நடந்திருக்கும் அப்படி ஒரு நிகழ்வு சிலர் பள்ளி, கல்லூரி அனுபவத்தில் இல்லாமலே இருந்திருக்கும். இந்த அனுபவம் அனைத்திற்கும் காரணம் ஆசிரியர்தான் மாணவ, மாணவிகளுக்கு ஒரு பாடத்தின் மேல் ஆர்வம் ஏற்படுத்துவதும் ஆர்வத்தை மழுங்க செய்வதும் ஆசிரியரிடம் தான் உள்ளது. வகுப்பறை பல அற்புதங்களை நடத்தும் என்பதில் மாற்றுகருத்து இல்லை. அறிவியலை பொறுத்தவரை நமது நாட்டில் உள்ள வகுப்பறைகள் நமது மாணவ மாணவிகளை சிந்திக்க  வைக்காமல் மனப்பாடம் செய்ய பழக்க படுத்துகிறது அதனால் அடிப்படை விதிகளை பற்றி தெரியாமல் தொழில்நுட்ப கூலிகளாக அனைவரும் உருவாகப்படுகிறார்கள் என்பதை மறுபதற்கில்லை, அதே வேளையில் தொழில்நுட்ப கூலிகளாக அனைவரும் மாறுவதற்கு இது மட்டும்தான் காரணம் என்று சொல்லவில்லை. இது அணைத்து துறைகளிலும் செயல்முறை படுத்தபடுகிறது. இந்த சூழலில் மிக அரிதான சில சமூக ஆர்வம் உள்ள ஆசிரியர்களே மாணவ, மாணவிகளுக்கு பாடம் எடுப்பதை எளிமையாக புரியவைக்க தனது உழைப்பை செலுத்தி நடைமுறை படுத்துகிறார்கள். அப்படிப்பட்ட மனிதர்களில் நான் சந்தித்த மிக முக்கியமான மனிதர் அழகர்சாமி அய்யா

ஒரு  வருடத்திற்கு முன் மதுரையில் ஒரு மருத்துவமனையில் அழகர்சாமி அய்யாவை பற்றி பலரின் சொல்லாடல் வழியாக அறிமுகம் கிடைத்தது. “இந்த நிலைமையில் நாளைய மறுநாள் டெல்லியில் நடக்கும் தேசிய அறிவியல் போட்டியில் கலந்து கொள்ளும் எனது மாணவனை வரசொல்லுங்கள் என்று சைகையில் கூறுகிறார்” என்று அய்யாவின் மகள் எனக்கு கூறிய வார்த்தைகளின் வழியாக தான் இவரின் அறிமுகம் கிடைத்தது. மாநில அளவில் நடந்த அறிவியல் போட்டியில் தனது மாணவனை வழிநடத்தி வெற்றிபெறசெய்து அடுத்து தேசிய அளவில் நடைபெறும் போட்டிக்கு வழிநடத்த இன்னும் மூன்று நாட்களில் வருகிறேன் என்று தருமபுரியில் இருந்து தனது சொந்த ஊரான மதுரைக்கு வரும்போது நடந்த விபத்தில் மார்பெளும்புகள் உடைந்து நுரையீரலில் குற்றி பலத்த காயத்துடன் ICU வில் இவர் பிழைப்பாரா மாட்டாரா என்ற சூழ்நிலையில்  பேசமுடியாமல் வெறும் செய்கையால் மட்டுமே டெல்லியில் நடக்கும் தேசிய அறிவியல் போட்டியில் கலந்து கொள்ளும் எனது மாணவனை வரசொல்லுங்கள் என்று மற்றவர்களுக்கு புரியவைதுள்ளார். ஒரு மனிதனுக்கு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அறிவியல் கற்று கொடுக்க, வகுப்பு எடுக்க இவ்வளவு ஆர்வமா என்று வியந்தேன் எழுபது வயதில் மிக கடுமையாக பாதிகப்பட்ட விபத்தில்  தனது உடல் பாகங்கள் அசையாத நிலைமையிலும் அவருக்கு இருக்கும் அந்த வேகம், தன்னம்பிக்கை எனக்கு வாழ்வில் பல புரிதல்களை ஏற்படுத்தியது. அவரின் குடும்பத்தில் ஒரு வருடத்திற்கு மேலாக தொடர்பில் உள்ளேன் ஆனால் அவரின் பணி குறித்து இதுநாள்வரை தெரிந்தது இல்லையே என்ற வருத்தமும், இனி எப்போது அவரை பார்க்க போகிறோம் என்ற ஏக்கமும் என்னுள் அதிகரித்தது. அவரின் குடும்ப நபர்களிடம் அவரை பற்றி விசாரித்தேன் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அறிவியலை எளிதாக செயல்வடிவில் புரியவைத்து, அவர்களின் அறிவியல் ஆர்வத்தை அதிகரிப்பதே தனது பணியாக இருபது ஆண்டுகளாக செய்துகொண்டு வருகிறார் என்பதை அறிந்தேன்.

மூன்று மாதம் கழித்து அவர் குணமடைந்து விட்டிற்கு வந்துவிட்டார் என்ற செய்தி அறிந்ததும் மதுரைக்கு செல்வதற்கு எனக்கு இருக்கும் பல காரணங்களில் இதுவும் ஒரு முக்கிய காரணமாக அன்றிலிருந்து உருவானது. தொடர்ந்து மதுரைக்கு செல்லும்போது அவரை சந்தித்து உரையாடும்போது அவரின் அனுபவங்களும், அறிவியல் ஆர்வமும், அறிவியல் வழியான சமூக பார்வையும் எனக்கு  பல ஆழமான புரிதல்களையும்  அனுபவங்களையும் ஏற்படுத்தியது. அழகர்சாமி அய்யா அவர்கள் மும்பை, புனே, மகாராஷ்டிரா என பல மாநிலங்களில் பல தொழில்நுட்ப துறைகளில் பணியாற்றி உள்ளார்.  தனது ஆர்வத்திலும், விடமுயற்சியிலும் புதிதாக வரும் தொழில்நுட்பத்தை கற்றுக்கொள்வார், ஒரு கூலி தொழிலாளியான உங்களுக்கு பொறியாளர் வேலை சரிப்பட்டுவராது என்று புறம் தள்ளிய தனது மேலாளர்களை தனது கடின உழைப்பால் கற்று கொண்ட அறிவியலை வைத்து புறம் தள்ளினார். அறிவியலின் அடிப்படையை செயல் வடிவத்திலும், தத்துவத்திலும் உறுதியாக இவர் இருந்ததே இதற்கு காரணம். அறிவியலின் அடிப்படையிலும், தத்துவத்திலும் (basic law and principle)  அவர் உறுதியாக இருந்ததற்கான காரணம் கற்றல் மீது உள்ள ஆர்வமும், தொடர் புத்தக வாசிப்பும், செயல்முறை அனுபவமும்தான். வாழ்வின் ஒரு கட்டத்தில் தனது சொந்த ஊரான மதுரை பக்கம் இருக்கும் மங்கல்வேயு என்ற கிராமத்திற்கு வந்த இவர் தனது அனுபவத்தை வைத்து தொழில் தொடங்க முடிவெடுத்தபோது அவரது வாழ்வில் சில திருப்பங்கள் ஏற்பட்டது பள்ளி மாணவ, மாணவிகள் அறிவியலை மனப்பாடம் செய்ய பழக்க படுத்தப்படுகிறார்கள் என்பதை உணர்ந்து தனது தொழில் செய்யும் என்னத்தை விடுத்து சில அறிவியல் உபகரங்கங்களை தனி மனிதனாக செய்ய தொடங்கினார்  அந்த (SCIENCE KIT) யில் அறிவியலுக்கு அடிப்படையான அணைத்து தத்துவங்களையும் செயல்முறை விளக்கத்தோடு மாணவ, மாணவிகளுக்கு புரியவைப்பதே அவரது எண்ணம் இதற்கு பல நாட்கள் தனது உடலுழைப்பை செலுத்தி தத்துவங்களை எப்படி எளிமையாக செயல்வடிவத்தில் கொண்டு வருவது என்று நன்றாக சிந்தித்து பல நிதி நெருக்கடி இருந்தபோதும் பல்வேறு இடங்களில் கடன்வாங்கி அதை செய்து முடித்தார். இதை ஒரு பள்ளியில் சென்று கொடுத்ததற்கு அவர்களின் பதில் நீங்கள் எந்த MNC யில் இருந்து வருகிறீர்கள்,  எங்களுக்கு இதெல்லாம் வேண்டாம் பணமாக நன்கொடை தாருங்கள் என்று கேட்டு அவரை புறக்கனித்தார்கள்.

 

அவர் தொடர்ந்து பள்ளிகளில்  ஏறி ஏறி இறங்க பள்ளிகள் அவரை புறம் தள்ளின பின்பு ஒரு நாள் அவரின் குடும்ப நண்பர் ஒருவர் அப்பா  எனது பள்ளிக்கு வந்து எடுங்கள் என்று அவரை அழைக்க அவரது பணி அன்றிலிருந்து தொடங்கியது. இதுவரை தமிழ்நாடில் 11 மாவடங்களில்  3 லட்சம் மாணவர்களுக்கு வகுப்பு எடுத்துள்ளார், 50,000 B.Ed படிக்கும் பயிற்சி ஆசிரியர்களுக்கு அறிவியலை எப்படி செயல் முறையில் மாணவர்களுக்கு எடுப்பது என்பதை பற்றி பயிற்சி எடுத்துள்ளார், BRT(Block Resource Teacher Education) and DIET(District Institute of Educational Training) இல் மாநிலம் முழுவதும் உள்ள அறிவியல் பேராசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி கொடுத்துள்ளார். பல பள்ளிகளில் குழந்தைகளை அறிவியலில் சிறந்தவராக வழிநடத்தி  மாநிலத்தில் முதல் இடத்தை பிடிக்க வைத்துள்ளார்.  தொடர்ந்து மாணவ, மாணவிகளுக்கு அறிவியலை செயல் வடிவிலும், அடிப்படை புரிதலையும் புரிந்து செழுமையாக்க அவர்களுக்கு பயிற்சி கொடுப்பதும், அவர்களுக்கு பாடம் நடத்தும் அறிவியல் ஆசிரியர்கள், பேராசிரியர்களுக்கு பயற்சி கொடுப்பதை தனது பணியாக செய்து கொண்டு இருகின்றார். ஒருமுறை DIET இல் பல பேராசிரியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் இவர் பயிற்சி கொடுத்து முடித்த பின்பு DIET தலைவர் இவரிடம் தனியாக இங்கு இருக்கும் ஆசிரியர்கள் அனைவரும் M.Sc, M. Phil, Ph.d என பெரிய படிப்பு படித்தவர்கள் நீங்களோ எந்த கல்வி தகுதியும் இல்லாதவர் எப்படி இவர்களுக்கு பாடம் எடுக்கலாம் அது தவறு இனி அப்படி எடுக்க கூடாது என்று கூறிவிட்டு சென்றார், அந்த பயிலரங்கு முடியும்போது அணைத்து ஆசிரியர்களும் இவரின் வகுப்பை பற்றி மேடையில் பேச தாங்க முடியாத அந்த இயக்க தலைவர் எல்லாம் இவர் அருமையாக எடுத்தார் என்று கூருகிரீர்கள் அப்போது உங்களுக்கு எதுவும் தெரியாத என்று கடிந்துள்ளார், இப்படி அவர் செல்லும் இடத்தில் உயர் இடத்தில் இருப்பவர்கள் இவரை ஒதுக்கிக்கொண்டுதான் இருன்கின்றார்கள் அதனை கடந்து இவர் தொடர் நடைபோட்டு கொண்டுதான் இருகின்றார். இவரிடம் இருக்கும் தகுதி அறிவு மட்டுமே ஆனால் அவர்கள் எதிர்பார்ப்பது வேறு தகுதி, இப்படி ஒரு ஆசிரியர்கள் இருக்க இவரின் முக்கியதுவத்தை உணர்ந்த ஆசிரியர்கள் கல்வி துறையில் இருப்பதால்தான் இவரால் தொடர்ந்து பயணம் செய்ய முடிந்தது.  பெரும் விபத்திலிருந்து மீண்டு வந்த அவரால் பழைய வாழ்கைக்கு திரும்ப முடியவில்லை ஒரு கையின் செயல்திறன் குறைந்தது அப்பொதும் அவர் தொடர்ந்து மாணவர்களுக்கு அறிவியல் சாதனங்களை செய்துகொண்டே இருப்பதை கண்டு வியப்பளிகின்றது.

பல அறிவியாளர்களின் கதைகளை புத்தகங்கள் வாயிலாகவே படித்துள்ளேன் நான் வாழும் காலத்தில் இப்படி ஒரு அறிவியலாரை  பார்த்ததும், உரையாடியதும், இனி தொடர்ந்து உரையடபோவதும் மகிழ்ச்சியளிகின்றது. ஒவ்வொரு கண்டுபிடிப்புகளும் அதற்கு பின்னால் உள்ள வரலாறும், அதை கண்டுபிடிந்த விஞ்சானிகளின் வாழ்க்கை வரலாறும் வகுப்பில் இவர் எடுப்பதே இவரின் தனித்துவம் அறிவியல் பேராசிரியர்கள் அனைவரும் இவரிடம் கேட்கும் கேள்வி “அய்யா நீங்கள் எந்த புத்தகத்தைதான் படிப்பீர்கள் இவ்வளவு தகவல்களை பெற”. இவர் எப்பொதும் கூறும் வசனம் “வாழ்வில் நாம் எப்போது மாணவனாக இருக்க அப்போதுதான் கற்றுகொண்டே இருக்க முடியும் எனக்கு எல்லாம் தெரியும் என்ற நிலைப்பாடு நமது மனது எப்போது எடுகின்றதோ அதிலிருந்து நமது முன்னேற்றம் நின்றுவிடும்”. அறிவியலின் முக்கியதுவத்தை உணர்தவர்கள் இவரின் சமூக பணியை உணர்வார்கள். இப்போதும் மதுரையில் தனகன்குலத்தில்  அவரின் அறிவியலின் தேடல்கள் புத்தக வாசிப்பின் வழியாக  தொடர்ந்து கொண்டே இருகின்றது. பசுமை நடைக்கு செல்லும் நண்பர்கள் திரு. முத்துகிருஷ்ணன் அய்யா அவர்களின் விட்டிற்கு சென்றால் அழகர்சாமி அய்யாவை பார்க்கலாம், முக்கியமாக குழந்தைகளை அவரிடம் அழைத்து சென்றால் வருங்கால விஞ்சானிகளை நாம் பார்க்கலாம். பசுமைநடை அ. முத்துகிருஷ்ணன் அவர்களின் தந்தை தான் அழகர்சாமி அய்யா, பசுமைநடை எனக்கு கொடுத்த பல அனுபவங்களின் இவரின் அறிமுகம் எனது வாழ்வின் மிக முக்கியமான ஒன்று.

IMG-20160501-WA0017

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s