பூங்கொடியின் பசுமைநடை பயணம்

விடியற்காலை நான்கு மணிக்கு அலாரம் அடித்ததும் சட்டேன்று முழித்துகொண்ட பூங்கொடி அவளின் அம்மாவையும் எழுப்பி விரைவாக கிளம்புங்கள் என்று உத்தரவு கொடுத்து குளிக்கச்சென்றால்….. இந்த ஞாயிறுக்காக இரண்டு வாரங்கள் காத்துகொண்டு இருந்த அவளின் ஆர்வத்தை அவளது அம்மா புரிந்துகொண்டு தனது மகளோடு சேர்ந்து விரைவாக கிளம்பினார்.13603264_1067338730003408_4788806282042238616_o13592378_10206831558243709_7187775879671525297_n

பூங்கொடியின் நினைவுகள் மகிழ்ச்சியில் திளைத்தது இரண்டுமாதம் கழித்து பார்க்கபோகும் தனது நண்பர்கள், அக்காக்கள், அண்ணாக்கள் என்று ஒரு பெரிய கூட்டத்தை பார்க்கப்போகும் மகிழ்ச்சி நீண்ட தொலைவில் பயணம் செய்யபோகும் ஆர்வம் என அவளின் மகிழ்ச்சி ஆர்வதிற்கான காரணங்கள் எல்லைகள் கடந்து சென்றது. ஐந்து மணிக்கு பேருந்து நிலையத்திற்கு வந்து பேருந்துதை பிடித்தால் மட்டுமே ஆறுமணிக்கு தெப்பகுளம் பொய் சேரமுடியும் என்பதை நன்கு உணர்ந்த பூங்கொடி அம்மாவை பேருந்துநிலையத்திற்கு அவசரப்டுதினால். தாயும் மகளும் தெப்பகுளத்திற்கு செல்ல பேருந்து ஏறினார்கள்.

பேருந்தில் ஜன்னலோரம் அமர்ந்துகொண்டாள் பூங்கொடி பேருந்து தெப்பக்குளத்தை நோக்கி விரைந்து, பூங்கொடியின் நினைவுகள் இதுவரை சென்ற நடைகளை நோக்கி பயணித்தது, ஒவ்வொரு நடையிலும் தான் கண்ட மலைகள், வயல்கள், காடுகள் என்று அவளின் நினைவுகள் அதனை சுற்றி சுற்றி வந்து அவளது மகிழ்ச்சியை அதிகரித்தது.  பல நேரங்களில் நடையில் கூறும் வரலாறுகளை கவனிக்க முயற்சி செய்வாள் அவளுக்கு ஒன்றும் விளங்காது அதனால் அவள் அந்த பேச்சுகளை கவனிப்பது இல்லை, அவளின் அம்மா அந்த வரலாற்று தகவல்களை உன்னிப்பாக கவனித்து தனது மகளுக்கு நேரம் கிடைக்கும்போது கதையாக கூறுவார் தனது அம்மாவின் வழியே கேட்கும்போது அவளுக்கு ஒரு கற்பனை வடிவாக அந்த வரலாறுகள் மனதில் பதிந்துபோகும்.13529025_10206831735328136_3806409869970921775_n

பூங்கொடி பெரும்பாலும் நடையை விரும்ப மிக முக்கிய காரணம் மலைகள், வயல்கள், ஆறுகளை பார்பதற்கும், புதிய நண்பர்களை பார்பதற்கும் தான். அவளது தாய் விரும்ப முக்கிய காரணம் எப்போதும் வீடு, கோவில், வேலை என்று சுழற்சியாக சுழன்றுகொண்டு இருக்கும் வட்டத்தில் இருந்து வெளியே வந்து தனது சுதந்திரத்தை அனுபவிப்பதற்கும் தன் மகளுக்கு இப்போதிருந்தே அந்த சுதந்திரத்தை கொடுக்கவும்தான்.

அம்மா எப்போ தெப்பகுளம் போய் சேருவோம் என்று பூங்கொடி கேட்க…..இன்னும் பதினைந்து நிமிடத்தில் நாம் பொய் சேர்ந்து விடுவோம் என்று அவளது அம்மா குறினார்…….இம்முறை பூங்கொடிக்கு அதிக ஆர்வம் வர காரணம் அவள் அம்மா பூங்கொடியிடம் நடையை பற்றி கூறிய விவரம்தான். இரண்டுவாரத்திற்கு முன்பு மாலை நேரம் பள்ளி பாடம் வரலாறு படித்துகொண்டு இருக்கும்போது அவள் அம்மாவிடம்……… இந்த முறை எந்த இடத்திற்கு அம்மா பசுமைநடை குழு அனைவரையும் அழைத்து செல்கிறார்கள் என்று கேட்டபோது……கீழடிக்கு செல்கிறார்கள் என்ற பதில் அம்மாவிடம் இருந்து வந்தது …….அங்கே என்ன இருக்கு மலையா? காடுகளா? என ஆர்வத்தோடு பூங்கொடி மீண்டும் கேள்விகளை கேட்க ……அங்கே அகழ்வாராய்ச்சி செய்றாங்க என்று பதில் கூறினார் அவளின்……அப்படினா என்ன அம்மா? என்று மீண்டும் கேள்வி கேட்டால் …….உனது புத்தகத்தில் சிந்து நதி, ஹரப்பா, மொகஞ்சதாரோ இடமெல்லாம் படிச்சல்ல அதேமாரி இங்கையும் கண்டுபிடிச்சுருகாங்க அத விட மிக பழைய இடமாம்  என்று அம்மாவிடம் இருந்து பதில் வந்தது. அந்த தகவலை அறிந்தவுடன் பூங்கொடிக்கு ஆர்வம் அதிகரித்தது  பாட புத்தகத்தில் படித்த விடயம் போலவே நேரில் நாம் பார்க்கப்போகிறோம் என்ற ஆர்வம் அவளை ஆட்கொண்டது. பேருந்து தெப்பகுளம் சேர்ந்தது, பூங்கொடியும் அவளது அம்மாவும் பசுமை நடை குழு இருக்கும் இடத்திற்கு அருகே சென்றனர்.

13592378_10206831558243709_7187775879671525297_n13516463_10206831732488065_302092341251221293_n

மக்கள் ஆங்காங்கே சிதறி சிதறி இருந்தனர் பூங்கொடி தனது நண்பர்களை, எதிர்பார்த்துக்கொண்டு இருந்தாள், மக்கள் மெதுவாக வர தொடங்கினார்கள் ஒருவரை ஒருவர் நலம் விசாரிக்க தொடங்கினார்கள், பூங்கொடியும் தனக்கு தெரிந்தவர்களை நலம் விசாரித்து கொண்டு இருந்தாள். பூங்கொடியின் அம்மாவின் தோழிகள் வரவே அம்மா அவர்களிடம் மகிழ்ச்சியாக பேச தொடங்கினார், சிறிது நேரம் கழித்து அவளின் நண்பர்கள், தோழிகள் வரவே பூங்கொடியும் அவர்களோடு கலந்துகொண்டாள்.  ஒரு திருவிழாவை போல் காட்சியளித்தது  தெப்பகுளம் பசுமைநடை மக்களின் கூட்டம் அதிகரித்தது பயணத்திற்கு அனைவரும் தயாரானார்கள். பூங்கொடியின் அம்மா தனது தோழிகளுடன் ஒரு வாகனத்தில் ஏறிக்கொள்ள பூங்கொடி தனது தோழியின் வாகனத்தில் ஏறிக்கொண்டால். முதலில் இருச்சகர வாகனங்களை நிறுத்தினார்கள் பின் நான்கு சக்கர வாகனத்தை நிறுத்தினார்கள், கீழடி நோக்கிய பயணம் தொடங்கியது. பூங்கொடிக்கு எல்லையற்ற மகிழ்ச்சி இந்த பயணத்திற்காக ஒவ்வொரு மாதமும் பசுமைநடைக்கு காத்துக்கொண்டு இருப்பாள், இப்படியே இந்த பயணம் நீண்டுகொண்டே சென்றால் மகிழ்ச்சியாக இருக்கும் என்று ஒவ்வொரு நடையின் பயணத்திலும் அவள் நினைப்பதுண்டு. எதற்காக இந்த பயணம் நமக்கு பிடிகின்றது என்று அவளுக்கு தெரியவில்லை அந்த பதிலை அவள் தேடியதில்லை ஆனால் ஒன்று மட்டும் புரிந்தது பயணம் ஏதோ ஒரு மகிழ்ச்சியை தருகிறது என்று அதுவும் கூட்டமாக செய்யும் பயணம் அளவுக்கடந்த மகிழ்ச்சியை தருகின்றது என்பது புரிந்தது. ஒரு பெரும் படை கீழடி நோக்கி நகர்ந்து கொண்டு இருந்தது.13576662_10205272899817097_4718367644658391143_o

பல எதிர்பார்புகள், பல கேள்விகள், பல உணர்வுகள் என்று பூங்கொடியின் மனது மகிழ்ச்சியிலும் ஆர்வத்திலும் தத்தளித்து கொண்டு இருக்க கீழடி வந்து சேர்ந்தது பசுமைநடை. மிக உயர்ந்த தென்னை மரங்களை பிரமாண்டமாக பார்த்துக்கொண்டே பசுமைநடை குழுவுடன் நடந்துகொண்டு இருந்த பூங்கொடி, ஒரு இடத்தில் அனைவரும் அமர முதல் வரிசையில் பொய் அமர்ந்துகொண்டாள் சிறப்பு விருதினர்களாக வந்து இருப்பவர்களின் உறைகளை கேட்க.

13559108_1067401189997162_1012797392660334232_o

கீழடி அகழ்வாராய்ச்சி பற்றி பேச தொடங்கினார்கள் சில விடயம் பூங்கொடி மனதில் நின்றது, பல விடயம் காற்றில் பறந்து போனது ஆனால் ஒன்று மட்டும் அவளுக்கு புரிந்தது இந்த இடம் ஒரு முக்கியமான இடம் இதனின் வரலாறு மிகவும் பழமையானது என்று, அந்த பள்ளங்களை உற்று பார்த்துகொண்டு இருந்த பூங்கொடி அந்த பள்ளங்கள் அனைத்தும் தூரிகை வைத்து தான் பொறுமையாக சுரண்டினார்கள் என்பதை கேட்டபிறகு அவர்களின் உழைப்பை கண்டு வியந்து போனாள். உரை முடிந்து அனைவரும் வேறு ஒரு இடத்திற்கு நகர்ந்து சென்றார்கள் அப்போது பூங்கொடியின் மனது அவர்களின் உரையில் புரிந்துகொண்ட சில விடயங்களை பற்றி அம்மாவிடம் கேள்வி எழுப்பினால்…அம்மா இனிமேல் இந்த தகவல்கள் அனைத்தும் எனது வரலாறு பாட புத்தகத்தில் இடம்பெறுமா? அப்படி வந்தால் அந்த பாடத்தில் நான் நிறையை மதிப்பெண் எடுப்பேன்….அவளின் அம்மா சிரித்துகொண்டே இந்த தகவல்கள் அனைத்தும் பாட புத்தகத்தில் வரவேண்டும் என்றால் அதற்கு நாம் அதிகம் போராட வேண்டும் என்றார்….என்ன போராட்டம் அம்மா என்று பூங்கொடி கேட்க…..நீ வளர வளர அதற்கு பின் இருக்கும் அரசியலை கற்றுகொள்வாய் நாம் இதை பற்றி வீட்டில் அடிக்கடி இனிமேல் விவாதிப்போம் என்று கூறினால். கூட்டம் அடுத்த இடத்தை நோக்கி நகர்ந்தது.

13528136_10205272900177106_5584056510781218581_o

ஒவ்வொரு பள்ளத்தில் இருக்கும் வரலாறை பற்றி வரலாற்றாசிரியர் விளக்கிக்கொண்டே இருக்க பூங்கொடி அதை உன்னிப்பாக கவனித்தால், அம்மக்கள் உபயோகித்த பொருட்கள், வீடு அமைப்பு முறை, கழிவு நீர் மேலாண்மை அனைத்தை பற்றியும் அவர் விளக்கினார் பூங்கொடிக்கு அனைத்து விடயங்களும் மனதில் பதிந்தது. அவளின் மனதிலோ நமது கல்விமுறையும் இப்படியே இருந்தால் நன்றாக இருக்குமே இப்பொது எல்லா விடயங்களும் மனதில் பதிந்து விட்டன. இதை அனைத்தையும் நான்கு சுவற்றிக்குள் வைத்து ஒரு காகிதத்தில் இருக்கும் புகைப்படங்களை பார்த்து ஆசிரியர் பாடம் நடத்துவது நினைத்தால் மிகவும் கடினமாக இருகின்றது என்று எண்ணினால். இப்படிபட்ட ஒரு திறந்த வகுப்பறை எப்போது நமக்கு வரும் என்ற கேள்வி அவளிடம் ஆழமாக வேரூன்றி இருந்தது   பசுமைநடை வந்ததில் இருந்து.

13483121_1067339716669976_6288713615309587709_o

பின்பு அனைவரும் ஒரு இடத்தில் அமர்ந்தார்கள் அகழ்வாராய்ச்சி பணியில் இருந்த ஊழியர்கள் அவர்களுக்கு அகழ்வாய்வில் கிடைத்த அம்மக்கள் உபயோகித்த அணிகலன்கள், கருவிகள் போன்றவற்றை பசுமைநடை குழுவிற்கு விளக்கிக்கொண்டு இருந்தனர். அவர்கள் உரை முடிந்தபின்பு அனைவர்க்கும் ஆயிஷா என்ற புத்தகம் பசுமை நடைக்கு வந்த மக்கள் அனைவர்க்கும் விநியோகிக்கப்பட்டது, அது என்ன புத்தகம் அம்மா என்று பூங்கொடி அம்மாவிடம் கேட்க உன்னை போல் ஒரு பள்ளி சிறுமியின் கதை அணைத்து பெற்றோர்களும், ஆசிரியர்களும் படிக்கவேண்டிய புத்தகம் இது என்று கூறினார். சரி அம்மா இந்த கதையை வீட்டில் எனக்கு கூறுங்கள் என்று கூறிவிட்டு காலை உணவை முடித்துவிட்டு அந்த அகழ்வாராய்ச்சி பள்ளங்கள் அருகே சென்றால் பூங்கொடி.

13606433_10206831726807923_5897864039060033187_n

பூங்கொடி ஒரு ஓட்டை எடுத்து பார்த்துக்கொண்டே இருந்தால் அந்த அமைதியான சூழலில், காற்றின் சப்தமும் பறவைகளின் சப்தமும் கேட்டுகொண்டு இருக்க  அந்த சிறிய ஓடு அவளுக்கு ஏதோ ஒன்றை சொல்ல முயற்சிப்பது போல் அவளுக்கு தெரிந்தது, இதே ஓட்டை இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு நம்மை போன்ற ஒரு பெண் இந்த ஓடுகளை வைத்து விளையாடிக்கொண்டு இருந்திருப்பாள் இப்பொது இவ்வளவு ஆண்டுகள் கழித்து இந்த ஓடு எனது கையில் கிடைத்துள்ளது. அந்த பெண் எப்படி இருந்திருப்பாள் என்ன உடை அணிதிருப்பாள், என்னை போல் எட்டாம் வகுப்பு படித்துகொண்டு இருந்திருப்பாலா, அந்த காலத்தில் கல்வி முறை எப்படி இருந்திருக்கும்? அவள் இந்த ஓடு பல வருடங்கள் கழித்து யாரிடமாவது கிடைத்திருக்கும் என நினைத்திருப்பாளோ? என கேள்விகள் அவள் மனதில்   எழத்தொடங்கின…..பூங்கொடி……என்ற சப்தம் கேட்க உடனே நினைவுகள் நொடிநேரத்தில் பல வருடங்கள் கடந்து இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தது. அவளின் அம்மா அவளை அழைத்தாள் அந்த இடத்தை விட்டு கிளம்புவதற்கான நேரம் வந்து விடத்தை அறிந்த பூங்கொடி சிதறிக்கிடந்த ஒரு ஓட்டை எடுத்துக்கொண்டு சென்றால்.   பல சிறுவர்கள் சிறுமிகள் தண்ணீரிலும், மணலிலும் சுதந்திரமாக  விளையாடிக்கொண்டு இருந்தார்கள் அவர்களை ரசித்துகொண்டே அந்த இடத்தை விட்டு அம்மாவுடன் நகர்ந்தாள் பூங்கொடி பல நினைவுகளுடன், தகவல்களுடன்.

13568979_1067403543330260_7592559849729172394_o

ஒவ்வொரு நடையிலும் பூங்கொடி பசுமைநடைக்கு வருகிறாள் தனது அம்மாவுடன், பல குழந்தைகளின் வழியே அவளை பார்க்கலாம். பெண்களின் முன்னேற்றத்தை வைத்து தான் ஒரு சமூகத்தின் வளர்ச்சியை கணக்கிடுவேன் என்ற அம்பேத்கரின் வார்த்தைகள் எவ்வளவு உண்மை அடைங்கியது. பெண்கள், குழந்தைகள் ஒரு சமூக இயக்கத்திற்கு தொடர்ந்து வரவைக்கும் பணியை பசுமை நடை சாத்திய படுத்திக்கொண்டே இருகின்றது. பூங்கோடிகளின் உணர்வுகளையும், ஆர்வங்களையும், அவளின் தாய் வழியாக அவள் கற்றுகொள்ளும் அரசியல், சமூக விழிபுனர்வுகளும் தொடர்ந்து ஊக்குவிக்கும் பொறுப்பும், அந்த வாய்ப்புகளை ஏற்படுத்தும் பொறுப்பு அனைவருக்கும் உள்ளது.

I measure the progress of a community by the degree of progress which women have achieved-Dr. B.R. Ambedkar

13567215_10206831736328161_8785141934023722146_n

 

P.C: பாடுவாசி ரகுநாத் மற்றும் மாரியப்பன் கோவிந்தன்

3 thoughts on “பூங்கொடியின் பசுமைநடை பயணம்

  1. ஒரு செயல்பாட்டின் வழியே பலவிதமான எழுத்துக்கள் முகிழ்த்து வருவது எத்தனை மகிழ்ச்சியை தருகிறது.. மீண்டும் ஒரு முறை வாழ்த்துக்கள் சதீஷ்

    Like

  2. கருத்தாழமிக்க கதை/கட்டுரை… மாற்று முயற்சிக்கு வாழ்த்துக்கள்… தொடர்ந்து எழுது… அதை விட அதிகமாக படி… ஒரு வரி எழுத நூறு வரிகள் படி… கொஞ்சம் சந்திப்பிழை, ஒற்றுப்பிழை, எழுத்துப்பிழை உள்ளது… படிக்க படிக்க, எழுத எழுத அந்த லாவகம் பிடிபட்டுவிடும்… மற்றபடி இது நேர்மையான எழுத்து…

    Liked by 1 person

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s