விவாதம்-THE DEBATE-1

The aim of argument, or of discussion, should not be victory, but progress-Joseph Joubert

விவாதம் என்பது கருத்துபரிமாற்றத்தின் வழியே புதிய கருத்துகளை தெரிந்துகொள்ள, மனிதர்களின் மனநிலை உணர, சமூகத்தின் மனசாட்சியை புரிந்துகொள்ள உதவும் ஒரு அற்புதமான கலையாக மட்டுமே நான் பார்கிறேன். அவரவர் கொண்ட கருத்துக்களை வலுகட்டயமாக விவாதத்தில் திணிப்பது விவாதமாக நான் பார்கவில்லை வன்முறையாக மட்டுமே பார்க்கின்றேன், இதில் எந்த அறிவுபரிமாற்றம் நடப்பபதாக தெரியவில்லை தனது அதிகாரத்தை தனது கருத்தியலை நிறுவுவதற்கு செலுத்தும் முயற்சியாகவே கருதுகிறேன். இயக்கத்திற்குள் நடக்கும் விவாதங்கள் அந்த இயக்கத்தின் அடிப்படை இலட்சியத்தை அடைவதற்காக ஜனநாயக வழிகளை நமக்கு காண்பிக்கும் விவாதமாக இருப்பதுதான் ஒரு ஆரோக்யமான விவாதம் என்பது எனது கருத்து. ஒரு கருத்திற்கு மாற்றாக இன்னொரு கருத்தை வைக்கும்போது அது எப்படி தனிமனித தாக்குதல் எனப்படும் என்பதுதான் புரியவில்லை, அதாவது கருத்து ஒரு மனிதரிடம் இருந்து வருகிறது அந்த கருத்திற்கு மாற்றாக ஒன்னொரு கருத்து கூறப்டுகிறது உடனே யாரையும் தனிப்பட்ட முறையில் கூற வேண்டாம் என்ற வாதம் முன்வைக்க படுகின்றது. மாற்றுகருத்தை நான் ஆதரிக்கிறேன் அதனின் வழியேதான் நமது தேடலை விரிவுபடுத்த முடியும் என்று கூறிவிட்டு மாற்று கருத்து கூறினால் தனிமனித தாக்குதல் வேண்டாம் என்ற உபதேசம் மட்டுமே வருகிறது.

சரி தனிமனித தாக்குதல் என்பது என்ன? ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையை, சாதியை, மதத்தை, நிறத்தை, மொழியை, பாலை, வர்க்கத்தை,காதலை, குடும்பத்தை  இழிவுபடுத்தும்படி பேசுவதுதான் தனிமனித தாக்குதல் என்று நான் புரிந்துவைத்துள்ளேன் அதேபோல் அவரின் கருத்துதவறு, நீங்கள் சரியில்லை, உங்களுக்கு இது செய்ய தெரியவில்லை என்று ஒரு நபரின் தனிப்பட்ட எழுத்தை, கருத்தை எதற்கும் லாய்க்கு இல்லை என்று அவமதிப்பது தனிமனித தாக்குதல் என்பது எனது கருத்து. ஆகவே ஒரு கருத்தை ஆதரிக்காமல் அந்த கருத்திற்கு மாற்றுகருத்து வைத்தால் எப்படி அது தனிமனித தாக்குதல் எனப்படும்? கருத்து என்ற பெயரில் மு செய்யும் வேலையை விமர்சனம் செய்வதும், செய்தவர்களின் வேலையை சரியில்லை என்ற தோணியில் வார்த்தைகளை, வாக்கியத்தை பயன்படுத்திவிட்டு நாங்கள் கருத்தைதான் கூறினோம் என்பதும், அதற்கான மறுப்பை தெரிவித்து வேலை செய்தவர்கள் மீது தாக்குதல் வந்ததை கண்டித்து இது ஜனநாயகவழியல்ல என்பதை கூறினால் நீங்கள் தனிமனித தாக்குதல் தொடுக்கின்றீர்கள் என்று நம்மீது அம்புகளை பாய்ச்சுவதும் எப்படி எடுத்துகொள்வது என்பது புரியவில்லை.

நாம் அனைவரும் ஒரே நோக்கதிற்காக வருகின்றோம் நமக்குள் சில சமரசம் செய்துகொள்ளவேண்டும் என்று கூறும் கருத்து நிச்சயமாக ஏற்றுகொள்ளபடவேண்டிய ஒரு விடயம், நிச்சயம் எனக்கு அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் சமரசம் செய்யும் விடயம் இயக்கத்தின் லட்சியத்தை அடைவதற்கான வழியை காட்டுகிறதா என்பதுதான் மிக முக்கியமான கேள்வி. கருத்துகள் யாவும் இயக்கத்தின் லட்சியத்தை அழிக்கும் அபாயம் இருப்பதை கண்டு எப்படி சமரசம் செய்துகொள்வது என்பது தான் முக்கிய கேள்வி.

மாற்றுகருத்தை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை இயக்கத்தில் இருப்பவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்குபதில் மாற்றுகருத்தை வைக்கவேண்டாம் அதனால் அனைவரின் மனது புண்படுகிறது என்று மாற்றுகருத்து வைப்பவர்களை நோக்கி உபதேசம் மட்டுமே வருவது என்ன வைகையான விவாதம் என்று புரியவில்லை. தனிப்பட்ட முறையில் அணைத்து மாற்றுகருத்துக்களும் ஏற்கப்படும், ஆனால் இயக்கம் என்று வரும்போது ஒற்றைகருத்துதான் ஏற்றுக்கொள்ளபடும் என்பதுதான் புரிந்துகொள்ள முடிகிறது, இந்த போக்கு அணைத்து இயக்கங்களுக்கும் பொருந்தும் என்றே கருதுகிறேன். ஒவ்வொரு இயக்கமும் கருத்தியல் வழியேதான் பயணம்செய்துகொண்டு இருகின்றது, விவாதங்கள்தான் இயக்கத்தை உயிரோடு வைத்துகொண்டு இருக்கின்றன.

விவாதம் வெறும் கருத்துபரிமாற்றம், அறிவு பரிமாற்றம் மட்டுமல்ல…விவாதங்கள் வழியே தான் புரட்சிகள் உருவானது, அறிவியல் புரட்சி, சமூக நீதி புரட்சி, அரசியல் புரட்சி என அணைத்து விவாதங்களின் வழியே உருவானது, விவாதத்தை நசுக்குவதினாலேயே ஒடுக்குமுறைக்கு எதிரான புரட்சிகள் ஏற்பட்டுள்ளது—தொடரும்debate-e1442847853181

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s