அழகிய மலை அதன் அடியில் தாமரை குளம் பக்கத்தில் ஒரு ஆலமரம் அங்கு நடக்க போகும் பாறை திருவிழாவை எதிர்நோக்கி ஒரு மாதம் கழிந்து திருவிழாவிற்கு இரண்டு நாட்கள் முன் கல்லூரி வேலைகளை தள்ளி வைத்துவிட்டு மதுரைக்கு சென்று கொண்டு இருந்தேன் சென்னையில் இருந்து. இதுவரை சென்ற பசுமைநடை பயணங்கள் அனுபவமும் கடந்த முறை விருச்சதிருவிழாவில் கலந்துக்கொள்ள முடியாத ஏக்கமும் பாறை திருவிழா மீது அதிக ஆர்வத்தை துண்டியது. ஒரு மாதம் முன்பு முத்துகிருஷ்ணன் அய்யா பாறை பற்றி ஒரு வரி கூறினார் “மொழிகள் தோன்றாத காலத்தில் மனிதர்கள் தங்களின் உணர்வுகளை பாறையில் வரைந்து தான் வெளிபடுதினார்கள் நமது வரலாறு அனைத்தும் பாறைகளில் இருந்து தான் பெறப்பட்டன” என்று அதில் இருந்து பாறை திருவிழாவில் ஒரு அறிவியல் வரலாறு இருந்கின்றது என்று புரிந்தது எனது ஆர்வம் மேலும் அதிகரித்தது. ஒருமாதமாக திருவிழாவிற்கு பசுமைநடை நண்பர்களுடன் சேர்ந்து வேலைசெய்ய முடியவில்லை என்ற ஏக்கம் இருந்தாலும் திருவிழாவை பற்றி எனது நண்பர்களிடம் அதிக விழிப்புணர்வு ஏற்படுத்தினேன் மாணவர்களுக்கு பாடம் எடுக்கும் போதும் பாறை பற்றிய விழிப்புணர்வு அதிகம் ஏற்படுத்தினேன். பூமிக்கு அடியில் உள்ள பாறைகள் உடைந்து பிரிந்ததால் தான் பல கண்டங்கள் உருவானது அதில் இருந்து விலங்குகள் மனிதர்கள் என உருவானதிற்கு காரணம் பாறைகள் தான் ஆதி மனிதர்கள் அறிவியலை பாறைகளின் மூலம் தான் வளர்த்தார்கள்.
அவர்களின் கருவிகளும் பாறைகளை வைத்து தான் உருவாக்க பட்டது, இருளில் மலைகளை பார்த்து பயந்த ஆதி கால மனிதர்கள் கடவுளை உருவாக்கி பயத்தை போக்கிகொண்டார்கள் அதனின் பரிணாம வளர்ச்சிதான் பல மதங்களும், கடவுள்களும். இப்படி பாறைகளை வைத்து உருவான இந்த உலகத்தின் வரலாறை நமக்கு தெரியப்படுத்துவதே பாறைகளில் உள்ள கல்வெட்டுகள் தான். இப்படி நமக்கு வரலாறு கற்று கொடுத்த பாறைகளுக்கு விழா கொண்டாடுவது ஒரு வரலாறாகும் என்று நினைத்துகொண்டே இந்த விழாவில் நாமும் கலந்து கொள்ளபோகிறோம் என்ற மகிழ்ச்சியில் மதுரை வந்து இறங்கினேன். வேலைகள் அதிகமாக செய்யலாம் என்று எதிர்பார்த்து வந்த எனக்கு ஏமாற்றம் தான் பசுமைநடை குழு நண்பர்கள் அணைத்து வேலைகளையும் அதிவேகமாக முடித்துவிட்டார்கள் ஒருமாத காலத்தில். அவர்களுக்கு உதவி செய்ய அவர்களுடன் இருந்த போது பல அனுபவங்கள் கிடைத்தது. இது முழுக்க இயற்கையை சார்ந்த ஒரு திருவிழா என்பதால் சுற்றுசூழல் பாதுகாக்கும் விதமாக ஒரு நெகிழி கூட பயன்படுத்தவில்லை வழிகாட்டி பலகைகள் அனைத்தும் நண்பர்களின் கை வண்ணத்தாலும் உழைப்பாலும் உருவாக்க பட்டது. சனிக்கிழமை மதியம் திருவிழா நடக்க இருக்கும் இடத்திற்கு சென்றோம், அங்கே மது அண்ணா, வேல்முருகன் அய்யா, சதீஷ் அண்ணா வேலைகளை பார்த்துகொண்டு இருந்தார்கள். அவர்களுடன் சேர்ந்து களத்தில் இறங்க தயாராக சேகர் அண்ணா,அபினாஷ்யும், நானும் தயாரானோம். இதுவரை முகபுத்தகத்தில் மட்டும் பார்த்த அந்த அழகிய மலையை நேரில் பார்த்தது மகிழ்ச்சியின் உச்சிக்கும் கொண்டு சென்றது.
இந்த இடத்தில் நாளை மக்கள் அனைவரும் ஒன்று கூட போகிறார்கள், அறிவு தேடல்கள் அதிகமாகும், பல திறமைகள் ஒன்று சேர்ந்து அதில் இருந்து வெளியே வருவது தான் பரிணாம வளர்ச்சி அப்படித்தான் பல திறமைகள் உள்ள மக்கள் அனைவரும் ஒன்று கூடி அவர்களுது தேடல் அதிகமாகி அதிலிருந்து பல கலைஞ்சர்களை பசுமைநடை உருவாகிக்கொண்டு இருகின்றது. நாளை நடக்க போகும் நிகழ்வுகள் எனது கண்கள் முன் ஓடிக்கொண்டு இருக்கும்போதே ஒரு நல்ல செய்தி வந்தது மக்கள் பணத்தை சுரண்டி உழல் செய்த குற்றத்திற்காக முதல்வருக்கு தண்டனை அளிக்கப்பட்டது அதனால் தமிழ்நாடு முழுவதும் சட்ட ஒழுங்கு சீர் குலைந்தது என்று, அவர் கைது ஆனது மகிழ்ச்சி தந்தாலும் பேருந்துகள் ஓடவில்லை என்ற செய்தி வருத்தத்தை தந்தது. பசுமைநடை குழு நண்பர்கள் உறுதியாக வேலை பார்த்து கொண்டு இருந்தார்கள் எனக்கும் தன்னம்பிக்கை அளித்தார்கள். சமையல் செய்ய சரக்குகளை அனைவரும் இறக்கி வைத்தோம் அப்போதே சட்ட ஒழுங்கு பிரச்சனை மறைந்துபோனது மனதைவிட்டு அடுத்து குளத்தை சுற்றி உள்ள நெகிழி மற்றும் கண்ணாடி கழிவுகளை இரண்டு குழுவாக பிரிந்து சுத்தம் செய்தோம்.
வேலைகள் சற்று முடிந்தபின் அந்த கிராமத்து சிறுவர்களிடம் பேசினேன் அந்த கிராமத்தின் சூழல் அவர்களின் நிலைமைகளை அந்த சிறுவர்களிடம் இருந்து தெரிந்து கொண்டேன் அவர்களிடம் நாளை நடக்க இருக்கும் பாறை திருவிழாவை பற்றி அறிமுகபடுத்தி நாளை வந்து அவசியம் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்தேன்.
நானும் சேகர் அண்ணாவும் மலையில் உள்ள சமண கல்வெட்டுகளை பார்த்தோம் பின்பு மலையில் உச்சியில் ஏறினோம் அங்கு இருந்து மதுரையை பற்றி அவர் விரிவாக கூறினர். ஊருக்குள் அதிக பதற்றம் நாங்கள் அமைதியாக மலை உச்சியில் இருந்து பல நினைவுகளுடன் அன்றைய மாலை பொழுதை கழித்துவிட்டு இறங்கினோம். மீண்டும் வேலை தீ பொறி போல் பறந்தது. இரவு உணவு முடிந்தவுடன் ஒரு குழுவாக சேர்ந்து பாறை திருவிழாவை பாறையில் வடிவமைக்க அருகில் இருந்த சிறிய கற்களை வைத்து வடிவமைத்தோம். அது முடிந்தவுடன் இரவு பனிரெண்டு மணிக்கு வேல்முருகன் அய்யா மற்றும் அண்டோனி அய்யா இருவரும் தலைமை தாங்க நாங்கள் அனைவரும் பாறைத்திருவிழாவின் பதாகைகளை வழி முழுவதும் கட்ட சென்றோம். முடித்தவுடன் பொறுமையாக நடந்தது வரும்போது அந்த அழகிய மலையை இரவில் குளிர்ந்த காற்றுடனும் கருகிய மேகத்துடன் பார்த்து ரசித்துக்கொண்டு வந்தேன். மாலை பொழுதில் ஒரு அழகு, இரவில் ஒரு அழகு. நாகரிக வளர்சிக்கு முன் மனிதன் மலைகளை பார்த்து பயந்தான் பின்பு அது எப்போது ரசனையாக மாறியது என்று எனக்குள் பல கேள்விகளை கேட்டுகொண்டே மலையை பார்த்தபடி நகர்ந்தேன் ஆலமரம் கீழ் அனைவரும் கூடினோம். ஷாஜஹான் அய்யா மற்றும் முத்துகிருஷ்ணன் அய்யா இருவரும் வீட்டிற்கு கிளம்பினார்கள் அனைவரும் களைப்பில் மரத்தடியில் உறங்கினார்கள். நான் எதிர்பார்த்த தருணம் வந்தது மதியம் முதலில் அந்த மலையை பார்க்கும்போதே நானும் சேகர் அண்ணா அபினாஷ் மூவரும் முடிவுசெய்தோம் இரவு மலை மீது தான் தூங்க வேண்டும் என்று. வீட்டில் மொட்டை மாடியில் திறந்த வெளியில் உள்ள காற்றை சுவாசித்து உறங்கும்போது ஒரு புத்துணர்ச்சி வரும் ஆனால் அதைவிட அதிக மகிழ்ச்சி மலையில் சென்று உறங்கபோகிறோம் என்பதை நினைக்கும் போது.
நிச்சயமாக இப்படி ஒரு சந்தர்ப்பம் வாழ்கையில் என்றோ ஒரு முறை தான் வரும் என்பது தெரிந்த விடயம் அதை அனுபவித்தே தீர வேண்டும் என்று நாங்கள் மலையில் ஏறி உறங்கினோம். கிழே மதுரையே அமைதியாக உறங்கிக்கொண்டு இருக்கிறது எனது நினைவுகள் இரண்டாயிரம் வருடம் முன்பு சென்றது அருகில் இருந்த சிற்பங்களை பார்த்தவுடன் இதை செதுகியவர் நாம் உறங்கிக்கொண்டு இருக்கின்ற இடத்தில் தான் தங்கி உறங்கி செதுக்கி இருப்பார்கள் அதன் பின் நடந்த வரலாறுகளை நினைத்துகொண்டு இருந்தேன் மீண்டும் மலையில் பாறையை உற்றுநோக்கி பார்த்துகொண்டு இருக்கும்போது பயம் என்ற உணர்வு ஏற்பட்டது. இப்பொது ஆதிகால மனிதன் நினைவிற்கு சென்றுவிட்டேன் மாலை பார்த்து ரசித்த மலை இப்பொது அச்ச உணர்வை தருகிறதே என்று யோசித்தேன் அப்போது ஒரு விடயம் தெளிவு பெற்றது எப்படி ஆதி கால மனிதர்களுக்கு இயற்கையின் மீது அச்ச உணர்வு ஏற்பட்டது அதை வைத்து மதங்கள்,சமயங்கள்,வர்கங்கள் தோன்றின போன்ற நினைவுகள் உள்ளுக்குள் ஓடிக்கொண்டு இருக்கும்போதே முகத்தில் மழைத்துளி நினைவினால் பல நூற்றாண்டுகளுக்கு சென்ற என்னை இந்த நூற்றாண்டிற்கு கொண்டு வந்தார்கள்.
மூவரும் இரண்டாம் நூற்றாண்டு இடத்தின் வரலாறில் இருந்து கிழே இறங்கினோம் பின்பு பதினைந்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோவிலில் படுத்து உறங்கினோம். விடிந்ததும் குளிக்க கிராமத்திற்கு சென்றோம் மீண்டும் காலையில் மலையை ரசித்தபடி சென்றேன். எனது கண்களுக்கு இரண்டு நாட்கள் அந்த மலைதான் கதாநாயகன் போல் காட்சியளித்தது. ஒருமாதமாக எதிர்பார்த்த நாள் வந்தது என்ற மகிழ்ச்சியில் குளித்து விட்டு விழா நடக்கும் இடத்திற்கு சென்றோம் மக்கள் பல தடைகளை தாண்டி வந்து கொண்டே இருந்தார்கள். வெயில் அடிக்கும்போதே பசுமையாக காட்சியளித்த அந்த இடம் மழையின் உதவியால் இன்னும் பசுமையாக காட்சியளித்தது. இது முழுக்க இயற்கை திருவிழா என்பதால் இயற்கைக்கு பசுமைநடை மீது காதல் வந்து விட்டதா என்று தெரியவில்லை மழை பெய்துகொண்டே இருந்தது. மழைக்கு நம்மை பிடித்துவிட்டது என்பது பசுமைநடை குழுவிற்கு புரிந்து விட்டது அதனால் அதனோடு கை கோர்த்து நாங்கள் வேலையை பார்த்துக்கொண்டே இருந்தோம். அந்த மழையில் மலையை பார்த்துக்கொண்டே குளத்தை ரசித்துக்கொண்டு ஆலமரம் அடியில் ஆவி பரக்க காலை உணவு உண்பது பாறை திருவிழாவிற்கு வந்த மக்களுக்கு மட்டுமே கிடைத்த ஒரு பாக்கியம். அனைவரும் மலையில் சென்று வரலாறு தெரிந்து காலை உணவு முடிந்தவுடன் மழையும் நின்றது. இந்த நேரத்தில் பசுமைநடை படை விழாவிற்கான அணைத்து ஏற்பாடுகளையும் செய்து முடித்தது. காலை உணவு முடிந்தவுடன் விழா தொடங்கியது முத்துகிருஷ்ணன் அய்யாவின் உரை ஒரு சிறிய தூறல் போல் ஆரம்பமாகி அடைமழைபோல் அனைவரின் கவனத்தையும் ஒருங்கிணைத்தது. வரலாறை மக்களுக்கு கற்றுகொடுக்கும் பசுமைநடை உருவான வரலாறு தெரிந்தது.
பின்பு பேசிய சாந்தலிங்கம் அய்யா, பாஸ்கரன் அய்யா, ஊர் தலைவர் அவர்களின் உரை பசுமைநடை செய்த பணிகள் வரலாறு போன்ற பல வற்றை புரியவைத்தது அவர்கள் பேசியதை தனி பெரும் கட்டுரையாக எழுதவேண்டும். விழாவில் பேச்சாளர்கள் உரை அனைத்தும் அறிவியல் மற்றும் வரலாற்று தகல்வல்கள் அதனை அனுபவக் கட்டுரையுடன் சேர்க்காமல் தகவல் கட்டுரையுடன் சேர்க்கலாம் என்று நினைக்கிறன். ஒரு பக்கம் அறிவியல் மற்றும் வரலாற்று தகவல் அனைவர்க்கும் சேர்ந்துகொண்டு இருந்தது மறுபுறம் குழந்தைகளுக்கு விளையாட்டு போட்டிகள்,அவர்களுக்கு தனித்திறமை வழங்கும் பயிற்சிகள் நடைபெற்று கொண்டு இருந்தன. அதை அருமையாக பசுமைநடை குழுவினர்கள் ஒருங்கிணைத்து செயல்படுத்திக்கொண்டு இருந்தார்கள். மத்திய உணவு முடித்துவிட்டு குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்த மூன்று நாட்களில் பல விடயம் கற்றுக்கொண்டேன் குறிப்பாக ஒருங்கிணைப்பு, திட்டமிடுதல் போன்றவற்றை அதிகம் கற்றுக்கொண்டேன். கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்டத்தில் ஒருங்கிணைக்கும் போது நாங்கள் செய்த தவறுகள் இங்கு புரிந்தது. திருவிழா முடித்து அனைவரும் கலைந்தார்கள் கடைசியாக அந்த இடத்தை சுத்தம் செய்துவிட்டு சமையல் சாமான்களை வண்டியில் ஏற்றி நாங்களும் கிளம்ப தயாரானோம் நேற்று மாலை இருந்த அதே அமைதி நிலவியது சிறு வித்யாசம் அனைவரின் மனதிலும் பல மகிழ்ச்சி,அனுபவம், நினைவுகள் என்று ஓடிக்கொண்டு இருந்தன. வண்டியில் ஏரி நாங்கள் அந்த இடத்தை விட்டு நகர்ந்தோம் எனது கதாநாயகனை மீண்டும் பார்த்தேன் பல ஆயிரம் நூற்றாண்டுகளாக கம்பிரமாக நின்று கொண்டு பரிணாம வளர்ச்சியின் மூலம் உருவான உயிரினங்களையும் மனிதர்களையும் அவர்களால் உருவான பல வரலாறுகளையும் இன்று நடந்த திருவிழாவையும் அமைதியாக பார்த்துகொண்டு இனி வரப்போகும் வரலாறையும் எதிர்நோக்கி காத்துகொண்டு இருந்தது அந்த மலை. அந்த மலையின் அழகையும் அது எனக்கு ஏற்படுத்திய நினைவுகள் என் மனதில் ஓடிக்கொண்டு இருக்கும்போதே மலை எனது கண்களை விட்டு மறைத்தது……..வேலைகள் முடிந்தவுடன் மதுரையில் இருந்து சென்னை செல்லும்போது மனதில் உள்ள ஒரு கேள்வி அடுத்த நடை எப்போது வரும் என்பதுதான்………………
அற்புதம் தம்பி… தொடர்ந்து எழுதவும்…
LikeLiked by 1 person
thanks sure na
LikeLike
நல்லதோர் பதிவு தம்பி.. இன்னும் கொஞ்சம் சீர்ப்படுத்தினால் மிகவும் சிறப்பாக இருக்கும். எழுத்தையோ கருத்தையோ சொல்லவில்லை. பதிவின் அமைப்பை சொன்னேன். வாழ்த்துக்கள்.
LikeLiked by 1 person
thanks na….sure na will do next time
LikeLiked by 1 person
நல்ல முயற்சி. வாக்கிய அமைப்பிலும், சொற்சேர்கையிலும் அதிக கவனம் தேவை. மற்றபடிக்கு நல்ல கட்டுரை, வாழ்த்துக்கள்
LikeLiked by 1 person